கதைகள்- கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ

உங்கள் அறுபத்தொன்பது கதைகளையும் வாசித்தபிறகே எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன் இன்றைக்குத்தான் முடித்தேன். நான் கொஞ்சம் மெதுவாக படிப்பவள். தமிழ் சொந்தமாக படித்ததுதான். அமெரிக்கா வந்தபிறகு. சென்னையில் தமிழே இல்லாமல்தான் படித்தேன். இங்கே வந்து ஐரோப்பிய இலக்கியம் வழியாக உள்ளூர் இலக்கியத்துக்கு வந்தவள்நான்

தமிழிலக்கியத்தை வாசிக்கும்போது இரண்டு அனுபவங்கள். ஒன்று நான் அறியாத என்னுடைய சமூகச் சந்தர்ப்பச்சூழலை காட்டும் கதைகள். அவை எனக்கு தேவையாக இருக்கின்றன. அவற்றை நான் வேறெங்கும் படிக்கமுடியாது. சோ.தர்மன், இமையம் போன்றவர்கள் எழுதும் கதைகள். அவற்றை நான் விரும்பி வாசிப்பதுண்டு. நான் கொஞ்சம்கூட அறியாத சமூகம். என்னை நான் அந்தச் சமூகத்தின் கனி என்று சொல்வேன் என்றால் அதுதான் வேர்ச்சதுப்பு, சரியா?

ஆனால் நான் தேடுவது இன்னும் கொஞ்சம் மேலே. அதாவது நம்முடைய பண்பாட்டின் சூட்சுமங்களில் இருந்து எழுதப்படும் கதைகள். அந்தமாதிரியான கதைகள் இங்கே ஐரோப்பாவிலே நிறைய உண்டு. அவைதான் இங்குள்ள சம்பத்து

ஆனால் இருபத்தாறு ஆண்டுகளாக இங்கே இருந்தாலும்கூட என்னால் ஒன்று சொல்லமுடியும், இந்தக்கதைகளிலே உள்ள பண்பாட்டு சூட்சுமங்களை நம்மால் தெரிந்துகொள்ள மட்டும்தான் முடியும். அவற்றிலிருந்து நம் சப்கான்ஷியஸ் [நனவுலி?] கனவுகளை உருவாக்கிக்கொள்ள முடியாது. அது சட்டென்று அதுவாக மலரவேண்டும். அது கனவாக வரவேண்டும். அது நமக்கு அப்படி வராது.

பெரிய மோகத்துடன் தெரிந்துகொள்வதற்காக முயன்றுகொண்டே இருப்போம். இதெல்லாம் நமக்கு அந்நியம் என்பதனால் எல்லாமே சிறப்பாக தெரியும். கொஞ்சம் கொஞ்சமாக இதெல்லாம் Experience of Knowledge மட்டும்தானா என்று தோன்றி சலிப்பு வந்துவிடும்

அதிலேயும் சில விஷயங்கள் உண்டு. எனக்கு கிறிஸ்தவ ஆர்க்கிடைப்ஸ் அப்படி கனவாக கொஞ்சம் ஆகும். நிகாஸ் கஸண்ட்சக்கீஸ் வாசித்து மெய்சிலிருப்பு அடைந்திருந்தேன். ஆனால் ஐரோப்பாவின் பாகன் மித்துக்களோ அல்லது கிரேக்க மித்துக்களோ அப்படி இல்லை.

நான் இங்கே வந்தபோது மோபிடிக் படித்து ஏன் இது எனக்கு கதையாக மட்டுமே இருக்கிறது என்று நினைத்திருக்கிறேன். சமீபத்தில் ராபர்ட்டோ பொலோனா படித்து ஏன் இது இன்ஃபர்மேஷன் [செய்தி] ஆக மட்டுமே உள்ளே போகிறது என்று நினைத்திருக்கிறேன். ஆனால் சீனாவிலிருந்து வந்தவர்களுக்கும் அப்படித்தான் இருக்கிறது. ஆச்சரியமான விஷயம் இங்கிருக்கும் கறுமையினத்தவருக்கும் அப்படித்தான் இருக்கிறது.

இந்த விலகுதல் இல்லாமலிருக்கும் கதைகளை நான் இந்தியாவிலே வாசிக்க விரும்பினேன். ஆங்கிலத்திலே வாசித்ததில் River of Fre – Qurratulain Hyder எனக்கு அப்படி ஒரு பெரிய அனுபவத்தை அளித்தது. பல வங்காள நாவல்களிலும் அந்த அனுபவத்தை அடைந்தேன். உங்கள் நாவல்களை இன்னும் நான் படிக்கவில்லை. ஆனால் இந்தக்கதைகளில் பல கதைகள் எனக்கு அப்படி ஒரு கனவுபோன்ற கற்பனையை அளித்தவை. இவைதான் நம்முடைய கிளாஸிக்குகள் என்று தோன்றியது

ஆயிரம் ஊற்றுக்கள் ஒருவகையிலே நம்மை ஊடுருவிச்சென்றது. போழ்வு அதைப்போல. அதிலுள்ள அரசியல் உறவுகளின் சிக்கல்கள் நம்மைப்போன்ற சமூகத்திலே மட்டும் உள்ள விஷயம். ஆடகம் போன்ற கதைகள் எல்லாம் முழுசாகவே இந்தியத்தன்மை உடையவை.

யானைகளைப் பற்றிய கதைகளை எல்லாம் வேறெந்த மொழியில் வேறெந்த எழுத்தாளரும் எழுதமுடியாது. ஏனென்றால் இந்தியாவில் அதிலும் தென்னிந்தியாவில் மட்டும்தான் யானைக்கும் மனிதனுக்கும் இப்படி ஒரு நெடுங்கால உறவு இருக்கிறது. அந்த உறவிலிருந்தே இந்த கதைகள் வரமுடியும். ஆப்ரிக்க யானைகள் பழகுவதில்லை. தாய்லாந்தில் யானையுடன் இப்படி ஒரு கம்யூனிடி உறவு கிடையாது

அதேபோல ஒவ்வொரு கதையாகச் சொல்லிக்கொண்டே போகலாம். இறைவன், ஆகாயம் எல்லாம் unique ