திராவிட மனு- இரட்டை நாக்குகள்

இந்தக்குறிப்பை மறுபிரசுரம் செய்வது முகநூல் இல்லா வாசகர்களுக்காக. கருத்துக்கள் பொதுவாக முன்வைக்கப்படவேண்டும் என்பதற்காக. இக்குறிப்பில் மேலைநாடுகளுக்கு தலித்துக்கள் எப்படி அறிமுகம் செய்யப்படுகிறார்கள் என்று ஏ.பி.ராஜசேகரன் வருந்துகிறார். நான் இங்கே கேரளத்திற்கு இபிடபிள்யூ போன்ற இதழ்கள் வழியாக தமிழக தலித் வாழ்க்கை இவர்களால் இப்படி திரிக்கப்பட்டு சென்று சேர்வதைப்பற்றி யோசிக்கிறேன். சர்வசாதாரணமாக இவர்களை மேற்கோள் காட்டி தமிழக தலித்துக்கள் பெண்வேட்டையாடுகிறார்கள் என்று பேசுகிறார்கள்.

இப்போதுகூட இக்கட்டுரை பிழையானது, தவறானது, என ஒரு சொல் எழுதியவர்களால் சொல்லப்படவில்லை. அவர்களின் நண்பர்களால் கண்டிக்கப்படவில்லை. சுட்டிக்காட்டியவனை வசைபாடவும் நாங்கள் எவ்வளவு பெரிய ஆய்வாளர்கள் என்று பீற்றிக்கொள்ளவுமே முயல்கிறார்கள்.முன்னரே சுட்டிக்காட்டிய ஆய்வாளர்களை காணாததுபோல என்னை மட்டுமே சுட்டிக்காட்டி இது ஓர் இலக்கியச்சண்டை என சித்தரிக்க முயல்கிறார்கள். இதில் எனக்கு எதிரான கசப்புகொண்டவர்களை அணிதிரட முயல்கிறார்கள். ஒரு பெருங்கூட்டம் அவர்கள் இதுவரைப் பேசிவந்த அத்தனை சமூகநீதி அறங்களையும் கைவிட்டு தனிநபர் காழ்ப்பை அளவுகோலாகக் கொண்டு, கட்சிச்சார்பையே பற்றாகக் கொண்டு இந்த நாஸி ஆவணத்தை ஆதரிக்கத் திரள்கிறது.தமிழ் அறிவுச்சூழல் பற்றிய ஒவ்வாமையே மிகுந்தெழுகிறது.

இங்கே விவாதம் முடிவடையவில்லை நண்பர்களே. இங்குள்ள மனசாட்சியுள்ள அறிவியக்கவாதிகள் தலித் ஆய்வாளர்களுடன் ஒருங்கிணைந்து இந்த ஆபத்தான கட்டுரைகளை சர்வதேச இதழ்களில் இருந்து நீக்கம் செய்ய இவர்களை வற்புறுத்தவேண்டும். [நீக்கம் செய்யமாட்டேன், இவை உண்மைகள் என்பதுதான் ராஜன் குறை எழுதிய கட்டுரையின் சாரம்] இவை மிகமிக நீண்டகால ஆபத்தை உருவாக்குபவை. இந்திய தலித் பற்றிய எல்லா ஆய்வுகளிலும் மேற்கோளாகச் சென்று சேரும் இடத்தில் அவை இருக்கின்றன.

உள்ளூர் இதழ்களிலும் முகநூலிலும் ராஜன் குறை சொல்லும் கருத்துக்களெல்லாம் இங்கே உள்ளவர்களுக்கு அவர் காட்டும் முகம். இக்கட்டுரைதான் உலகமெங்கும் செல்லும் மையத்தில் இருக்கிறது. அங்கே சென்று திருத்தச்சொல்லுங்கள்.

இது எனக்கும் ராஜன் குறைக்கும் இடையேயான பிரச்சினை, நான் பழிதீர்த்துக்கொள்கிறேன் என்றெல்லாம் சில ‘அறிஞர்கள்’ எழுதுகிறார்கள். ராஜன் குறை என்றல்ல, எந்த அறிஞரும் எனக்கோ என்னைப்போன்ற படைப்பிலக்கியவாதிக்கோ தூசளவுக்குக் கூட பொருட்டானவர்கள் அல்ல. இலக்கியம் செயல்படும் தளமே வேறு. நான் இவற்றை கவனத்திற்குக் கொண்டுவந்தது இவை நீதிமன்றங்களை பாதிக்கும் விதத்தை கண்ட அதிர்ச்சியால் மட்டுமே.

