அருகே கடல், முதலாமன் -கடிதங்கள்

கதைத் திருவிழா-30, முதலாமன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

முதலாமன் மீண்டும் ஒரு தொன்மப்பாணி சிறுகதை. அந்த நிலம் மீது உரிமை கொண்ட அந்த மாபெரும் பறவை, காட்டை ஆளும் இருட்டின் அடையாளம். அல்லது மலையின் அடையாளம். அல்லது மேகமா? எதுவாக இருந்தாலும் அது விதி. விதி பலிகேட்கும்போது எப்போதுமே மிகச்சிறந்தவர்கள்தான் பலியாகிறார்கள்

முன்பு ஓர் உரையில் சொன்னீர்கள், ஒவ்வொரு சமூகமும் ஒரு காலகட்டத்தில் அவர்களில் சிறந்தவர்களை பலிகொடுத்துத்தான் முன்னால் செல்கிறது என்று. நக்ஸலைட் இயக்கம் பற்றிப் பேசியபோது என நினைக்கிறேன். எல்லா உரிமைப்போராட்டங்களிலும் சாகிறவர்கள் மிகச்சிறந்தவர்கள். உரிமைகளை அடைந்து சுகிப்பவர்கள் கோழைகள், உயிர்தப்பியவர்கள். இந்த விதி என்றைக்கும் உள்ளதுதான்

ஜெயக்குமார்

***

அன்புள்ள ஜெ

முதலாமன் சோர்வூட்டும் ஒரு கதையாக முதலில் தோன்றியது. சாமானியர்கள் தங்களைப்பற்றியே நினைக்கிறார்கள். அவர்களுக்கு ஊர்நலம் பொதுநலம் எனப்தே இல்லை. அவர்களுடைய நலத்தையே எதிர்காலத்தை பார்த்து முடிவெடுக்கமுடிவதில்லை. அவர்கள் அன்றன்று உயிர்வாழமுயல்கிறார்கள், அவ்வளவுதான். அதற்கு எல்லா தகிடுதத்தங்களையும் செய்கிறார்கள்

எல்லா பொதுநல விஷயங்களிலும் முன்னால் நிற்பவர்கள் எவர்? மிகச்சிறந்தவர்கள். அறத்தில் நிற்பவர்கள். இந்தியச் சுதந்திரப்போராட்டமே உதாரணம். அந்த பறவையை அன்றைய ஒடுக்குமுறை என எடுத்துக்கொள்வோம். அதற்கு பலியானவர்கள் சிறந்தவர்கள். எஞ்சியவர்கள் பணிக்கரைப் போன்றவர்கள். அவர்களே அதிகாரத்தை அடைந்தார்கள். இதுதான் வரலாற்றிலே என்றும் நடந்துகொண்டிருக்கிறது.

ஆனால் இன்னொரு கோணத்தில் மானுடம் என்று யோசிக்கும்போது ஒரு உத்வேகமும் உருவாகிறது. மானுடத்தில் இருந்து ஒரு சிறந்த முனை எழுந்து வந்துகொண்டேதானே இருக்கிறது. இந்த சாமானியர்களின் அற்பத்தனமெல்லாம் காளியனுக்குத் தெரியாதா என்ன?

அருண்குமார்

கதைத் திருவிழா-29, அருகே கடல் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

அருகே கடல் கதையை மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அந்த இடத்தை வாசிக்கும்போதுதான் இளைய யாதவரை பீடித்த மூத்தோள் பற்றி நீங்கள் வெண்முரசில் எழுதியது எந்த அனுபவப்பின்புலத்தில் இருந்து வந்தது என்று புரிந்தது. இருட்டை அழுக்கை விரும்பும் மனநிலை. மூத்தவளின் இல்லம் அந்த வீடு. அங்கே எலிகளும் வாழ்கின்றன.

ஆனால் அது ஒரு கூட்டுப்புழுத்தவம். அங்கே துளியின் வழியாக கடல் வந்துகொண்டேதான் இருக்கிறது. தலைகீழ்க்கடலாக இருக்கலாம். ஆனால் வெளியே செல்லவேண்டும் என்ற விழைவாக கடல் இருந்துகொண்டே இருக்கிறது. கடல் எப்போதுமே எந்த இருட்டுக்குள்ளுமே வந்துகொண்டுதான் இருக்கிறது

ஜெயராமன்

***

அன்புள்ள ஜெமோ

அருகே கடல் கதையில் வந்ததுபோன்ற ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்கிறேன். 90களில். வேலைக்காக கர்நாடகத்திற்குப் போய் அங்கே ஒரு சிறு ஊரில் இருந்தேன். சுள்ளியா என்ற ஊர். எதுவுமே ஒத்துக்கொள்ளவில்லை. வேலைநேரம் தவிர மற்றநேரமெல்லாம் இருட்டுக்குள் தனிமையில் இருப்பேன். படிப்பேன். பாட்டுகேட்பேன். கையில் ஒரு சிறிய ரேடியோ. அதில் பாட்டு நிகழ்ச்சிகள் எல்லாம் கேட்பேன்.

நாலு வருடம் அங்கே அப்படி வாழ்ந்தேன். பெரும்பாலும் பிரட்தான் சாப்பாடு. என் அறையெல்லாம் பூசணம்பூத்த பிரட் கிடக்கும். அங்கே மழை ஜாஸ்தி. என் துணிகள் பெட்டி எல்லாமே பூசணம்பூத்திருக்கும் தரையோடு சேர்ந்து மட்கிய சட்டைகள் கிடக்கும்.

ஆனால் இப்போது நினைத்தால் அந்த வாழ்க்கை கிரியேட்டிவானது என்று படுகிறது. நிறைய கற்றுக்கொண்டேன். நிறைய வளர்ந்தேன். ஏனென்றால் அது எனக்குள் நான் மட்டுமே இருக்கும்படியாக வாழ்ந்த வாழ்க்கை. என்னை நானே ரொம்பவும் வளர்த்துக்கொண்டேன். ஒருநாள் வாக்கிங் போகும்போது அருகே இருந்த மலையை பார்த்து திகைத்தேன். அந்த ஞபாகம் அருகே கடல் படிக்கும்போது வந்தது. என் கதையில் அருகே மலை,அவ்வளவுதான்

ராஜ்குமார்

கதைத் திருவிழா-30, முதலாமன் [சிறுகதை]
கதைத் திருவிழா-29, அருகே கடல் [சிறுகதை]
கதைத் திருவிழா-28, புழுக்கச்சோறு [சிறுகதை]
கதைத் திருவிழா-27, நெடுந்தூரம் [சிறுகதை]
கதைத் திருவிழா-26. எரிமருள் [சிறுகதை]
கதைத் திருவிழா-25, மலைவிளிம்பில் [சிறுகதை]
கதைத் திருவிழா-24,அமுதம் [சிறுகதை]
கதைத் திருவிழா-23, தீவண்டி [சிறுகதை]
கதைத் திருவிழா-22, பீடம் [சிறுகதை]
கதைத் திருவிழா-21, சிந்தே [சிறுகதை]
கதைத் திருவிழா-20, சாவி [சிறுகதை]
கதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]
கதைத் திருவிழா-18, கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]
கதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]
கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]
கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]
கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]
கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]
கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]
கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]
கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]
கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]
கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]
கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]
கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]
கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]
கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]
கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]
கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]
கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2
கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்
முந்தைய கட்டுரைதங்கப்புத்தகம், வண்ணம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைதிரிப்பு அரசியலின் முகங்கள்