கரு, ஆடகம்- கடிதங்கள்

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

அன்புள்ள ஜெ

69 கதைகளில் இப்போதுதான் கரு வரை வந்திருக்கிறேன். கருவை படித்து முடிக்கவே இத்தனை நாட்கள் ஆகிவிட்டன.அந்தக்கதை சுழற்றி அடிக்கிறது. அதிலுள்ள டீடெயில்கள் வழியாகச் சென்றேன். ஷம்பாலா என்பது வெள்ளைக்காரர்கள் திபெத் மேல் உருவாக்கிய கனவு. திபெத்தின் யதார்த்தம் வேறாக இருக்கலாம். இந்தக்கனவை ஒரு காலகட்டமே சேர்ந்து உருவாக்கியது என்று சொல்லலாம். இந்தக்கதை உண்மையான வரலாற்றை கற்பனையுடன் கலந்து கலந்து நெசவுசெய்து கொண்டே போகிறது

நம் கனவில் ஒரு ஒளிமிக்க உலகம் இருக்கிறது. அது சொர்க்கம். அல்லது மண்ணிலே எங்கோ இருக்கிறது. அதை நாம் ஒரு ஆறுதலாகவும் நம்பிக்கையாகவும் வளர்த்துக்கொள்கிறோம்.பிளேட்டோ கனவுகண்ட இத்தாக்காவும் இப்படித்தான் இருக்கவேண்டும். ஒரு அற்புதமான கனவு. அது எந்தெந்த நோய்களுக்கு மருந்தாகிறது? சாவுக்கு அது மருந்து. நம்பிக்கையிழப்புக்கும் சோர்வுக்கும் மருந்து. எல்லாவற்றையும் விட அது வாழ்க்கையின் அர்த்தமின்மையை நாம் உணரும்போது அதற்கான மருந்து.

இந்தக்கதையில் ஒவ்வொருவருக்கும் ஷம்பாலா ஒவ்வொருவகையிலே நிறைவையோ விடுதலையையோ அளிக்கிறது. அது எப்படி என்று பார்த்தால் கதையை அழகாக தொகுத்துக்கொள்ள முடிகிறது

கே.ரவிக்குமார்

***

ஜெ,

கரு குறுநாவல் வாசித்தேன்,  மிக பிடித்தது,  இதில் வரும் ஆன்னி, சூசன்னா பாத்திரங்கள் நிஜ ஆளுமைகள் என்பது இன்னும் சுவாரசியத்தை அளித்தது. கதையை இரண்டாம் முறை வாசிக்க ஆடமின் தந்தையின் பெயரும் சார்லஸ் என்பது பார்த்த போது ஆச்சிரியமாக இருந்தது. அந்த வெள்ளை இளைஞன் பாத்திரம் யூகிக்க முடியாததாகவும் ஸ்வாரஸ்யமானதாகவும் இருந்தது.

மஞ்சுஸ்ரீ எனும் இயல்பை ஒட்டி அந்த குழந்தையின் உடலில் ஒளி இருந்ததை, பின் காணாமாலானதை வைத்து அக்குழந்தை ஷம்பாலாவில் சேர்ந்து விட்டான் என்று நினைத்தேன்,  ஆனால் எப்படி யூகித்தாலும் விளங்க முடியாதவனாக அவன் இருக்கிறான்.  போதாக்குறைக்கு கதையில் முடிவு இடத்தில் அவனுள் இருக்கும் அன்னையின் ஏக்கம் அவனை மறுபிறப்பு சுழலுக்குள் தள்ளி விட்டிருக்கும், அவன் அங்கிருந்து சென்றிருப்பான் என்று வேறு முக்தானந்தா சொல்வது மேலும் குழப்பி சுவாரஸ்யம் ஆக்குகிறது.

உண்மையில் அந்த இளைஞன் ஏசு என்று கூட நினைத்தேன்,  ஆனால் இது தவறான யூகம்தான்.  அவன் சுசானாவின் மைந்தன்தான்,  ஆனால் போ- சு ஆறு கரையில் இருக்கிறான்.  ஆனால் எல்லா சார்லசும் ஒரே இளைஞனா என்று கூட குழப்பம் எனக்கு உண்டு. ஏனெனில் சூசன்னா கூட சாகும் வரை வந்து பார்த்து கொண்டிருக்கும் சார்லஸ் வேறு என்று நினைத்தேன், அதாவது ஆன்னியின் முன்பு தோன்றிய இளைஞன் வேறு என்று,  அவன் அவளது பிறக்காத மகன் போல.

ஆனால் ஹெலனாவிற்கு அப்படியான பின்னனி எதுவும் இல்லையே,  அவர்க்கு தோன்றிய இளைஞன் யார்,  ஒருவேளை ஷம்பாலாவில் குடிகொண்ட சார்லஸ் ஆக இருக்கலாம், மூவர் முன்பு தோன்றிய இளைஞன் ஒருவன்தான், அது சார்லஸ்தான், அவனுள் இருக்கும் அன்னையின் ஏக்கம்தான் பெண்களுக்கு காட்சிதருபவனாக அவனை ஆக்குகிறது,  ஆனால் அங்கு ஆடம்க்கு அவனது தந்தை காட்சி தருகிறாரே/இதை மேலும் யோசித்தால் குழம்பும் என்பதால் இதோடு விட்டு விடுகிறேன், இன்னொரு முறை வாசித்து பார்த்தால் ஒருவேளை பிடிகிடைக்கலாம் :)

