தமிழ் வாசிப்பு உதவி மென்பொருள்

அன்புள்ள ஜெ

நான் சுதர்சன், அமெரிக்காவில் இருக்கிறேன். நான் தமிழில் விரைவாக எழுதவோ பேசவோ பழக்கமில்லாதவன். சென்னையில் வளர்ந்தவன். நான் ஒழிமுறி படம் பார்த்தபின் உங்கள் தளத்தை வாசிக்க ஆரம்பித்தேன்

முதல் இரண்டு ஆண்டுகள் உங்கள் உரைகளைத்தான் கேட்டுக்கொண்டிருந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறம் சிறுகதையை யூடியூபில் இலக்கிய ஒலி இணையதளத்தை நடத்தும் சிவக்குமார் வாசிக்க கேட்டேன். அவர் வாசித்த வடிவில் முதற்கனல் நாவலையும் வாசித்தேன்

ஒரு நூல் தன் வாசகர்களைக் கண்டடையும் என்று நீங்கள் பலமுறை சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் குறிப்புகளில் இருந்து Madhura country manual, Naked ape, Guns,germs and steel போன்ற நூல்களை வாசித்தேன்.

ஆங்கிலத்தில் எழுதுவதற்கு மன்னிக்கவும். ஆனால் உங்களால் தொடங்கப்பட்டுள்ள இலக்கிய இயக்கம் என்னை கவர்கிறது. குருபூர்ணிமா அன்று நீங்கள் நடத்திய ஸூம் சந்திப்பையும் பார்த்தேன். அப்போதுதான் தமிழில் சரளமாக வாசிக்கத்தெரியாதவன் நான் மட்டும அல்ல என்று உணர்ந்தேன். பலர் உறவினர்களுக்காக வாசித்துக் காட்டுவதாகச் சொன்னார்கள்

நான் இக்கடிதத்தை எழுதக் காரணம் இதுவே

1.நான் ஆங்கிலத்தில் வாசிப்பவன், தமிழில் சிந்திப்பவன்

  1. தமிழில் விரைவாக வாசிக்கமுடியாது என்ற குறைபாட்டை மிக எளிதாகக் கடந்தேன்.

https://chrome.google.com/webstore/detail/read-aloud-a-text-to-spee/hdhinadidafjejdhmfkjgnolgimiaplp?hl=en

  1. இது ஒரு எக்ஸ்டென்ஷன். கூகிள் குரோமில் இது நிறுவப்படும். மேலே இருக்கும் இணைப்பைச் சொடுக்கினாலே போது. தமிழ் எழுத்தை தமிழில் வாசித்து காட்டும்.

4 அது இயந்திரத்தனமான வாசிப்பாக இருக்காது. இயல்பான சரளமான வாசிப்பு. அருகே ஒருவர் இருந்து வாசிப்பதுபோல.

இரண்டு ஆண்டுகளாக இதைத்தான் பயன்படுத்தி வெண்முரசை வாசித்துவருகிறேன். மற்றவர்களுக்கும் உதவும் என நினைக்கிறேன்

அன்புடன்

சுதர்சன்

***

முந்தைய கட்டுரைஎழுத்தாளர்களை வழிபடுவது
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16