சிந்தே, வண்ணம்- கடிதங்கள்

கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

வண்ணம் கதையை ஒரு சிரிப்புடன் வாசித்தேன். அந்தச் சிரிப்பு அது ஒரு பகடிக்கதையோ என்று எண்ணச்செய்தது. அது ஒரு பாவனை, அதற்கு அடியிலிருப்பது வேறொரு கதை. அது மக்களுக்கு அரசுக்கும் இடையேயான உறவு. பருண்மையான ஆதிக்கமும் நுண்மையான ஆதிக்கமும் இரண்டு வகையில் மக்களை ஆட்டிவைக்கின்றன என்று காட்டுகிறது அந்தக்கதை. ஆயுதத்துடன் வரும் சர்வாதிக்காரர் தோற்கும் இடத்தில் கையில் ஒரு வண்ணத்துப்பூச்சியுடன் வரும் நம்பூதிரி ஜெயிக்கிறார்

எட்வின் ராஜன்

***

பெருமதிப்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களின் கதைத் திருவிழா கதைகளை கொஞ்சம் பிந்தி படித்துவருகிறேன். நீங்கள் எழுதும் வேகத்துக்கு என்னால் வாசிக்கக்கூட முடியவில்லை.

அதனுள் வண்ணம் சிறுகதையை இரண்டு நாட்களுக்கு முன்னால் வாசித்தேன். அதை ஒட்டிய தொடர் எண்ண ஓட்டங்கள்.

முதலில் அந்த கதை எழுதப்பட்ட நடை. கட்டுரையோ என்று தோன்றவைத்த அதன் தொடக்க பத்திகள். மெல்ல மெல்ல நகைச்சுவை இழையோட தொடங்குகிறது. அதன்பின் வரும் தொடர் பகடிகளை ரசித்துக்கொண்டே சிரித்து சிரித்து மேலே சென்றால், நம்மையறியாத ஒரு துயர சம்பவத்திற்குள் அழைத்துச்சென்று நெகிழ வைத்து, அதையும் தாண்டிய ஒரு பேருண்மையில் நிறுத்தி நின்றுவிடுகிறது. கதையின் நடையும், அமைப்பும் ஒரு பெரிய வசீகரம். கருவுக்குள் நுழையும் உயிர் போல எப்படி என்று அறியமுடியாத வேளைக்குள்  ஒரு பெரும் கதையை கூறி சென்றுவிட்டீர்கள்.

இந்த கதைக்கு ஒருவேளை வண்ணம் என்ற தலைப்பு வைக்காமல் போயிருந்தால், அல்லது இறுதியில் வரும் சங்கரன் பிள்ளையின் “நாலு சொட்டு  நிறம்” என்ற வியப்பு சொல்லப்படாமல் விடப்பட்டிருந்தால் ஒட்டுமொத்த கதையே வேறாக பொருள் கொண்டு கடந்து சென்றுவிடலாம் – அதிகார வர்கத்தின் அலட்சியப்போக்கு என்றோ, ஒடுக்கப்பட்ட ஏழை மக்களின் போராட்ட வெற்றி என்றோ எடுத்துக்கொள்வது ஒரு நிலை. இன்னும் கொஞ்சம் அணுகிப்பார்த்தால் தாய்மையின் உன்னதம். குழந்தைக்கு இறங்கிய தாயின், அமுதூட்டும் அன்னையின, அது உருவாக்கிய நதியின், நதியைத் தாங்கும் நிலத்தின், நிலமெனும் “கனிஞ்ச அம்மையின் ” கருணையின் சித்தரிப்பு என்றும் கொள்ளலாம். இந்த கருணை அன்னையே பூமாதேவியாக அமுதகாலம் ஏந்தி படிமமாக மாற்றவும் பட்டுவிட்டாள், கதைக்குள்ளேயே.

ஆனால் எல்லாவற்றையும் மீறி அடிக்கோடிடப்பட்ட “வண்ணம்”. என்ன அது. என்ன செய்தது? என்ன செய்தொகொண்டு இருக்கிறது? என்னை என்ன செய்தொகொண்டு இருக்கிறது? எல்லோரையும் என்ன செய்தொகொண்டு இருக்கிறது?

