சிறகு, மூத்தோள்- கடிதங்கள்

கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

சிறகு எளிமையான உற்சாகமான கதை. உண்மையில் இளமையின் வாழ்க்கையை நினைத்துப்பார்க்கும்போதும் சங்கு மாதிரி பணம் அதிகாரம் எல்லாம் இருப்பது ஒரு சாபம். கள்ளங்கபடமில்லாத ஒரு இளமைப்பருவம் இல்லாமலாகிவிடுகிறது. உலகின் எல்லா கள்ளமும் பணம் இருப்பவனுக்கு தெரிந்துவிடுகிறது. கதைசொல்லியான பையனுக்கு இருக்கும் அந்த இனிய நினைவுகள் எதுவுமே சங்குவுக்கு இல்லை. அவனுக்கு அது ஜெயிப்பதற்கான போராட்டம், வெற்றிவாகை சூடுதல் மட்டும்தான். பழைய நினைவுகூட இனிமையாக இல்லை, பதினைந்தாயிரம் லாபம் என்றுதான் மனசு ஓடுகிறது

ஆனால் இனிமையான ஒரு Coming of age அந்தப்பையனுக்குத்தான். அவனுக்கு பெண்ணின் ஆற்றல் என்ன என்று தெரியவருகிறது. அவள் சிறகு முளைத்து பறந்துபோகிறவள் என்று தெரிகிறது. அது அந்தப்பையனுக்குப் பெரிய விடுதலை. அவன் ஒரு பாஸிட்டிவான மனநிலையில் இளமையை கடந்துவருகிறான்

ஆனந்தவல்லியின் பரிதாபமான பின்னணி, அவளுடைய தயக்கம், மிகமெல்ல அவள் விடுதலை பெறுவது எல்லாமே அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. உங்கள் கதைகளின் அழகே அவை கண்முன் காட்சியாக காணத்தக்கவை என்பது. அந்த சைக்கிள் ஓட்டும் வேர்நிறைந்த பாதையையே கண்முன் பார்க்கமுடிகிறது

பாலகிருஷ்ணன் கே.

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்

ஆனந்தவல்லி என்னும் குருவியிடம்  சிறகு முளைத்த பின்னரும் பறக்க பயந்துகொண்டிருக்கும் குருவிகளை பூனை பன்னைபோல பிடித்து தின்றுவிடுமென்பதை  ஒரு பூனையே சொல்லிவிடுவதால்  அத்தனை சீக்க்கிரம் சிறகுகளை  விரித்து  கம்பீரமாக பறக்கிறாள் அவள்.

சைக்கிளோட்டத்தெரியாத  வருத்தத்தை இன்னும் அதிகமாக்கிய அழகுக்கதை

அன்புடன்

லோகமாதேவி.

***

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நான் என்னுடைய ஒரு சொந்த அனுபவத்திலிருந்தே மூத்தோள் கதையை வாசித்தேன். 1992 முதல் குடும்பத்தில் பலபிரச்சினைகள். வியாபார நஷ்டம், குடும்பச்சிக்கல்கள், ஒரு நீதிமன்ற வழக்கு. அப்போதுதான் என் நண்பர் ஒருவர் சோதிடர் ஒருவரிடம் அழைத்துப்போனார். எனக்கு சோதிட நம்பிக்கை இல்லை. அதையும் நான் அந்த சோதிடரிடம் சொல்லிவிட்டேன். அவருடைய ஆலோசனையின் பேரில் நான் காஞ்சீபுரம் அருகே உள்ள பெருங்கானூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு போய் அங்கிருக்கும் ஜ்யேஷ்டா தேவியை வழிபட்டேன். ஒரே ஆண்டில் அந்த அத்தனை சிக்கல்களிலும் இருந்து விடுபட்டேன்

அதை ஜ்யேஷ்டாவின் அருள் என்று சொல்லலாம். ஆனால் நான் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் வாசகன். நான் அதை இப்படிப் புரிந்துகொண்டேன். மூத்தாளை பார்த்ததும் எனக்குத் தோன்றியது இதுதான், வாழ்க்கை என்பது ஐஸ்வரியம் மட்டும் அல்ல இருட்டும்கூடத்தான். அதை நான் அஞ்சினேன், வெறுத்தேன். அது எனக்கு ஏன் வந்தது என்று பதறினேன். அந்தப்பதற்றம் அளித்த டிப்ரஷனால் எல்லாவற்றையும் தப்பாகச் செய்தேன்

ஜ்யேஷ்டாவை பார்த்ததும் அம்மா இதுவும் உன் ஆடல் என்றால் ஆடிக்கொள், நான் எப்படியானாலும் வெளியே வருவேன் இல்லையா என்று சொல்லிக்கொண்டேன். அதன்பின் எந்த நெகெட்டிவான விஷயமும் பாதிக்கவில்லை. இயல்புதானே என்று தோன்றியது. க்ரூடாக சொல்கிறேனே. நாம் நம் உடலில் மலம் மூத்திரத்தை வெறுக்கவில்லை. அது நம் உடல்தான் என்று நமக்குத் தோன்றுகிறது இல்லையா? அதேபோல கஷ்டங்களை பார்க்க ஆரம்பித்தேன். அதன்பின் நிதானமாக பல முடிவுகளை எடுத்தேன் வெளியே வந்துவிட்டேன்

மூத்தாள் நம் மரபில் இருக்கும் ஓர் அற்புதமான உருவகம் பற்றிய கதை. இந்த நவீன இலக்கிய ஆசாமிகளுக்கெல்லாம் புரியாது. வாழ்ந்தவனுக்கு புரியும்

என்.கே.ராமச்சந்திரன்

***

அன்புள்ள ஜெயமோகன்,

சமீபத்தில் நீங்கள் எழுதிவரும் மூத்தோள் பற்றிய கதைகளை படிக்கையில் ஒரே சமயம் அச்சமும் கவர்ச்சியும் ஏற்படுகிறது.

ஒரு நூற்றாண்டாக மிகப்பெரிய நோய்த்தொற்று நாம் அறியாததால் நோய்த்தொற்று காலங்களில் நம் முன்னோர்கள் கைக்கொண்ட தொல் வழக்கங்களை நாம் முற்றிலும் மறந்து விட்டோம் என்று தோன்றுகிறது.

பிளேகும், காலராவும், வசூரியும் பரவிய காலத்தில் கட்டப்பட்ட ஏராளமான கோயில்கள் நகரில் இன்றும் காணப்படுகிறது. இப்போது

நோய்காலங்களில் அன்னை தெய்வத்தை அடிபணிந்து வணங்கும் வழக்கத்தை எங்கும் காண முடிவதில்லை.கொரானாவால் துன்பப்படும் மக்கள் கூட்டம் அன்னை தெய்வத்தை சரணடைந்து அவள் அருள் பெற வழிபடவேண்டிய தருணம் இது. அன்னை அருள்புரிவாளாக.

நெல்சன்

***

 

கதைத் திருவிழா-23, தீவண்டி [சிறுகதை]

கதைத் திருவிழா-22, பீடம் [சிறுகதை]

கதைத் திருவிழா-21, சிந்தே [சிறுகதை]

கதைத் திருவிழா-20, சாவி [சிறுகதை]

கதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]

கதைத் திருவிழா-18, கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

கதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]

கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]

கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]

கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]

கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]

கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]

கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-2
அடுத்த கட்டுரைகழுமாடன்,சாவி -கடிதங்கள்