ஏற்கனவே சுடலைமாடன் கொடையைக் கண்டவர்களுக்கோ அல்லது அ.கா. பெருமாள் அவர்களின் சுண்ணாம்பு கேட்ட இசக்கி போன்ற நூல்களைப் படித்திருப்பவர்களுக்கோ இந்தக் கூத்து பற்றிய முன் அறிமுகம் இருக்கக் கூடும். இந்தக் கூத்து பற்றி திருசெல்வம் எழுதிய இன்னொரு விரிவான கட்டுரை சொல்வனத்தில் வந்துள்ளது. மகுடம் வாத்திய இசை வாசிக்கும் வீடியோவையும் கூடுதலாக இணைத்துள்ளார்கள் அவசியம் படிக்கவும் http://solvanam.com/?p=13152
ராஜன்
ஆம். முக்கியமான கட்டுரை. அ.கா.பெருமாள் அவர்கள் விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். பல்வேறு பிராந்திய வேறுபாடுகளையும் பதிவுசெய்திருக்கிறார்கள்
ஜெ