வண்ணம் ஒருவகை ஆக்கசக்தி, கல்லாகிப்போன மக்களை துயிலெழுப்பி இயங்கவைத்த இயங்குசக்தி என சங்கரன்  பிள்ளையால் வியந்து நோக்கப்படுகிறது. விஷ்ணு நம்பூதிரி அதை உணர்ந்து பயன்படுத்தியும் காட்டிவிட்டார். மேலே சிந்தித்த்துப் பார்த்தால், ஆமாம்  வண்ணம் ஒரு ஆக்கசத்திதான். கதிரவனின் குழந்தை அது, உலகிற்கே உயிர் கொடுக்கும் கதிரவன்தான் பலவேறு வண்ணங்களாக கண்முன் தோன்றுகிறார். ஒவ்வொரு வண்ணமும் உயிரின் துளிதான். முழு கருமை அதன் எதிர் நிலை அதையே உள்ளம் அஞ்சுகிகிறது. துவண்ட நெஞ்சங்களுக்கு வண்ணம் போல் உடனடி உற்சாகம் தருவது வேறில்லை. அதனால்தான் மனிதன் தீபாவளி முதல் கிறிஸ்துமஸ் வரை எல்லா பண்டிகைகளையும் வண்ணமயமாக்கி மகிழ்கிறான்.

ஆனால் அதுமட்டும்தான் வண்ணமா ?

வண்ணம் ஒரு பெரும் மயக்க சக்தி. மாயா தேவியின் பருண்மை  வடிவம் கூட. அது மனித மனதுடன் விளையாடி அறிவை ஏமாற்றி மடை மாற்றிவிடும் ஆற்றல் பெற்றது. இந்த கதையில் கூட வண்ணங்களின் விளையாட்டு உள்ளது. கோரையும் நெற்பயிரும்  ஒரே நிறம், பச்சை. நிலமறியாத கண்டெழுத்து அதிகாரியை எளிதில் முடிவுக்கு வரவைத்து அந்த வண்ணமே. அதுதானே அத்தனை  குளறுபடிக்கும் மூல காரணம். இறுதியில் கூட, பூஜைகளும், அதிகாரவர்க்கத்தின் மன்றாட்டுகளுக்கும், தலைமுறை முழுக்க வரிகள் தள்ளுபடி செய்யப்பட்டாலும், ஏன் அரசனே காலில் விழுந்தும் இறங்காத கற்சிலைகள் – வெறும் வண்ணங்களின் விளையாட்டால் உயிர் கொண்டன. வண்ணங்களின் இந்த அறிவு மயக்கும் ஆற்றலை கட்சிகளும், மத குழுக்களும், பரப்பியக்கங்களும், மேற்கத்திய பரப்பிசை கச்சேரிகளிலும், மது விடுதிகளிலும்  பயன்படுத்தும் விதம் நாம் அறிந்ததே.

வண்ணம் என்பதை, அதன் மதி மயக்கும் தன்மையால், மாயையின் குறியீடு என்று விரிந்த பொருளில் வைத்துப்பார்த்தால் அதன் ஆற்றல் இன்னும் பெரிதாக கதைக்குள்ளே விளங்கும். மேலோட்டமாக பார்த்தால் அதிகார வற்கத்தின் அசிரத்தை என்று கூறலாம். அது உண்மைதான். ஆனால் கண்டெழுத்து அதிகாரி, சர்வாதிகார், வலிய சர்வாதிகார், காவலதிகாரி, மேலெழுத்துக்காரர், திவான், அரசன்  யாருமே கெட்ட எண்ணம் கொண்டவர்கள் அல்ல. இங்கே இரு பிழைகள் காணக்கிடைக்கின்றன – ஒன்று அரசின் செயல்முறையும், கொள்கைகளும் கொண்ட குறைபாடு (process and policies), இரண்டாவது அதை செயல்படுத்தும் அரசு ஊழியர்களின் அறியாமை மற்றும் அசிரத்தை (incompetence and lack of concentration). உலகில் உள்ள எல்லா நிர்வாக அமைப்புகளும் இந்த குறைபாடு கொண்டவையே. அரசுகள் மட்டுமல்ல, இவை தொழில் நிறுவனங்கள், அலுவலக நிர்வாகங்களுக்கும் பொருந்தும். இதில் முடியாட்சி, குடியாட்சி, சோசலிசம், கம்யூனிசம், வலதுசாரிகள், அரசுத்துறை, தனியார்துறை, சேவை அமைப்புகள் அனைத்துக்கும் பொருந்தும்.

