கிருமி- கடிதங்கள்

கிருமி – உமையாழ்

அன்புள்ள ஜெ

உமையாழின் கிருமி கதை நேரடியான பிரச்சாரக்கதை போல் இருக்கிறது. அதிலுள்ள ஒருகுரல்தான் அதை கதையாக்குகிறது. முன்பு பூச்சிகளையும் சிற்றுயிர்களையும்கூட கொல்லக்கூடாது என்று சொன்னவர் அவர் என்பது. கிருமி என இங்கே வந்து சூழ்ந்துகொள்வது ஆதிக்கம் வன்முறைதான் என்பது.

நேரடியான கதையாக இருந்தாலும் அதிகாரத்தின் முன் மனிதர்கள் வெறும் உடல் மட்டுமாக மாறிவிடுவதன் இருட்டைச் சொல்லும் கதை என்ற அளவில் முக்கியமான கதை என்று சொல்வேன்.. அப்படிப்பார்த்தால் நோயும் கூட ஓர் அதிகாரமே. அதிகாரம் ஆதிக்கத்திற்கு உள்ளாகும் மனிதர்களின் தனித்தன்மையை கவனத்தில் கொள்வதில்லை. அவர்களை அது சராசரி ஆக்குகிறது. பொது அடையாளம் அளிக்கிறது. அதன்பின் அவர்களைக் கையாள்வது அவர்களுக்கு எளியது.

அந்நிலையில் தன் தனித்தன்மையை பேணிக்கொள்வதும் அதற்காக நிலைகொள்வதும்கூட அதிகாரத்திற்கு எதிரான செயல்தான். நோயே கூட கலாச்சாரத்தை அழிக்கும் புல்டோசராக மாறிவிடக்கூடாது

செல்வக்குமார்

***

வணக்கம் ஜெ

உமையாழின் கிருமி கதையை வாசித்தேன். பணிவு இருக்கும் இடங்களில் தொற்றி அடக்க முயலும் ஆணவம் எனும் கிருமியின் கதை. என்றென்றைக்குமாகப் அடக்குமுறையின் எதிர்க்கும் பணிவின் திமிறலுக்காகக் காத்திருக்கிறது மனிதனுள் உறைந்திருக்கும் ஆணவம்

அரவின் குமார்

மலேசியா

***

அன்புள்ள ஜெ

கிருமி ஒரு கூர்மையான பிரச்சினையை முன்வைக்கும் கதை. இலங்கையில் இஸ்லாமியர் உடல்களை கொரோனோ காலத்தில் அவர்களின் எண்ணத்தை மீறி எரித்தார்கள் என்பதுதான் இந்தக்கதைக்கான தூண்டுதல் இஸ்லாமியர்கள் மறுஎழுகையை நம்புபவர்கள் என்னும்போது இது அவர்களின் நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்

ஆனால் முதல்கட்ட உணர்ச்சியிலேயே கதையை எழுதிவிட்டார் என்று நினைக்கிறேன். கிருமி என்பது அடக்குமுறைதான், வெறுப்புதான், அடையாளத்தைஅழிக்கும் வெறிதான் என்ற ஒற்றை எண்ணத்தையே இந்தக்கதை முன்வைக்கிறது. அதை முன்வைப்பதற்கு அந்தச்சூழலில் இருந்து இன்னும் வலுவான படிமங்களை கண்டடைந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். சாவு உடை அணிவிப்பது முதல் பல விஷயங்கள் உள்ளன. நுணுக்கமான தகவல்களை அளித்து அந்த உடல் கையாளப்படுவதை சித்தரிக்க முடிந்திருந்தால்கூட இன்னும் வலுவாக இருந்திருக்கும்

ஆனாலும் ஒரு நேரடியான குரலாக இக்கதை அழுத்தமானதாகவே உள்ளது

ரவிச்சந்திரன்

***

9. கிருமி [சிறுகதை] உமையாழ்

8. நெடுநிலத்துள் [சிறுகதை] அகரமுதல்வன்

7. உஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்

6. வில்லுவண்டி[ சிறுகதை] தனா

5. உதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்

4. கவி [சிறுகதை] மணி எம்.கே.மணி

3. இசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்

2. அவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்

1. கன்னி- [சிறுகதை] ம.நவீன்

=======================================================

நெடுநிலத்துள் – கடிதங்கள்
புதியகதைகள்- கடிதங்கள்-1
புதிய கதைகள்- கடிதங்கள்
உஷ்ணம் – கடிதங்கள்
வில்வண்டி- கடிதங்கள்
உதிரம்,கவி,இசூமியின் நறுமணம்- கடிதங்கள்
இணைவு, ராஜன் – கடிதங்கள்
கூடு,பிறசண்டு- கடிதங்கள்
இசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்
உதிரம்- கடிதங்கள்
கவி- கடிதங்கள்
புதியகதைகள்- கடிதங்கள்
இசூமியின் நறுமணம்-கடிதங்கள்
அவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்
தெய்வீகன்,நவீன் சிறுகதைகள்- கடிதங்கள்
இசூமியின் நறுமணம்-கடிதங்கள்
இசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்
உதிரம்- கடிதங்கள்
கவி- கடிதங்கள்
கன்னி- கடிதங்கள்

முந்தைய கட்டுரைதேனீ ,ராஜன் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைவேதநாயகம் சாஸ்திரியார் -கடிதம்