கரு என்பது எல்லாமே நம் ஆழத்திற்குள் உள்ளது என்பதை சொல்ல வருகிறதோ என்று தோன்றவைத்தது,  கதையின் துவக்கத்தில் முக்தானந்தா நோய்,  மெய்மை, மறுபிறப்பு எல்லாம் நுண்வடிவமாக விதையாக  நம்முள் இருக்கிறது என்று சொல்லும் வரிகள் இந்த கதையை புரிந்து கொள்ள உதவும் வரிகளோ என்று எண்ணினேன்

ஷம்பாலா என்பதை இந்த கதைக்கு முன்பு நான் கேள்விப்பட்டதில்லை,  இதை பற்றி கதையில் அறிய அறிய அதை பற்றி மேலும் அறிந்துகொள்ளும் ஆர்வம் உருவாகிறது,  உண்மையில் இந்த ஷம்பாலா வழியாக கதாசிரியர் இந்து மதம் சொல்லும் முக்தியை அதை அடையும் பாதையை அதில் செல்ல முடியாதபடிக்கு மனிதருக்குள் இருக்கும் செயலுக்கான விளைவுகள்  எனும் பிறப்பு உருவாக்க சங்கலியை பற்றி பேசுகிறது என்று எண்ணினேன்.

வந்து வழிசொல்லும் இளைஞன் பத்மசம்பவரோ என்று கூட என்ன தோன்றுகிறது.  உண்மையில் இந்த கதை சொல்லாமல் சொல்லும் விஷயங்கள்தான் அநேகம்.  அதை ஒரு பிரமாதமான கதைசூழலில் வைத்து சொல்கிறது. முன்னும் பின்னுமாக.  பெட்ரோஸ், சூசனா இருவரும் பயணம் செய்யும் பனி மலை பாதைகள் வரும் பகுதிகள் எல்லாம் மிக ஸ்வாரஸ்யமும் அழகும் கொண்டவை.  அந்த கொள்ளையன் குழந்தையை எடுத்து பார்க்கும் பகுதியும் பிரமாதமான இடம்.

உண்மையில் இந்த என் கடிதத்தில் எனக்கு  நிறைவு இல்லை, கதையின் ஆழத்தை இன்னும் நான் புரிந்து கொள்ளவில்லை,  சிலநாள் கழித்து வாசித்து பார்க்க வேண்டும்.

ராதாகிருஷ்ணன்

***

அன்புள்ள ஜெ

இந்த கொரோனா காலகட்டத்தில் நாங்கள் கிராமத்துக்கு வந்துவிட்டோம். இங்கே இன்னொரு வாழ்க்கையை வாழ்கிறோம். மும்பைக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. இங்கே ஒரு முடிவு எடுத்தோம். உள்ளூர் சாப்பாடுகளை மட்டுமே சமைத்துச் சாப்பிடுவது என்று. என்னுடைய ஞாபகத்திலே இருக்கும் பழைய சாப்பாடு வகைகளை சமைக்கவைத்துச் சாப்பிட்டேன். ஆனால் என்பிள்ளைகள் அந்தச் சுவைகளிலிருந்து மிகவும் அன்னியமாக இருந்தார்கள். நான் சொன்ன எந்த சுவையையுமே அவர்களால் சுவைக்க முடியவில்லை.

எங்களூரில் சுருளப்பம் என்ற அப்பம் உண்டு. பனையோலைக்குருத்திலே வைத்து அவிப்பது. அதை தொட்டோ பார்க்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். அப்போது ஒன்று தெரிந்தது. நாம் பழையகால ருசிகள் என்பதெல்லாம் லிமிட்டர் ஆன பொருட்களால் செய்யப்படும் ருசிகள். இவர்கள் இன்றைக்குச் சாப்பிடுவது அபண்டன்ஸ் உருவாக்கும் ருசி.

அப்போதுதான் உங்கள் கதையை புதிய கோணத்தில் புரிந்துகொண்டேன். அந்த விரிந்து ஏன் அப்படி கொண்டாடப்படுகிறது, ஏன் அந்தச் சமையல்காரர்கள் அப்படி புகழப்படுகிறார்கள்?: ஏனென்றால் அன்றைக்கு நல்ல உணவு என்பதே ஒரு வகையில் தேடிச்சென்று சாப்பிடவேண்டிய ஒரு அரிய அனுபவம் என்பதுதான். சூழ்திரு ஒரு அருமையான கதை

என். காளிமுத்து

***

அன்புள்ள ஜெ

இரண்டு கதைகள் என் மனதில் ஆழமான பதிவை உருவாக்கின. ஆடகம், மாயப்பொன். இரண்டுக்கும் தலைப்பை மாற்றிக்கூட வைத்துவிடலாம். பொன் என்பது ஒரு உருவகம்தான். தெய்வீகமானதும் அழகானதுமான ஒன்று. செல்வம் என்று அல்ல. பூ எப்படியோ அப்படி. அப்படி டிவைன் ஆன ஒன்றுதான் ராஜநாகமும் வேங்கையும். இரண்டும் இரண்டு வகையிலே வந்து அருள்புரிகின்றன. அந்த இரண்டு கதைகளிலும் உள்ல அழகுதான் மெய்மறக்கச் செய்கிறது. அர்த்தமெல்லாம் அப்புறம்தான் அவற்றை வர்ணித்திருக்கும் அழகு. அவற்றை கன்ணில் பார்ப்பதுபோல. அவை மனசிலே வளரும் அழகு. அந்த இரண்டு கதைகளில் இருந்து மீளவே முடியவில்லை

ராமச்சந்திரன் ஜி

***

***

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

 

முந்தைய கட்டுரைமறைமுகம், மூங்கில் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு என்னும் ராட்சசப் பிரதி – திரு.கார்த்திக்