முதலில் செயல்முறைகள், விதிகள், கொள்கைகளின் குறைப்பாடு பற்றி. இவை ஏன் ஏற்படுகின்றன? சிந்தித்து பார்த்தல் நிர்வாகவியலில் எல்லா நேரங்களுக்கும் பொருந்தும் ஒரு சரியான செயல்முறையை வகுக்கவே முடியாது என்று தோன்றுகிறது. எந்த ஒரு நிர்வாகமுமே பல மாறுபட்ட தேவைகளுக்கு இடையே ஆன ஒரு சமரச புள்ளியில் இயங்கவேண்டியது. பல நேரங்களில் ஒர்ன்றுபோல் தோன்றும் இருவேறு சிக்கல்கள் ஒரே செயல்முறையல் அணுகப்பட்டுவிடும். உதாரணம் கண்டெழுத்துக்காரர் நேர்மையாக கணக்கீடு செய்யவேண்டும் எனும் தேவை அரசனுக்கு உண்டு. அதனால் ஊர்மக்களோடு நட்போ பகையோ இல்லாத பரதேசத்தவரை அந்த பொறுப்பில் அமர்த்தும் செயல்முறை அமைந்தது. இதே தேவை மக்களுக்கும் உண்டு. அவர்களுக்கும் நேர்மையான கண்டெழுத்துக்கரரே வேண்டும் ஆனால் அது முக்கியமல்ல , அவர்களுக்கு அவர்  உழவை பற்றிய அறிவையும் கொண்டிருக்க வேண்டும். இந்த தேவை இரண்டும் ஒரே இதனால் செயல்முறையால் கட்டுப்படுத்தப்படும் போது பிழை நேர்கிறது. ஒரு நல்ல அரசு நிர்வாகம் இத்தகைய பிழைகளை கண்டுணர்ந்து சரிசெய்துகொண்டே இருக்கவேண்டும். ஆனால் ஏன் அப்படி?

இயற்கையிலேயே வண்ணங்கள் அத்தகையவை கோரைக்கும், நெல்லுக்கும் ஒரே நிறம், மண்ணும் நீரும் இரண்டுக்கும் தேவை. நெல்லுக்காக செய்யப்படும் செயல்முறை கோரையையும் பெருக்கும். ஒரே வண்ணம் ஆனால் அவற்றுள் பேதமும் உண்டு இதை உணர்ந்ததாலேயே அயக்கரை வேளாளர்கள், தங்கள் செயல்முறையை திருத்த்திக்கொண்டே  இருக்கிறார்கள். அவர்களே சிறந்த உதாரணம் அரசுக்கும். அரசும் இந்தவகை கோரை களைதலை செய்தொக்கொண்டே இருக்க வேண்டும் தன நிர்வாகத்திலும். இன்னொன்றும் கவனிக்கலாம், எங்கெல்லாம் வரையறுக்கப்பட்ட செயல்முறையில் தெளிவில்லையோ, அங்கெல்லாம் நிர்வாகம் தனக்கான ஒரு வாடிக்கையை தானே உருவாக்கிகொட்டிண்டு நிரப்பிக்கொள்ளும், இவையும் பல சமயங்களில் கோரைகளே. வண்ண வேறுபாடு கண்டு நீக்கப்படவேண்டியவை. உதாரணம் வரியில் கால் பங்கு குறைக்கும் வழக்கம், அரசனுக்கு அது கருணையின் வெளிப்பாடு. ஆனால் நிர்வாகத்துறை அதை எதிர்நோக்கி தானே வரியை சேர்த்து எழுதும் முறைமை. இத்தகைய போக்குகள், வழக்கங்கள் அலுவலக நிர்வாகங்களில் நிறைய உண்டு.

