தங்கப்புத்தகம், சிறகு- கடிதங்கள்

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

அன்புள்ள ஜெ

தங்கப்புத்தகம் கதையை எங்கள் வகுப்புகளில் வாசித்து விவாதித்தோம். அந்தக்கதை அளிக்கும் அர்த்தங்கள் பெருகிக்கொண்டே இருந்தன. அந்த தங்கப்புத்தகம் இருக்கும் பாதாள அறைக்குள் போகும் பாதைகளில் இருக்கும் ஒவ்வொரு தெய்வங்களும் நம் மனதின் ஆழங்களுக்குச் செல்லும்போது உள்ள படிநிலைகளாக வாசிக்கலாம் என்று ஒருவர் சொன்னார்.

தங்கப்புத்தகம் ஒரு வசீகரமான விஷயத்தைச் சொல்கிறது. தியானம் செய்யும்போது இது முக்கியமானது. தியானம் செய்பவர்கள் ஒரு முதல்படியிலேயே ஒரு ஆழமான விஷயத்தை தொட்டுவிடுவார்கள். அதுதான் தங்கப்புத்தகம். அது மனசின் அடியாழம்தான். ஆனால் அதை துரியம் என்றெல்லாம் கற்பனைசெய்துகொள்வார்கள். அதை முடிவில்லாமல் வாசிக்கலாம். முடிவில்லாமல் அதிலேயே மூழ்கிக்கிடக்கலாம்.

ஆனால் அது ஒரு மாயம். நாம் விரும்புவதை அது நமக்குக் காட்டும். சாதாரணமாக அதை கண்டதுமே பரவசம் அடைகிறார்கள். ஆகவே அது பரவசமூட்டுவதாக அமையும். ஆனால் என்ன பிரச்சினை என்றால் நமக்கு எதன்காரணமகாவாவது டிப்ரஷன் வந்துவிட்டாம் அதுவும் கடுமையான சோர்வை மட்டுமே அளிக்கக்கூடியதாக ஆகிவிடும். வெளியே வருவது மிகமிக கஷ்டம், சங்கீதம்போலத்தான். மகிழ்ச்சியாக இருக்கும்போது நாம் கேட்பது உற்சாகமான சங்கீதம். துக்கமாக இருக்கும்போது அதே ராகத்தில் சோகமான பாட்டை நாம் கேட்போம்.

அந்த தங்கப்புத்தகம் நம் மனம்தான் என்று தெரிந்து மனதை உருவாக்கும் ஆழமென்ன என்று கடந்துசெல்லவேண்டும். பலவகையில் நுட்பமான கதை

டிவி.மாதவன்

***

அன்புள்ள ஜெ

நேற்றிரவு விழிப்பிலிருந்து உறக்கத்துள் செல்லும்போது எழுந்த எண்ணத் தொடர் ஒன்று கொரானா காலகட்டத் தனிமையில் இருந்து தொடங்கி ‘தங்கப் புத்தகம்’ சிறுகதைக்குச் சென்றது. அங்கு இங்குமங்கும் உழன்று நம்மாழ்வாரை அடைந்தது.

“அவரவர் தமதமது அறிவறி வகைவகை

அவரவர் இறையவர் எனஅடி அடைவர்கள்

அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்

அவரவர் விதிவழி அடைய நின்றனரே”

அந்தக் கதை இந்த பாசுரத்தின் மிகச் சிறந்த விளக்கம் என்ற எண்ணத்தோடு உறங்கிப் போனேன்.

பா ராஜேந்திரன்

***

கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

வயதடைதல் என்னும் கருவுக்குள் உலகமெங்கும் கதைகள் தொடர்ச்சியாக எழுதப்படுகின்றன. சிறகு வாசிக்கும்போது இவை ஏன் இந்த அளவுக்கு எழுதப்படுகின்றன என்று யோசித்தேன். ஏனென்றால் ஆசிரியருக்கு அது முக்கியமானது. ஆசிரியர் அப்போதுதான் தன்னை தன் எழுத்தைக் கண்டடைகிறார். இந்தக்கதையிலேயே கதைசொல்லி எதிர்கால கதாசிரியன் என்று காட்டும் ஓர் இடம் உள்ளது. ஆசிரியர் உலகைக் கண்டடைவது அந்த பருவதிலேயே நடைபெறுகிறது.

