மரங்களின் மனிதர்-அஞ்சலி

மரங்கள் மேல் கொண்ட காதலால் வாழ்நாளெல்லாம் சாலையோரங்களில் மரங்கள் நட்டு வளர்த்த முதியவர் சத்தியமங்கலம் ஏழூர் அய்யாசாமி அவர்களைப்பற்றி தெரிந்திருக்கலாம். சில இதழ்களில் அவரைப்பற்றி செய்தி வந்திருக்கின்றது.

அவரைப்பற்றிய செய்தி இந்த பதிவில் உள்ளது. மரங்களின் தந்தை அய்யாசாமி

அய்யாசாமி அவர்கள் நேற்று 86 ஆவது வயதில் மரணமடைந்துவிட்டார். இச்செய்தியை ஈரோடு கதிர் அவரது பதிவில் எழுதியிருக்கிறார் .3000 பிள்ளைகளின் தந்தை

அறம் கதைவரிசையில் அசாதாரணமான மனிதர்களை வாசித்த பலர் அத்தகையோரை தாங்கள் சந்தித்ததில்லையே என்பார்கள். சந்திக்கலாம். நம்மைச்சுற்றி அவர்கள் இயல்பாக வாழ்கிறார்கள். நம் கணக்குகளுக்கு வெளியே கொஞ்சம் பார்க்க முடிந்தால்போதும்

பெரியவர் அத்தகையவர். அவருக்கு என் அஞ்சலி

முந்தைய கட்டுரைஸ்பாம்
அடுத்த கட்டுரைகலாப்ரியா