அடுத்து அரசு ஊழியர்களின் அறியாமை பற்றி. இதுவும் உண்மையில் செயல்முறையின் குளறுபடியே. “இதனை இதனால் இவன்முடிக்கும்” என்ற என்ற வள்ளுவன் சொல்கூட எந்நோக்கில் முழுமையானதல்ல. “இதனால்” என்ற ஒருமை காரணம் பல நேரங்களில் பரிசீலிக்கப்பட்டு பணியாளர்கள் பணி அமர்த்தப்படுகிறார்கள் – அரசுத்துறை மட்டுமல்ல, தனியார் துறைகளுக்கும் இதேதான். ஆனால் காரணங்கள் எப்போதுமே ஒருமையானதல்ல – பலதேவைகள் கொண்டது ஒவ்வொரு பணியும்  – “இதனால்” அல்ல “இவைகளால் ” என்றாய வேண்டும். அதுவும் போதாது அதையும் மேம்படுத்திக்கொண்டே செல்லவேண்டும். கார்ப்பொரேட் துறையில் பெரும்பாலும் re – skilling, cross – skilling என்று இதை அழைப்பர். அரசுத்துறையில் குறைந்த அளவில் நிகழ்வதுண்டு பெரும்பாலும் ஊழியர்களுக்கு போதிய ஊக்கம் இல்லாததால் முடங்கிப்போகும் (இது ஆசிரத்தை பின்னல் பார்போப்போம் ). இந்த அறியாமை மாயைக்கு மிகவும் பிடித்தது. சரியான அறிவு அற்ற ஒருவர் ஒரு பணியைச்செய்யும்போது வண்ண வேறுபாடுகள், ஒற்றுமைகள் அவரை எளிதில் குழப்பி தவறிழைக்க வைத்துவிடுகின்றன.

அடுத்து மிக முக்கியமான அசிரத்தை – இங்கேதான் மாயை மனித அறிவை  முற்றாக மழுக்கடித்துவிடுகின்றது. ஒருவர் ஒரு செயலை தன்முனைப்பின்றி பிறிதொரு செயல்முரயையைக் நிறைவேற்ற செயகிறார் என்றால், அது எப்போதுமே சலிப்பூட்டும். தினமும் அதை செய்யும்போது மனதில் ஒரு வெறுமை தோன்றும், அதை கடக்க பெரும்பாலானோர் ஒருவகை அசிரத்தையை வளர்த்துக்கொள்கிறார்கள். இது அரசூழியர்களுக்கும் தனியார் துறையில்கூட நிர்வாக பணிகளில் அமரும் எல்லோருக்கும் பொருந்தும். அந்த பணியை உரியவாறு செய்துமுடித்தால் வரும் நிறைவு மிக மிக சொற்பமே. ஆனால் அதில் குறை கண்டோ, ஒதுக்கி வைத்தோ செய்யாமல் தள்ளிப்போட்டு  – பின்னர் அது முக்கிய தேவையாக (critical task) மாற்றம் கொண்ட பின், அதை கொஞ்சம் போலி வேகத்தோடு செய்து தரும்போது வரும் நிறைவும், அங்கீகாரமும் வேறானவை. இதுவே அசிரத்தையின் முதல் காரணம். வலிய சர்வதிகார் படையோடு அயக்கரை செல்லும்போது அடைந்த நிறைவை, அயக்கரை மக்கள் வரியை கட்டியிருந்தால் அடைந்திருக்க மாட்டார்.  சலிப்பை வெல்ல மனிதர்கள் எடுக்கும் இன்னொரு வழி ஆசைகளை மாயயைகளை பின்தொடர்தல் (வண்ணங்கள்). சிலருக்கு அது சினிமா, சிலருக்கு புகை, சிலருக்கு மது, திருமஞ்சணபுரம் சுப்பையருக்கு அது உணவு, கொச்சு கிருஷ்ணன் நாயருக்கு அது வேட்டை/அச்சி , கோவிந்தன் நாயருக்கு அதுவே பல அச்சிகள். மன்னனுக்கு ஓலைகளை படிக்காமல் வலக்கையால் தொட்டு “வேண்டது செய்க” என்று ஆணையிடும் பழக்கம் இந்த சலிப்பின் வெளிப்பாடே. சலிப்புற்ற நெஞ்சம் மாற்றத்தை தேடும்போது மாயையில், வண்ணங்களில் சிக்கிகொள்ள்கிறது.