ஜெ

***

ஏ.பி.ராஜசேகரன்  AB Rajasekaran முகநூல் குறிப்பு

நான் விட்டுவிடவேண்டும் என்று தான் நினைக்கிறேன் ஆனால் ராஜன்/ஆனந்தி/ஜெயரஞ்சன் ஆகியோரின் நண்பர்கள் எடுக்கும் நேர்மையற்ற நிலைப்பாடுகள் எரிச்சலாக இருக்கிறது. இந்த கட்டுரை EPWவோடு முடிந்துவிடுகிறதா? இந்த கட்டுரைக்கான ஆய்வு ஒரு அமெரிக்க நிறுவனத்தின் பண உதவியுடன் நடத்தப்பட்டது. EPWக்கு ஒரு வெர்ஷனும் பண உதவி செய்த நிறுவத்திற்கு ஒரு வெர்ஷனும் கொடுத்திருக்கிறார்கள். அது EPW கட்டுரையோடு மோசமாக இருக்கிறது (கட்டுரை கமெண்ட்டில்). இந்த பத்தியை பாருங்கள்:

//Besides harassing the upper caste girls, attempts at striking terror in the minds of their opponents seem to be at the core of their (Dalit) violent activities. Although many dalit youth do not consider violence as an important aspect of manhood, they admit that only the violent men are respected and feared and a male is expected to be a violent being. They do not care much what the elders in their own families or in the village would think of their activities. Many of these attributes of the dalit youth are resented by many of the dalit elders. In other words, despite the overall ascendancy of the dalits as a community, it is the dalit youth who have reworked certain male notions of power and have come to represent the new masculinity in the village//

இதில் குறிப்பிட்டிருப்பதை போல 10 சதவீதம் தலித்துகளுக்கு வன்முறையில் நாட்டமிருந்தால் இத்தனை ஆணவ கொலைகள் இங்கு நடந்தேறியிருக்காது. என்றோ இந்த ஆணவ கொலைகள் முடிந்திருக்கும்.

இந்த கட்டுரை EPWவோடு முடிந்துவிடுகிறதா? கூகிலில் அந்த கட்டுரையை தேடுங்கள் உலகம் முழுவதும் எத்தனை கட்டுரைகள், புத்தகங்கள் அந்த கட்டுரையை மேற்கோள் காட்டுகிறது என்று தெரியும். பல இந்திய பல்கலைக்கழகங்களில் Masculinity படிப்பவர்களுக்கு அந்த கட்டுரை பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது.

இன்னும் சில கட்டுரைகள் படித்து வருகிறேன். இந்த ஆய்வாளர்கள் மேற்கத்திய ஆய்வுலகிற்கு தமிழக தலித்துகளை குறித்து எப்படியெல்லாம் அறிமுகம் செய்திருக்கிறார்கள் என நினைத்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. நிச்சயம் இந்த கட்டுரைகளை பற்றி எழுதுவேன். ஏன் இப்போது என்றால். எனக்கு இப்போது தான் இதுவெல்லாம் தெரியும். தெரியும்போது எழுதுகிறேன்.

***

ஜெ,

நாடக காதல் எனும் விஷக்கருத்தை ஜாதி வெறியர்களுக்காக உருவாக்கி அளித்த கட்டுரை:

https://www.epw.in/journal/2002/43/review-womens-studies-review-issues-specials/work-caste-and-competing-masculinities?fbclid=IwAR3HrnRi6sgvVTq_AN6Jq7jC5DpWmlrXfYhjFd8_G-GAOiF5ikjHBYnudKU

அக்கட்டுரையை எழுத நிதி அளித்தவர்கள் மனம் குளிர மேலதிக மசாலா சேர்த்து எழுதிய இன்னொரு கட்டுரை:

https://www.icrw.org/wp-content/uploads/2016/10/Domestic-Violence-in-India-4-Men-Masculinity-and-Domestic-Violence-in-India.pdf?fbclid=IwAR3WJ7_gsnXtvKuegXbXQIwiRaVUuqX1KpJdo6_18Hd3H9iGY_DpmCPrvQc