ஆனால் யோசித்துப்பார்த்தால் அத்தனைபேருமே அந்த வயதில் உலகை கண்டடைகிறார்கள். அதுதான் அவர்களின் எதிர்காலம். அவர்களின் உலகம். அவர்களின் இயல்பு, வாழ்க்கைச் சந்தர்ப்பம் இரண்டும் சேர்ந்து அதை முடிவெடுக்கின்றன. இதில் சங்கு ஆனந்தவல்லி கதைசொல்லி ஆகிய மூவர் வயதடைகிறார்கள். மூன்றுவகை வாழ்க்கைகளை அடைகிறார்கள்.

ராஜசேகர்

***

அன்புள்ள ஜெ

சிறகு கதையை வாசித்தேன்.குடும்பத்தின் வளமும் அது கொடுக்கும் சுதந்திரமும் அங்கிருந்து ஊறிவரும் ஆகங்காரமுமாகவே பதின்வயது சங்கு நிற்கிறான். அதுவே பெண்கள் மீதான ஏளன பார்வையும், எவளையும் வளைக்கலாம் என்ற ஆணவ துணிச்சலையும் அவனுக்கு தருகிறது. ஆனந்தவல்லியை அடைய செல்லும் சங்கு துணைக்கு கதைச்சொல்லியை கூட்டி செல்கிறான்.அங்கு தான் காணும் காட்சிகள் முன் தான் நம்பிய விழுமியங்கள் காற்றில் பறக்கின்றன என்பதை அறியும் போது அதிர்ச்சிக்குள்ளாகிறான் கதைச்சொல்லி. அது குறித்த அவன் அனுபவமே கதையாக விரிகிறது.

படித்த அன்றே நீர்க்குமிழி போல அவளுக்கு சிறகு முளைப்பது குறித்த உணர்வு பிடிபட்டு விட்டது.அது முதலில் கதைச்சொல்லி அவளிடம் சங்குவை பற்றிய உண்மையை சொல்வதில் தொடங்குகிறது.முதலில் வெளி பேச்சுக்கு மறுத்தாலும் அவன் தொட்டதனாலேயே தான் அல்லவா அவன் பின் செல்கிறாய் என கதைச்சொல்லி வினவுமிடத்தில் ஆனந்தவல்லி ஆம் என்று சொல்வதோடு தன் இயலாமையையும் சேர்த்தே அச்சொற்களில் வெளிப்படுத்துகிறாள். சைக்கிள் கற்றுக் கொடுக்கும் போது சங்கு உரைக்கும் குருவியின் சித்திரமே அவள் நினைக்கும் இயலாமை ஒரு மாயை என அவள் உணர வழிவகுத்து கொடுக்கிறது.