வேறு விதமாகவும் சிந்தித்து பார்க்கலாம். செய்வதறியாது, முழு வழிகளும் அடைக்கப்பட்டு கல்லாகிப்போன மக்களை, கல்லின்று உயிராக்கி சில எழுப்ப பட்டம் பூச்சிகளின் வண்ணமே போதும். விஷ்ணு நம்பூத்ரியும் “அது போதுமே” என்று தெளிவாகவே சுட்டிக்காட்டுகிறார். பின்னர் ஏன் பூஜைகள், மன்னன் ஏன் வரவேண்டும், வரிகள் ஏன் விலக்கப்படவேண்டும்.முக்கியமாக மன்னன் ஏன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கவேண்டும்? அது மக்களுக்காக, அவர்களை எழுப்ப அல்ல. மன்னனுக்காக. அரசு நிர்வாகத்துக்கான சிகிழ்ச்சை. விஷ்ணு நம்பூதிரி தெரிந்தே அதை பொறுப்போடு செய்து முடிக்கிறார். ஏதோ ஒருவகையில் திவானும் அதை உணர்ந்துகொள்கிறார்.

கதையில்  பார்த்த அரசு கொடுங்கோல் அரசு ஒன்றும் அல்ல, நடைமுறையில் நிகழ்த்த ஒரு குளறுபடி, அதை உணர்ந்து அரசு அதை திருத்தியும் கொள்கிறது. மக்களுக்குத்தான் அதை அரசுக்கு உரைக்க முழு ஆற்றலும் தேவைப்பட்டது. ஆனால் உண்மையில் மக்கள் போராட்டங்கள் பல நேரங்களில் அரசுகளால் வண்ணங்கள் மட்டுமே கொண்டு நீர்த்துப்போக செய்யவும் பட்டுள்ளன. மிகப்பெரும் மக்கள் போராட்டங்கள், உரிமை முழக்கங்கள் எழும் முன்னரே அடையாளம் காணப்பட்டு – சில சிறிய பாலியல் சர்ச்சைகள், திரையுலகம் சார்ந்த வதந்திகள் போன்றவை பரப்பப்பட்டு அவை மறக்கவைக்கப்பட்டவை மிகுதி. நாம அவற்றை மறந்துவிடுகிறோம், அதனால் பேசுவதில்லை. அதுவும் ஊடகமும் தகவல்தொடர்பும் பெருகிவிட்ட இந்தசூழலில், வண்ணங்களுக்கோ அது உருவாக்கக்கூடிய மயக்கங்களுக்கோ ஒருபஞ்சமும் இல்லை.

கதிரவன் தான் ஒளியைத்தருகிறான், அனைத்தையும் காண செயகிறான். ஆனால் அதே கதிரவனே அவன் பின்னல் விரிந்து கிடக்கும் பேரண்டத்தை நம் கண்களில் இருந்து மறைத்தும் வைக்கிறான். மாயை மயக்கம் தருபவள்தான் ஆனால் அவளே உயிர்வாழும் ஆசையையும் அதனால் அமுதையும் தருபவள்.

வண்ணங்கள் பற்றிய தொடர் சிந்தனைக்கான விதையை செம்பட்டு நூலால், பின் மஞ்சள் பட்டு நூலால் கட்டி தந்துவிட்டீர்கள் அய்யா. நன்றி நன்றி.

இதைத்தாண்டியும் வெடித்து சிரிக்க வைத்த தருணங்கள், “கிழங்குண்டு மலமிழகி வாழ்தல்”, “அந்த நாயை நான் செவியைப் பிடித்து இழுத்து வருகிறேன்” , “ஊத வைத்து அவர்கள் மது அருந்தியிருக்கவில்லை என்றும் , குனியவைத்து ….” – சிரித்த்து சிரித்து இன்னும் நிறுத்தவில்லை.

