நெடுநிலத்துள் [சிறுகதை] அகரமுதல்வன்
அன்புள்ள ஜெ
நெடுநிலத்துள் கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். ஒரு கதையை ஏன் உருவகமாக எழுதவேண்டும்? அதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று உண்டு. கடந்தகாலம் அப்படியே உருவகமாக ஆகிக்கொண்டே இருக்கிறது. தொன்மம் அல்லது புராணமாக ஆகிவிடுகிறது. ஏற்கனவே நாகர்களின் வரலாறு முதல் எல்லாமே அப்படித்தான் இருக்கிறது. அதை அங்கே கொண்டுசென்று சேர்ப்பது என்பது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு. ஒரு குலப்பூசாரி போல எழுத்தாளன் மாறும் இடம் இது என்று நினைக்கிறேன்.
கோயில்களில் பின்னம் வந்த மூலவர் சிலைகளை மண்ணுக்குள் புதைப்பார்கள். அல்லது நீரில்போட்டுவிடுவார்கள். கடலில் போடுவதும் உண்டு. அது அகற்றுவது கிடையாது. அது ஏற்கனவே மண்ணிலும் நீரிலும் இருக்கும் தெய்வங்களுடன் சேர்ப்பதுதான். அகரமுதல்வன் அதைத்தான் இக்கதையில் செய்கிறார் என்று நினைக்கிறேன்
சங்கர்
***
வில்லுவண்டி[ சிறுகதை] தனா
அன்புள்ள ஜெ வணக்கம்…
அன்பு கருணை ஆதரவு மேலிருந்து தான் கீழே செல்லும் கீழிருந்து மேலே வருவது அரிது. பெற்றோருக்கு குழந்தைகள் என்னவோ அவ்வாறல்ல குழந்தைகளுக்கு பெற்றோர். வளர்ந்து காலூன்றிய பிறகு பெற்றோரின் தேவைகள் தீர்ந்த பிறகு,தன் வாழ்வை நிலைநிறுத்தவும் தன் குழந்தைகளை பராமரிக்கவும் சென்றது போக எஞ்சியதே பெற்றோரை நோக்கி பாயும். பெரும்பாலும் இதுதான் சில விதிவிலக்குகள் இருக்கலாம்.
நடை, உடை கெட்டு படுத்த படுக்கையில் மலம் மூத்திரம் கழிப்பவர்கள் எவ்வளவு பரிதாபத்திற்குரியவர்களோ, அதே அளவு பரிதாபத்திற்குரியவர்கள் அவர்களைப் பராமரிப்பவர்கள். பொறுமையையும் கனிவையும் கணந்தோறும் சோதிக்கும்.பிரத்தியேக அறை, நவீனக் கருவிகள், கொஞ்சம் உடலிலும் பொருளாதாரத்திலும் பலம் இருந்தால் சமாளிக்கலாம்.
செந்தட்டி வாழ்ந்து கெட்டவர், இளமையில் பல்லாயிரங்கள் சம்பாதித்தவர் முதுமையில் ஐம்பதிற்கும் நூறுக்கும் கையேந்தும் நிலைக்கு சென்று விட்டார். மல மூத்திரம் சுத்தம் செய்யும் சுமையோடு வறுமை எனும் பெருஞ்சுமையும் அவரை அழுத்துகிறது.
தன் பெருமிதத்தின் வெற்றிகளின் அடையாளமான வில்லு வண்டி சிதைந்த போதே சிதைய தொடங்கிவிட்டது அவரின் வாழ்வு, எஞ்சிய ஒற்றை சக்கரத்தையும் அடிமாட்டு விலைக்கு விற்று விட்டுத்தான் காதல் இணையர் தங்கள் இறுதி ஊர்வலத்தை தொடங்குகின்றனர். அவர்கள் வாழ்வின் பிள்ளையார் சுழியான வில்லுவண்டியே முற்றுப்புள்ளி வைக்கவும் உதவுகிறது. கௌமாரியின் சன்னிதியில் தொடங்கிய வாழ்வு அவள் காலடியிலேயே அடித்துச் செல்லப்படுகிறது.
என் அம்மாவின் அம்மா மனைவியின் அம்மாவின் அம்மா கிட்டத்தட்ட இருவருமே படுத்த படுக்கை ஆனவர்கள் ஒருவர் மரணித்து விட்டார். அருகிருந்து கவனித்ததில் இயலாமை முதுமை அதிகரிக்க அதிகரிக்க வாழ்வின் மீது பற்று கூடுகிறது பிடி இறுகுகிறது அவர்களுக்கு. உணவுகள் மீது நொறுக்குத் தீனிகள் மீது ஏக்கம் அதிகரிக்கிறது. எவ்வளவு நாம் கவனம் செலுத்தினாலும் அவர்களுக்கு போதும் என்ற உணர்வு வருவதில்லை. ஒரு குழந்தை எவ்வாறு ஒரு வீட்டின் மையமாக இருக்கிறதோ கவனத்தை கோருகிறதோ அதைப்போலவே தன்னை சதா முன் நிறுத்திக் கொள்வார்கள். உயிர் தீபம் காற்றில் கரைவதை உணர்ந்த ஆழம் போடும் கூச்சல் மெல்ல மெல்ல அதிகரிப்பதை காணமுடியும்.
பதினைந்து வயதில் ஆவுடையம்மாள் தன் உயிர் விசையால் இறுகப்பற்றிய வில்லு வண்டி அவள் கடைசி சிரிப்பில் என்னவாக இருந்திருக்கும்?
உள்ளம் பொங்கும் பரவசத்துடன் செந்தட்டியும் ஆவுடையம்மாளும் ஊரை புறக்கணித்து திருமண ஊர்வலத்தை நடத்தியபோதும் எதையும் பார்க்காமல் ஆறு ஓடிக்கொண்டிருந்தது, உடலும் உள்ளமும் சிதைந்து நடத்திய இறுதி ஊர்வலத்தின் போதும் ஆறு எதையும் பார்க்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது…
வாழ்வு இயற்கை என்னும் பேராற்றிற்க்கு நாம் ஒரு பொருட்டே இல்லை….
மு.கதிர் முருகன்
கோவை
***
9.கிருமி [சிறுகதை] உமையாழ்
8.நெடுநிலத்துள் [சிறுகதை] அகரமுதல்வன்
7.உஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்
6.வில்லுவண்டி[ சிறுகதை] தனா
5.உதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்
4.கவி [சிறுகதை] மணி எம்.கே.மணி
3.இசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்
2.அவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்
1.கன்னி- [சிறுகதை] ம.நவீன்
=======================================================
நெடுநிலத்துள் – கடிதங்கள்
புதியகதைகள்- கடிதங்கள்-1
புதிய கதைகள்- கடிதங்கள்
உஷ்ணம் – கடிதங்கள்
வில்வண்டி- கடிதங்கள்
உதிரம்,கவி,இசூமியின் நறுமணம்- கடிதங்கள்
இணைவு, ராஜன் – கடிதங்கள்
கூடு,பிறசண்டு- கடிதங்கள்
இசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்
உதிரம்- கடிதங்கள்
கவி- கடிதங்கள்
புதியகதைகள்- கடிதங்கள்
இசூமியின் நறுமணம்-கடிதங்கள்
அவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்
தெய்வீகன்,நவீன் சிறுகதைகள்- கடிதங்கள்
இசூமியின் நறுமணம்-கடிதங்கள்
இசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்
உதிரம்- கடிதங்கள்
கவி- கடிதங்கள்
கன்னி- கடிதங்கள்