அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
கடந்த மூன்று வருடங்களாகத் தங்களது படைப்புகளை உங்களது இணையதளத்திலும் உங்களது புத்தகங்களின் வாயிலாகவும் வாசித்தும் ரசித்தும் வருகிறேன். கடந்த வாரங்களில் தங்களின் சிறுகதைப் பிரவாகத்தில் மிகவும் ஈர்த்த சிறுகதை ”கெத்தேல் சாகிப்”. இன்றைய இந்து ஆங்கில நாளிதழில் மதுரையிலும் அவரைப் போல, எளியோரின் பசிப்பிணி தீர்க்கும் ஒரு முதியவர் பற்றிய தகவலை நான் வாசித்தேன். அந்த இணைப்பை இத்துடன் உங்களுக்கு அனுப்பி அச்செய்தியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
http://www.hindu.com/mp/2011/03/10/stories/2011031050650200.htm
மனிதநேயம் எங்கெங்கும் நிறைந்திருக்கிறது. உங்களது எழுத்துக்கள் அதை எங்களுக்கு மறு அறிமுகம் செய்கிறது. நன்றி
அ. லட்சுமணலால்
கதைகள்