கணேஷ்

கதைத் திருவிழா-21, சிந்தே [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நலம்தானே?

சிந்தே ஒரு அரிய கதை ஆனால் அதன் சூழல், நுணுக்கமான வர்ணனைகள் காரணமாக பலபேரை கடந்துபோய்விடும் என்றும் நினைக்கிறேன். சிந்தே என்ற அந்த சிங்கம் என்ன? அது ஒருபக்கம் உண்மையான சர்க்கஸ் மிருகம், இன்னொருபக்கம் யாளி. அந்த சிங்கம் எப்படி யாளியாக மாறுகிறது என்பதுதான் கதை.

கதை எவருடைய உணர்ச்சிகளுக்குள்ளும் செல்லவில்லை. விரிவான நுட்பமான காட்சியைத்தான் விவரிக்கிறது. அது ஏன் என்று பார்த்தேன். கதைசொல்லிக்கு ஐந்துவயதுக்குள்தான் இருக்கும். அப்படியானால் கண்ணால்பார்த்த வாழ்க்கையைத்தான் அவனால் சொல்லமுடியும். ஆகவேதான் அந்த பங்களா அத்தனை நுட்பமாகச் சொல்லப்படுகிறது. சிங்கமும் அதில் காட்சியாகவே பதிந்திருக்கிறது.

அந்த காட்சி அவன் மனதில் சாவது வரை இருக்கப்போவது. ஆகவேதான் அது அவ்வளவு ஆழமானதாக பதிவாகியிருக்கிறது. அந்த விரிவாக்கம் அதனால்தான். ஆச்சரியம் என்ன என்றால் குறியீட்டுத்தன்மை ஏதுமில்லாமல் வெறும் காட்சிவிவரிப்பாக வரும் அந்த பங்களாவின் இரண்டு காட்சிகளும் அப்படியே கனவுமாதிரி வாசகனின் மனதிலும் பதிந்துவிடுகின்றன என்பதுதான். அந்தக்கதையை வாசித்து நாலைந்து நாட்களுக்குப்பிறகும் அந்தக்கதை அப்படியே மனதிலே கனவு மாதிரி நீடிக்கிரது என்பதை எண்ணும்போதுதான் அந்த வர்ணனையின் ஆச்சரியம் புரியவந்தது.

சிந்தே என்ற யாளி அறத்தின் காவலன், அவன் எந்த எல்லையில் சிங்கத்தில் தோன்றினான், அந்த புள்ளி என்ன என்பதுதான் கதையிலுள்ள மர்மம்

சரவணன் எம்

***

அன்புள்ள ஜெ

சிந்தே கதையை ஏதோ ஒருவகையில் என் மனம் அனலுக்குமேல் என்ற கதையுடன் ஒப்பிடுக்கொண்டது. இந்தக் கதைவரிசையில் வந்த அரிய கதைகளில் ஒன்று. ரொம்ப வேறுபட்ட கதை என்று சொல்லலாம். நிலம், வாழ்க்கை, மையப்படிமம் எல்லாமே வேறுபட்டது

எனக்கு அந்த அப்பா கதாபாத்திரம் டிராக்குலாவுடன் மானசீகமாக தொடர்புபட்டது. டிராக்குலா பிரபுவும் இதேபோல ஸ்டைலான டெவில்தான். சாத்தானின் குணாதிசயங்களை பிராம் ஸ்டாக்கர் டிராக்குலா பிரபுவுக்கு அளித்திருப்பார். அறிவு, இசைநாட்டம், ஸ்டைல் எல்லாமே இருக்கும். ஒரு பிரபுவின் அழகும் ஒயிலும் உண்டு. ஆனால் டெவிலும்கூட. அப்பாவும் அப்படித்தான் இருக்கிறார். அந்த டெவிலாகத்தான் அவர் சிங்கத்தை கொண்டுவருகிறார். அது அவரை போட்டுத்தள்ளிவிடுகிறது. ஏனென்றால் அது சிந்தே

செந்தில்குமார்

***

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைபின்தொடரும் நினைவுகளின் குரல்
அடுத்த கட்டுரைநலமே வாழ்க, மறைமுகம் -கடிதங்கள்