கிறிஸ்தவம், அவதூறுகள்…

வில்லியம் மில்லர் விக்கி 

அன்புள்ள ஜெ

என் நண்பர் ஒருவர் ஒரு டிவீட்டை எனக்கு காட்டினார். அதில் நா.மம்முது அவர்களின் ஒரு பேட்டியை ahI Maz என்பவர் சுட்டி கொடுத்து இப்படி எழுதியிருந்தார். jeyamohan to his sanghi readers: ‘christians in tamil nadu have not contributed anything to tamil culture’ not that it should be a prerequisite for the minorities to have contributed to a ‘culture’ for them to be seen as ‘bonafide’, but the contribution of tamil christians & tamil muslims to tamil language/society is immense.

நான் உங்கள் தளத்திற்கு புதியவன். இப்படி நீங்கள் சொல்லியிருக்கிறீர்களா என்று சந்தேகப்பட்டு நான் உங்கள் தளத்தில் தேடினேன். ஆச்சரியமாக தமிழில் கிறிஸ்தவ, இஸ்லாமிய இலக்கியம் சார்ந்து மிக அதிகமான தகவல்கள் அளிப்பது உங்கள் தளம்தான். ஏராளமான கட்டுரைகள், குறிப்புகள். வெளியே மதம் சார்ந்த அமைப்புகளில்கூட போதுமான அளவுக்குச் செய்திகள் இல்லை. தமிழில் வேறெந்த நவீன எழுத்தாளரும் இந்த அளவுக்கு அரிதான நூல்களை எல்லாம் அறிமுகம் செய்து எழுதியதுமில்லை.

மம்முது அவர்கள் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் பற்றி பேசுகிறார். மம்முதுவை முதலில் அறிமுகம் செய்து, அட்டைப்படத்தில் போட்டு, ஆபிரகாம்பண்டிதர் பற்றிய விரிவான பேட்டியை வெளியிட்டதே நீங்கள் நடத்திய சொல்புதிது இதழ்தான். அந்த இதழே ஆபிரகாம் பண்டிதருக்கு தயாரிக்கப்பட்டது.

அப்படியென்றால் இவர்கள் ஏன் இப்பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள். அதுவும் போலி ஐடியில்? நான் இணையத்தில் தேடினால் இப்படி ஒரு நூறு ஐடிக்களாவது வெறியுடன் பொய்யைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். தமிழில் இந்த அளவுக்கு எந்த எழுத்தாளரும் பொய்ப்பிரச்சாரத்திற்கு ஆளானதில்லை என நினைக்கிறேன்

சக்தி குமார்

***

அன்புள்ள சக்தி,

இது எல்லா தரப்பிலும் நடக்கிறது. இஸ்லாமிய, கிறிஸ்தவ தரப்புகளில் எந்த வாசிப்பும் இல்லாமல் செவிவழிச்செய்தியாலேயே ஒரு காழ்ப்பை உருவாக்கிக்கொண்டு அதைக் கொட்டுகிறார்கள். திமுகவினர், கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல அதே அளவுக்கு இந்துத்துவர்களும், பிராமணர்களும் காழ்ப்பையும் திரிப்பையும் கொட்டுவதைக் காணலாம். அத்தனை பேருக்கும் ஒரே பதில், எல்லாமே இணையத்தில் கைதொடும் இடத்தில் உள்ளது, படித்துப் பாருங்கள் என்பதுதான்.

ஆனால் மிகப்பெரும்பாலானவர்கள் படிக்கமாட்டார்கள். தங்கள் காழ்ப்புகளை தக்கவைத்துக்கொள்ளவே முயல்வார்கள். ஏனென்றால் இங்கே பெரும்பாலானவர்களின் அரசியல்-அறிவுத்தள நம்பிக்கைகள் அவர்களின் சாதி, மதம் சார்ந்தவை. அனேகமாக பத்துவயதுக்குள் அவை முடிவாகிவிடுகின்றன. அதன்பின் அதில் எந்த வளர்ச்சியும் இருப்பதில்லை – காழ்ப்புகள் மட்டும் திரட்டிக்கொள்ளப்படும்.

நான் பேசிக்கொண்டிருப்பது இவர்களிடம் அல்ல, தன் ரசனை அறிவுத்தரப்பு ஆகியவற்றை சொந்த தேடலால் உருவாக்கிக்கொள்ளும் மிகச்சிறுபான்மையினரான சிலரிடம். அவர்களின் நிலைபாடுகள் அவர்களின் பிறப்பால் தீர்மானிக்கப்பட்டவை அல்ல.

ஜெ

***

விவிலியம், புதிய மொழியாக்கம்

செயல்யோகத்தின் சுவடுகள்

கிறித்தவ இசைப்பாடலாசிரியர்கள்

இறைப்பணியும் கல்விப்பணியும்- கால்டுவெல்

கிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்

தமிழ் ஆன்மிக மறுமலர்ச்சியின் வரலாறு

யோகமும் கிறித்தவமும்

சில கிறித்தவப்பாடல்கள்

கிறித்தவர்கள்மீதான தாக்குதல்கள்

இந்துத்துவம்,கிறித்தவம்:கடிதங்கள்

தமிழில் சிறுபான்மை இலக்கியம்

சிறுபான்மையினர் மலர்கள்

தமிழில் இஸ்லாமிய இலக்கியம்

மதம் சார்ந்த சமநிலை

மதமாற்ற தடைச்சட்டமும் ஜனநாயகமும்

ஆபிரகாம் பண்டிதரும் பிராமணர்களும்

ஆன்டனி டிமெல்லோ,கிறித்தவ,இந்து உரையாடல்

கிறித்தவப்பாடல்கள், கடிதங்கள்

வேதநாயகம் சாஸ்திரியார்- இப்போது

வேதநாயகம் சாஸ்திரியார் -கடிதம்

கிறித்தவ இசைப்பாடல்கள் -கடிதம்

கிறிஸ்தவ இசைப்பாடல்கள்- கடிதம்

கிறிஸ்தவர் மீது தாக்குதல்:கடிதங்கள்

கிறிஸ்தவர் மீது தாக்குதல்:கடிதங்கள்

கிறித்தவ இசைப்பாடல்கள் -கடிதம்

சைவத்தொன்மங்களும் கிறித்தவமும்

கேட்கப்படுகின்றனவா பிரார்த்தனைகள்?

மதம் , ஆன்மீகம்,கிறித்தவம் :ஒரு கடிதம்

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்

தமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும்.

ஆபிரகாம் பண்டிதர்

நமக்குரிய சிலைகள்

தமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1 பேட்டி : இசை ஆய்வாளர் நா. மம்மது சந்திப்பு : ஜெயமோகன்,வேதசகாய குமார்

முந்தைய கட்டுரைதூவக்காளி,கீர்ட்டிங்ஸ்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதைத் திருவிழா-20, சாவி [சிறுகதை]