பாறை ஓவியங்கள்

தமிழகத்தின் பாறை ஓவியங்களை தேடித்தேடி பதிவுசெய்யும் ஆய்வாளரான காந்திராஜன் பற்றிய நல்ல கட்டுரை இது. அரங்கசாமி எனக்கனுப்பினார். நான் கிருஷ்ணகிரி அருகே மலை ஏறிச்சென்று ஒரு பாறை ஓவியங்களை பார்த்திருக்கிறேன். வேறெதுவும் பார்த்ததில்லை. அந்த ஓவியங்கள் வரலாறே இல்லாத காலகட்டத்தைச் சேர்ந்தவை என்ற எண்ணம் அளிக்கும் மன எழுச்சி அபாரமானது. எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் எந்த குறிப்பும் இல்லாமல் அவை திறந்து கிடந்தன அன்று. காந்திராஜனைப்போல சிலர் தனிப்பட்ட ஆர்வத்தாலும் அர்ப்பணிப்பாலும் அவற்றை கவனப்படுத்தினால்தான் உண்டு

http://dhalavaisundaram.blogspot.com/2011/03/blog-post.html

முந்தைய கட்டுரைசார்லஸின் நஞ்சுபுரம்
அடுத்த கட்டுரைஎனிக்மா