அதே கிராமத்தில் ஆய்வு செய்து, இந்தக் கேவலமான கட்டுரைக்கு மறுப்பு எழுதிய பேராசிரியர் லெட்சுமணன் எழுதிய கட்டுரை:

https://www.dropbox.com/s/r5j3gpq88vc76b3/Dalit%20Masculinities%20Lakskhman.pdf?dl=0&fbclid=IwAR1uPq3-ZcAJO-wpfE24r1iur89YdDIxPE_DtG6RirD4N3-aN17-KWxLQf0

இவை தவிர நம்மைப் போன்ற சாமானியர்கள் சென்று வாசிக்க முடியாத எண்ணற்ற ஆய்விதழ்கள் உலகம் முழுக்க இருக்கின்றன. சந்தா கட்டினால் கூட வாசிக்க முடியாது. கல்வியாளர் அல்லது ஆய்வாளர் என சான்று காட்டினால்தான் வாசிக்க ஏலும். கைக்கூலி பெற்றுக்கொண்டு இவர்கள் தலித்துகளை வேறெங்கெல்லாம் அடமானம் வைத்தார்கள்?! இந்தக் கேவலமான சிந்தனை உலகம் முழுக்க பல்வேறு கட்டுரைகளில் கோட் செய்யப்பட்டுள்ளதை ஏபிராஜசேகரன் ஸ்கீரின் ஷாட் ஆதாரத்துடன் இணைத்துள்ளார்.

இதை ஏன் உங்களுக்கு அனுப்புகிறேன்? தங்கள் பகாசுர செல்வாக்கால் இவற்றை இவர்களால் நீக்க முடியும். வரிகளை மாற்ற முடியும். அதற்கு முன் இவற்றை வாசித்துக்கொள்வதும் பாதுகாத்துக்கொள்ளவும் வேண்டும்.

செல்வேந்திரன்

தலித்துகளும் திராவிட இயக்க கருத்துருவாக்கங்களும்:

“இந்த ஆய்வாளர்கள் மேற்கத்திய ஆய்வுலகிற்கு தமிழக தலித்துகளை குறித்து எப்படியெல்லாம் அறிமுகம் செய்திருக்கிறார்கள் என நினைத்தால் அதிர்ச்சியாக இருக்கிறது”

நண்பர் ராஜசேகரன் தான் முதலில் ராஜன்குறை, ஜெயரஞ்சன் போன்றொரின் தலித் விரோத எழுத்து எப்படி அறிவுலகில் ஏற்கப்பட்டு பின் பொது தளத்தில் பிரபலமானதென்று எழுதினார். இன்று ஜெமோ அதைச் சுட்டிக் காட்ட ஒரு கும்பலே சொன்னவர் ஜெமொ என்பதாலேயே ராஜன்குறை, ஜெயரஞ்சனை மறந்துவிட்டு களமாடிக் கொண்டிருக்கிறது.

ராஜசேகரன் தொடர்ந்து தேடியதில் இன்னொரு கட்டுரையைச் சுட்டிக் காட்டுகிறார். இதில் ஜெயரஞ்சனும், ஆனந்தியும் அப்பட்டமான சாதிய கண்ணோட்டத்தோடு எழுதியிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட கட்டுரைகளை இன்று வெள்ளைக்காரர்கள் கறுப்பினத்தவர் பற்றி எழுதக் கூசுவார்கள். அல்லது அப்படி எழுதியது பொது வெளிக்கு வருமானால் அதற்காக கொஞ்சமேனும் மனசாட்சியோடு மன்னிப்புக் கோருவதோ குறைந்தப் பட்சம் சால்ஜாப்பு சமைப்பதோ நடக்கும். ஆனால் தமிழ் நாட்டில் தான் எழுதியவர்கள் இறுமாந்திருக்க அவர்களின் கைக்கூலிகள் களமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து எழுதுங்கள் ராஜசேகரன்.

அரவிந்தன் கண்ணையன்

முந்தைய கட்டுரைராஜன் குறையின் மறுப்பல்லாத மறுப்பு- அரவிந்தன் கண்ணையன்
அடுத்த கட்டுரைஅந்தக் கட்டுரையில் என்ன தான் கோளாறு?