ஏழாவது,சுக்ரர்- கடிதங்கள்

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

அன்புள்ள ஜெ

ஏழாவது கதையில் மோசே உயிர்த்தெழுவதற்கான ஆறு முயற்சிகளாகத்தன் ஆபிரகாம் சார் எழுவதை பார்த்தேன். அது உண்மையில் நடந்ததா கதையா என்பது வேறுகேள்வி. ஆனால் அது ஓர் உருவகம். அடித்து அடித்து சாகவைக்கப்படும் மோசேயின் ஆன்மாதான் அவர். ஆனால் எழுந்துகொண்டே இருக்கிறார். கடைசியில் எழுந்து வந்துவிடுகிறார்.

அந்த ஏழாவது எழுகை எப்படி நடக்கிறது? அந்த கிழவியைக் கொன்றதை அவன் பார்க்கிறான். அவன் மனதில் இருப்பது அம்மா. அவன் அங்கே அந்த திருட்டைச் செய்வதற்காக வந்ததே அம்மாவுக்காகத்தான். அதுதான் ஏழாவது சாவியா?

ஜெய்சிங்

***

வணக்கம் ஜெ

ஏழாவது சிறுகதையை வாசித்தேன். ஏழாவதாக எழுந்து வருவது மோசஸில் இருக்கும் இறைமையே எனலாம். ஆறு முறையும் இறந்தும் உயிர்த்தும் ஏழாவதாகத் தனக்குள் தேவனைக் காண்கிறான்.

அரவின் குமார்

***

கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

சுக்ரர் கதை உங்கள் கதைகளில் அடிக்கடி வரும் அபூர்வமான திறமைசாலிகளில் ஒருவரை பற்றியது. கலைஞர் அல்லது யோகி. அவர் செய்யும் யோகம் பெருமாளுக்குரியதுதான். அவர் அந்த விளையாட்டை ஏன் ஆடுகிறார். வாழ்க்கை முழுக்க அவரை ஏன் அது ஈர்த்து உள்ளே வைத்திருக்கிறது? ஏன் ஒருவர் அப்படி தவம் செய்யவேண்டும்?

என் அப்பா சொல்வார், ஒருநாள் உட்கார்ந்து ஒரு எறும்புகூட்டை மூணுமணிநேரம் பார்த்தால்போதும், பெருமாளின் லீலையை பார்த்துவிடலாம் என்று. அதைத்தான் இங்கே அரிகிருஷ்ணன் சொல்கிறார். அது பெருமாளின் லீலையேதான்

சந்தானம்

***

அன்பு ஜெ,

இந்தக் கதை வாசித்து முடித்த போது உங்களுக்குப் பிடித்த “உத்திஷ்ட ஜாக்ரத” என்பதையும் நீங்கள் எழுதின மாஸ்டர் கட்டுரையையும் மனதில் திரும்பப் பார்த்தேன். எந்த ஒன்றிலும் முழுமையை அடைய அதன் ஆழம் செல்ல வேண்டும். இலக்கடையும் வரையான தீவிரச் செயல்பாடு வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் என்னில் ஏற்றிக் கொள்கிறேன்.

பணியை விட்டு அகன்று பின்னும் அதிலிருக்கும் தீவிர செயல்பாடு அவரை அதில் மாஸ்டர் ஆக்கியிருக்கிறது. “இது பெருமாளில்லைன்னு யாரு சொன்னது?”  என்று அவர் சொல்லும் போது அந்த நிறைவைக் கண்டேன். நீங்கள் சொல்லும் நிறைவை.

அன்புடன்

இரம்யா.

***

கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]

கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]

கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

முந்தைய கட்டுரைமலையரசி, மூத்தோள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]