பீடம், கழுமாடன், சாவி கடிதங்கள்

கதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]

கதைத் திருவிழா-22, பீடம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

கழுமாடன் பீடம் இரு கதைகளையும் வாசித்தேன். நானும் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவன். திருவிதாங்கூர் வரலாற்றில் ஆர்வமுண்டு. உங்கள் கதைகள் இரண்டிலுமே கழுமாடன்கள் தலித்துக்கள். கழுவேற்றுதலே அவர்களுக்காக உள்ள சித்திரவதை என்ற பேச்சு அதிலே உள்ளது.

ஆனால் நடைமுறையில் பெரும்பாலான கழுமாடன்கள் நாயர்கள். பத்துக்கு ஒன்பது. அவர்களே குலதெய்வங்களாக ஆனார்கள். இதை நீங்கள் கணக்கில் கொள்ளவில்லையா?

சி.ரவீந்திரன்

***

அன்புள்ள ரவீந்திரன்

நீங்கள் சொல்வது உண்மை. கழு போன்ற கடுமையான தண்டனைகள் 90 சதவீதம் ராஜத்துரோகம், கலகம் ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்டன. என்ன காரணம் என்றால் சோழர் ஆட்சிக்குப்பின் முந்நூறு ஆண்டுக்காலம் திருவிதாங்கூரில் நிலவியது அராஜகம். அரசகுடி என தெளிவாக எவருமில்லை. எல்லா நாயர்களுமே தங்களை அரசர்களாக நினைத்துக்கொண்டனர். பல வட்டாரங்கள் தன்னாட்சியுடன் இருந்தன. இந்த சின்ன திருவிதாங்கூரில் 300க்கும் மேற்பட்ட ஆட்சியாளர்கள் இருந்தனர். ஆகவே பூசலும் கலகமும் நடைபெற்றது.

அவர்களை அச்சுறுத்தி ஒடுக்க கழுவேற்றல் தேவைப்பட்டது. கடைசியாக வேலுத்தம்பி தளவாய் காலம் வரை இது தொடர்ந்தது. திருவிதாங்கூரில் ராணி கௌரி பார்வதிபாய்க்குப் பிறகுதான் உள்நாட்டுக்கலவரமே அடங்கியது.

ஆனால் இந்த வரலாற்றின் நேரடிப்பிரதிபலிப்பு அல்ல என் கதைகள். ஒரு கலகக்காரர் கழுவிலேற்றப்படுகையில் அதில் அறச்சிக்கல் ஏதுமில்லை. அவன் ஜெயித்திருந்தால் மற்ற தரப்பை கழுவில் ஏற்றியிருக்கக்கூடும். அவர்களை அந்தக்குடும்பம் கொண்டாடுவதும் இயல்பு. அது வரலாறு, வரலாற்றை எழுதினால் கருத்தில் கொள்ளவேண்டியது.

ஆனால் தலித்துக்கள் கழுவிலேற்றப்படுவதில் இன்றும் நிலைகொள்ளும் அறச்சிக்கல் உள்ளது. அச்சிக்கலையே நான் கருத்தில் நிறுத்த விரும்புகிறேன். என் கதைகளில் அந்த ஒடுக்குமுறை – மீறல் இரண்டையுமே சொல்ல விரும்புகிறேன்.

ஜெ

***

அன்புள்ள ஜெ

கழுமாடன், பீடம் இரண்டுமே மனதை உலுக்கிய கதைகள். குரூரம் என்பதைக் காட்டிலும் அதிலுள்ள அறச்சிக்கலையே கதைகள் முக்கியமாக ஆக்குகின்றன. ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளனை உருவாக்கிக்கொண்டே செல்வதை, அந்த தொடர்ச்சியை அற்புதமாக காட்டிய கதை பீடம். இது என்றுமுள்ள மானுடக்கதை.

ஆர்.வரதராஜன்

***

கதைத் திருவிழா-20, சாவி [சிறுகதை]

சாவி கதையை படித்துக்கொண்டே வருகையில் அம்மா சொல்லும் இரண்டு அறிவைப்பற்றியும் படிக்கையில் சட்டென்று அபிமன்யு நினைவுக்கு வந்தான். உள்ளே செல்லும் அறிவைக்கொண்டவன். அதற்கான சாவியோடே பிறந்தவன். ஆனால் வெளியேறுவதை அறிந்துகொள்ளத் தவறியவன் அல்லது துரதிர்ஷ்டவசமாக கிடைக்கப்பெறாதவன்.

கிட்டத்தட்ட நம் அனைவரிடமும் சாவி இருக்கிறது. நிறையபேர் பயன்படுத்தும் வழியறியாது அப்படியே போட்டு வைத்திருக்கிறார்கள். சிலர் திறந்து உள்ளே செல்கிறார்கள். ஆனால் அனைவரிடமும் வெளியேறும் வழி இருக்கிறதா என்றால் ஐயம்தான்.

தியானம் பழகுவதைப் பற்றியும் யோசித்துப்பார்த்தேன். முறையான பயிற்சியும் குருவின் அண்மையும் கிடைக்கப் பெறாது தியானம் பழகாதவர்கள் ஆழ்ந்து போகையில் பிரச்சினையில் சிக்கிக்கொள்வது குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். உள்ளே போக ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது. வெளியேறுவதற்கான பயிற்சியும்கூட வேண்டும். அதுவே முக்திக்கு வழியும்கூட இல்லையா ?