இந்த கதையில் வரும் சைக்கிள் குறித்த சித்திரம் அவள் சிறகு முளைத்து விண்ணில் எழுவதற்கான உத்வேகத்தை கொடுக்கின்றன.சைக்கிள் கற்றுக் கொள்வது எப்படி ஒரு பெண்ணுக்கு சுதந்திரத்தை அளிக்கின்றன என்பதற்கான வரலாற்று பார்வையை நீங்கள் வெளியிட்ட வாசகர் கடிதங்கள் இரண்டில் (அவர்கள் பெயரை மறந்துவிட்டேன்)  இருந்து அறிந்து கொள்ள முடிந்தது ஜெ. இக்கதைக்கு சில நாட்களுக்கு முன்பாக தான் தங்கள் தளத்தில் இருந்த யார் அறிவுஜீவி? என்ற கட்டுரையை படித்தேன். அக்கட்டுரையை படிக்க தவறியிருந்தால் அவ்விரு வாசகர் கடிதங்களின் சாராம்சத்தை தவறவிட்டிருப்பேன். அக்கட்டுரையில் ஒரு அறிவுஜீவி என்பவன் தொடர்ந்து சிந்தித்து முன்னேறி கொண்டே இருப்பவர். ஆனால் பேச வரும் போது சில விஷயங்கள் திட்டவட்டமாக அவனுக்கு தெரிந்திருக்க வேண்டும்.அவற்றில் அவனுக்கு உலக வரலாற்றின் சித்திரம் அவன் மனதில் எழவேண்டும்.அதில் ஐரோப்பிய நவீன காலக்கட்டத்து வரலாறு முதல் சீனர்களின் மேல் மங்கோலியர்களின் ஆதிக்கம் வரை அவன் அறிந்திருக்க வேண்டும். அவ்வரைபடத்தில் இந்தியாவின் வரலாற்றை இன்னும் துல்லியமாக அறிந்திருக்க வேண்டும். தமிழர்களின் வரலாற்றில் இன்றும் பாதி பகுதி நிறைவடையாமலேயே உள்ளது என்பதை அறிந்திருக்க வேண்டும். இவற்றை வெறும் தகவல்களாக அறிந்து பயனில்லை. சீரான காரணகாரியத்துடன் தர்க்க ரீதியாக தொடர்புப் படுத்தி ஒரு பண்பாட்டு வரைபடத்தை உருவாக்கி கொள்ள வேண்டும். அவனுக்கு கோதாவரி ஆற்றின் நீர்பெருக்கும் வண்டல் வளமும் எவ்வாறு சாதவாகனர்களின் பண்பாட்டை அமைத்தன என்பது தெரிந்திருக்க வேண்டும். தக்காண சுல்தான்கள் முகலாயர்களை எதிர்த்தது அவர்கள் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் என்று தெரிந்திருக்க வேண்டும். இப்படி ஒரு விரிவான வரலாற்று சித்திரத்தை ஒருவன் அறிந்திருப்பானெனில் இலக்கியத்தில் அதன் நுட்பமான வடிவத்தை கண்டு கொள்வான் என்ற பொருளில் விரிவாக விளக்கி கூறியிருந்தீர்கள். அதற்கு உதாரணமாக க.நா.சு, சுந்தர ராமசாமி அவர்களின் படைப்புகளில் மளிகை கடை வியாபாரிகள் திடிரென்று பெரும் பணக்காரர்கள் ஆவதை சுட்டிக் காட்டியிருந்தீர்கள். நீங்கள் உதாரணம் காட்டிய எழுத்தாளர்களின் படைப்புகளையோ, வரலாற்று அறிவையோ அறிந்திராதவன் எனினும்

இச்சிறுகதையின் மூலம் அவ்வறிதலையும் நான் செல்ல வேண்டிய தொலைவு குறித்தும் அறிந்து கொண்டேன்.

கதையின் இறுதியில் வரும் ஆனந்தவல்லியின் செயல் மிக முக்கியமானது. அவள் லஞ்சம் இல்லாமல் சுளுவாக அவ்வேலையை முடித்து தருகிறாள். மேலும் தானே வலிய தான் யாரெனவும் அறிமுகப்படுத்தி கொள்கிறாள். அது அவளுக்கு சங்கு எவ்வித கசப்பும் இல்லை என்பதையும் சங்குவின் அச்செயல்கள் ஒரு காலக்கட்டத்து சமூக-பொருளியல் அடுக்கினால் விளைந்தவை என்பதையும் காட்டுகிறது.

அப்புறம் கதைச்சொல்லியின் ஆற்றாமை திருப்பம் வரை தொடர்கிறது. அவனே சொல்வது போல சங்குவின் சொற்களை தன் வீட்டு பெண்களோடு தொடர்புறுத்தி கொள்வது தான் எனினும் அவனால் ஏன் அக்கசப்பை முற்றாக உதற முடியவில்லை ? நாம் உலகை அறிவது முதன்மையாக நம் உறவுகளில் இருந்து தான் என்பதால் என நினைக்கிறேன். அவனது புன்னகை என்னில் மலரும் போதே ஆற்றாமை மறைந்தது.

இறுதியாக, யாயும் ஞாயும் யாரா கியரோ என காதல் கடிதம் எழுத தொடங்குவதிலிருந்து “நீ பிகாம் எடு மக்கா….” என சங்கு கதைச்சொல்லியிடம் சொல்வது வரை உங்களை இளம் ஜெவை பார்ப்பது போலவே இருந்தது. நீங்கள் என்றே நினைத்துக் கொண்டேன் ஜெ.

அன்புடன்

சக்திவேல்

***

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைஜப்பான் – கடிதம்
அடுத்த கட்டுரைஞானி : அஞ்சலிகள்