அறம் வரிசை கதைகள்-கடிதங்கள்

அன்பிற்குரிய ஜெயமோகன்:

வணக்கம்

உங்களுடைய சமீபத்திய பன்னிரெண்டு கதைகளில் ஏழினை வாசித்தேன். மிக அபூர்வமான மனவெழுச்சியினை அவை என்னிடத்தில் ஏற்படுத்தின. உங்களுக்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

அன்புடன்,
எம்.டி.முத்துக்குமாரசாமி

அன்புள்ள எம் டி எம்,

நலம்தானே?

உங்களுடைய பாராட்டு ஒரு பெரிய கௌரவம். நன்றி, மகிழ்ச்சி

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்

தங்கள் எழுத்து வேகம் பிரமிக்க வைக்கிறது.(கீ போர்டு பலகை ஆறுமாதம் தாங்குவதே பெரிது)கால்களாலும் டைப் அடித்தாலும் இவ்வளவு வேகமாகத் தட்டச்சு செய்ய முடியுமா என்று தெரியவில்லை.கையால் எழுதுவதை விட வேகமாகத் தட்டச்சு செய்ய முடிகிறதா?அதிலும் ஆங்கில எழுத்துக்களால் soatrukkaNakku என்று அடிப்பது வேகத்தைக் குறைக்காமல் இருக்கிறதா? பொன்னியின் செல்வனை ஒருவர் (சேர்த்தலை கிருஷ்ணய்யர்?) தினத்தந்தி படிக்கும் நேரத்தில் டைப் அடிப்பீர்கள் போலும்.
தங்களது வாசிப்பும் மிக வேகமானது என்று நினைக்கிறேன்.ஜே.ஜே வைக் கோட்டயம் -திருவனந்தபுரம் ரயில் பயணத்தில் படித்து முடித்தேன் என்று கூறியிருக்கிறீர்கள்.
அடுத்து தினமும் ஒரு நாவல் எழுதப் போவதாக அதிகாரப் பூர்வமற்ற தகவல்கள் வந்து மிரட்டுகின்றனவே உண்மையா?

அன்புடன்
ராமானுஜம்

அன்புள்ள ராமானுஜம்

என்ன பெரிய வேலை? எழுதிவிட்டால் போச்சு.

ஜெ

ப்ரியமுள்ள ஜெமோ,
ஒவ்வொரு “அற” வரிசை சிறுகதைகளைப்படிக்கும்போதும் கடிதம் எழுதுவேன். சொல்லவந்ததை யாராவது (இன்னும்) அழகாக சொல்லியிருப்பார்கள். விட்டுவிடுவேன்.
பொதுவாக பசி,பிணி,சோறு, சோறு…எவ்வளவு பலகீனமானவர்கள் நாம்! ஒரு வேளை உணவு தாமதமானால்கூட, சாதாரணமான காரணம் – Long meeting, தூர ரயில் பயணம், late night விளையாடிவிட்டு வந்தால் – பொறுக்க மாட்டாமல் ஆகிவிடுகிறது. எத்தனை பேர் -ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் ஒரு வேளை உணவு கூட இல்லாமல்…

தின வாழ்க்கையில் சாதாரணமாக எத்தனையோ சம்பவங்களை, மனிதர்களை கடந்து வருகிறோம், உறைப்பதே இல்லை, உங்களைப்போல் யாராவது சொன்னால், எழுதினால் ஒழிய…

என்னால் முடிந்ததெல்லாம் நல்ல கதை படிக்கும் நண்பர்களுக்கு இவைகளை அறிமுகம் செய்வதுதான்.
“ஓலைச்சிலுவைகள்” படிக்கும் போது சொமர்வெல்- பிரமிப்பு ஏற்பட்டது…
மனிதர் வாழ்க்கையில் எத்தனை சிகரங்கள் – முதல் உலகப்போர், எவெரெஸ்ட், மருத்துவம்…Sudden-க தோன்றியது, நூலகத்தில் எடுத்து வந்து ட்ரெயினில் படிக்க ஆரம்பித்த Jefrey Archer’s “Paths of Glory”…இந்த நாவலில் George Mallory தான் ஹீரோ, சொமர்வெல் ஆங்காங்கே வருகிறார்.
மலரி (இர்வினுடன்) 1924-ல் கடைசி தடவையாக எவெரெஸ்ட் அடைய முயற்சிக்கும்போதுகூட இருக்கிறார். (அதற்க்குப்பிறகு மலரி உடல் 1999-ல் தான் கண்டுபிடிக்கப்பட்டது – இன்று வரை அவர் எவரெஸ்டை அடைந்தாரா என்பது விவாதத்திற்கு உரிய விஷயம்தான். மலரி உடமைகளில் அவரது அன்பு மனைவி ரூத்தின் புகைப்படம் இல்லை, அவர் எவரெஸ்ட் சிகரத்தில் விட்டு வந்திருக்கவேண்டும் என்பது ஒரு ஊகம்…இது உண்மையானால் டென்சிங், எட்மண்ட் ஹில்லாரி பெயர்கள் பதிலாக மலரி பெயர்தான் சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கவேண்டும்…பின் அவரது பேரன் 1995-ல் தாத்தா, பாட்டியின் புகைப்படத்தை எவெரெஸ்ட் சிகரத்தில் வைத்தார் – “completing a little outstanding family business”

யோசித்துப்பார்த்தால் என்ன மனிதர்கள் இவர்கள் என்று தோன்றியது…பணக்காரர், பிரித்தானியாவில் மிக அழகான Lake District-ல் வீடு, தொழிற்சாலை… எல்லாவற்றையும் விட்டு விட்டு இப்படி எங்கயோ எல்லா மலைகளின் மேலும் ஏற முயற்சித்து, உலகப்போரில் பங்கேற்று, சம்பந்தமே இல்லாத தட்பவெப்ப நிலை நிலவும் தெற்கு இந்தியாவில் வந்து…
எவெரெஸ்ட்டை அடைய முடியவில்லை, ஆனால் அதை விட பெரிய உயரத்தை அடைந்திருக்கிறார். மலையேறுபவர்களே வித்தியாசமானவர்கள் – உடல் மன வலிமை ரொம்ப அதிகம், தேவை…

பெருவலி பற்றி நேரில் பேச வேண்டும்…என் தந்தை பட்ட, படும் வலி… நான் கால்பந்து விளையாடும் போது கால் முட்டி தசைகள் கிழிந்து சர்ஜரி செய்து குணமாகும் வரை – ஒரு ஆறு மாதங்கள் – இந்த வலியே தாங்க முடியவில்லை…
கோமல் இத்தனை வலியை வைத்துகொண்டு மனிதர் பத்திரிக்கை நடத்திக்கொண்டு இருந்திருக்கிறார்…அதற்கு மேல் தரிசனம்…

நிறைய இருக்கிறது ஜெ பேச நிறைய இருக்கிறது

essex siva

 

உலகம் யாவையும்

கோட்டி

பெருவலி

மெல்லிய நூல்

ஓலைச்சிலுவை

நூறுநாற்காலிகள்

மயில்கழுத்து

 

யானைடாக்டர்

தாயார் பாதம்

வணங்கான்


மத்துறு தயிர்

சோற்றுக்கணக்கு

அறம்

 

முந்தைய கட்டுரைகோதையின் தொட்டிலில்
அடுத்த கட்டுரைதேர்வு, மீண்டும் கடிதங்கள்