வேதநாயகம் சாஸ்திரியார் -கடிதம்

கிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்

அன்புள்ள ஜெ,

நீங்கள் கிறிஸ்தவ இசை மூன்று அடுக்குகள் என்ற பெயரில் வெளியிட்ட கட்டுரை பற்றி சிலவற்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். உங்கள் கட்டுரையுடன் அளிக்கப்பட்டிருக்கும் ‘வேதநாயகம் சாஸ்திரியார் பாடல்கள் 1980’ என்னும் யூடியூப் வீடியோவில் அளிக்கப்பட்டிருக்கும் படம் முதல்வேதநாயகம் சாஸ்திரியார் அல்ல. அவருடைய வாரிசுகளும் தங்களை வேதநாயகம் சாஸ்திரியார் என்றே அழைத்துக்கொள்வார்கள்.

அந்த யூடியூப் வீடியோவில் இருப்பவர் இன்றைய வேதநாயகம் சாஸ்திரியார். இப்போது அவருக்கு 90 வயது இருக்கலாம். கிறிஸ்தவ கீர்த்தனைகளை எழுதிய வேதநாயகம் சாஸ்திரியாரின் வழிவந்தவர் அவர்.  சென்ற நூறாண்டுகளாக வேதநாயகம் சாஸ்திரியாரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேதநாயகம் சாஸ்திரியார் என்று பட்டம் கட்டப்படும். அவர் தேவஊழியங்களை செய்வார். இது அக்குடும்பத்தின் பொதுவான பட்டமாகும்.

இச்செய்தியை உங்கள் தளத்தில் வெளியிடுங்கள். இப்போது அவருடைய மகன் புதிய வேதநாயகம் சாஸ்திரியார் ஆக பட்டம்கட்டப்பட்டிருக்கிறாரா என்று தெரியவில்லை. கேட்டுக்கொள்ளவும்

அன்புடன்

டேவிட் ஆனந்த் குமார்

சென்னை

 

முந்தைய கட்டுரைகிருமி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎப்படி எழுதுகிறேன்?