அம்மா சொன்னதுபோல மரமும் வானமுமாய் துக்கமில்லா வேறொரு உலகத்துக்குள் இருந்து எதற்கு அந்த குரங்கை இந்த உலகத்துக்குள் இழுத்து அதற்கு மோட்டார் சைக்கிள் பழுதுக்கு பயிற்சி அளிக்கவேண்டும்? சரி விரட்டிவிடலாம் என்று நினைத்து வருகையில் அந்த குரங்கு மிகுந்த முனைப்போடு ஸ்க்ரூ ட்ரைவரை பிரயோகிக்கக் கற்றுக்கொள்கிறது. கற்றுக்கொண்டு எக்கிக்குதித்து எக்காளமிடுகிறது. அந்த ஸ்க்ரூ ட்ரைவர்தான் அந்தக்குரங்கின் சாவி, இல்லையா?

முதல் சக்கரத்தைக் கண்டுபிடித்தவன், முதல் தீயை தானே உருவாக்கக் கற்றுக்கொண்டவன் இப்படித்தானே கூத்தாடியிருந்திருப்பான். (Castaway படத்தில் தன்னந்தனியனாக ஒரு ஆளில்லாத்தீவில் கரையொதுங்கிய Tom Hanks மரக்கட்டைகளை உரசி தானே தீயை உருவாக்கக்கற்றுக்கொண்டு பரவசத்தில் ஆடுவது நினைவுக்கு வருகிறது.)

கொண்டாட்டத்தில் மரத்தில் பாய்ந்தேறினாலும் மறுபடியும் மண்ணின் புழுதியில்தான் வந்து விழுகிறது. அதன் வால் விடைத்து நிமிர்ந்துவிடுகிறது. மரக்கிளைகளில் சுழற்றிப்பிடித்து ஊஞ்சலாடிக்களிக்க இனி அது உதவாது.

அறிவார்ந்த தன்னகங்காரம் – தான் கண்டுபிடித்தேன், உருவாக்கினேன் என்ற எண்ணம். அதுவே மனிதனை மாட்டிவைக்கும் பொறி. ஆம், ‘மணல்மேடுகள் நடுவே பெண்’விமர்சனத்தில் நீங்கள் சொன்னதைத்தான் இங்கே அம்மாவும் சொல்கிறாள். அந்த பொறியில் மாட்டிவைத்து சம்சார/லௌகீக துக்கத்தை அந்த குரங்குக்கும் தரவேண்டாமே என்று ஆதங்கப்படுகிறாள். ஆனால் அதற்கு வழியில்லாமல் குரங்கும் அதே பொறியில் மாட்டிக்கொண்டுவிடுகிறது.  அல்லது அதன் பாதையை அதுவே தேர்ந்துகொண்டுவிடுகிறது. துக்கமுள்ள பாதைதான்,  ஆனால் முனைப்பிருந்தால் வெளியேறும் வழியையும் அதுவே கற்றுக்கொள்ளும்.

ஆனால் அது உண்மையில் பொறியேதானா? ‘பித்தம்’ பண்டாரம் சொல்வதுபோல, பரம்பொருளை அடைய தடையாக இருக்கும் அஞ்ஞானத்தின் பூட்டுகளைத்திறக்கும் சாவியாக இருந்தால்? பொறிக்கும் சாவிக்குமான வேறுபாடு வியக்கவைக்கிறது. சந்தேகமே இல்லை, நீர் மாஸ்டரேதான்.

குரங்கை மனது என்று கொண்டால் – அலைபாயும் மனதின் பருவடிவம் குரங்கு என்று யோசித்தால் ஒட்டுமொத்த மனித குலமும் மாட்டிக்கொண்டிருக்கும் மாபெரும் வலைக்கண்ணிதான் மனதில் தோன்றுகிறது. ம்ஹ்ம் … துக்கத்தில் மாட்டிவிட வேண்டாம் என்றுதான் அன்னையரும் சொல்லிப்பார்க்கிறார்கள்.

பொன்.முத்துக்குமார்

பி.கு : இதை எழுதிய பிறகுதான் குங்குமம் பேட்டி படித்தேன். அதில் உங்களது இறுதி பதிலைப்படித்துப் (இந்த கோவிட்/திருவிழாக் கால சிறுகதைகள் மூலமாக ஏழாண்டுகாலமாக எழுதிக்கொண்டிருந்த வெண்முரசிலிருந்து வெளியே வருகிறேன்) புன்னகைத்துக்கொண்டேன்.

***

அன்புள்ள ஜெ,

மனிதர்கள் அனைவருமே ஒருவகையில் அந்தக்குரங்குபோலத்தான். ஒரு சாவி முதலில் மண்டைக்குள் நுழைந்து எதையோ திறந்துவிடுகிறது. அதன்பிறகு அதை புறவுலகில் தேடி திறந்துவிடுகிறது. திறந்து திறந்து போய்க்கொண்டே இருக்கிறது. என் வாழ்க்கையில் இதேபோல ஒரு அப்செஷன் வந்ததை ஞாபகப்படுத்திக்கொள்கிறேன். ஓமியோபதி. இன்றைக்கு வரை அதற்குள்தான் வாழ்க்கையே

ஜெயசீலன்

***

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14
அடுத்த கட்டுரைசிதைவின் கதை- புட்டன்புரூக்ஸ்