வெண்முரசு நாள் – குருபூர்ணிமா ஜூலை 5 நிகழ்வு

வெண்முரசு நாள் – குரு பூர்ணிமா – 05/07/2020 ஞாயிறு

குரு பூர்ணிமா முழுநிலவு நாளை இவ்வருடம் முதல் நாம் வெண்முரசு நாளாக கொண்டாட இருக்கிறோம். தொன்று தொட்டு, இந்த நாளில் நமது வாழ்வில் ஞான ஒளி ஏற்றிய ஆசிரியர்களை வழிப்பட்டு வருகிறோம். பாரதம் இயற்றிய வியாசரின் பிறந்தநாளாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இவ்வருடம், மகாபாரதம், தமிழில், நாவல் வடிவில், ‘வெண்முரசு’ என்ற பெயரில் எழுத்தாளர் ஜெயமோகனால் எழுதி முடிக்கப்படுள்ளது. தமிழ் மொழியில் நிகழ்ந்த மகத்தான சாதனைகளில் ஒன்று இந்த நாவல்வரிசை.

ஜனவரி 2014ல் துவங்கி, தினமும் ஒரு அத்தியாயமாக, 7 வருடங்களில் 26 நாவல்களாக 25000 பக்கங்களில் இயற்றப்பட்டுள்ள மகத்தான ஆக்கம் வெண்முரசு. இது உலகின் மிகப்பெரிய நாவல்களில் ஒன்றாகும்.

இந்நாவல்வரிசை மகாபாரதத்தை முழுமையாக நவீன வாசகனுக்கான மொழியில் மறுஆக்கம் செய்துள்ளது. மகாபாரதத்தின் மாபெரும் கதைமாந்தர்களை நுணுகி ஆராய்கிறது. அதிகம் பேசப்படாத சிறிய கதைமாந்தர்களை விரிவாக்கம் செய்கிறது. உணர்ச்சிகளையும் தத்துவங்களையும் தரிசனங்களையும் விரிவாக்கம் செய்கிறது. புராணம் இன்றைய நவீன இலக்கியமாக ஆகும் புனைவுச்செயல்பாடு இது.

இந்த பெரும் முயற்சி முழுமையடைந்து, இந்நாவல் எழுதி நிறைவு செய்யப்பட்டதை, இவ்வருடம் தொடங்கி, ஆண்டு தோறும் குருபூர்ணிமா   முழுநிலவு நாளில் வெண்முரசு வாசிப்பு, ஆசிரியருடனான உரையாடல் என கொண்டாடுவோம்.

இவ்வருடம், குரு பூர்ணிமா (ஜூலை 5, 2020) அன்று, ஆசிரியருடன் ஜூம் மீட்டிங் மற்றும் யூடியூப் லைவ் வழியாக உரையாட உங்களை அழைக்கிறோம். தங்கள் கேள்விகள், கருத்துக்களை லைவின் கமண்டில் இடலாம். வருக.

ஜூலை 5, 2020

முதல் அமர்வு :காலை 9 மணி

இரண்டாம் அமர்வு :மாலை 6.30 மணி (அயலக வாசகர்களுக்காக, பிறரும் வரலாம் )

யூட்யூப் லைவ்:

https://www.youtube.com/channel/UCGCV52HnkxPbTdLK298NKNw

ஜூம் மீட்டிங் : Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/3827655072?pwd=cWRNTUlWb3R5clcxKytWNU1LYklNUT09

Meeting ID: 382 765 5072
Password: 8965317862
(முதல் 100 பேர் மட்டும்)

வெண்முரசு வாசகர்களை அன்புடன் அழைக்கிறோம் ,

அனைவரும் யூட்யூப் லைவில் கலந்துகொள்ளலாம், வருக

விஷ்ணுபுரம் நண்பர்கள்
தொடர்புக்கு: [email protected]
வாட்ஸப் : +91 9965315137; +91 98940 33123

முந்தைய கட்டுரைவெண்முரசு,குங்குமம் -பேட்டி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-2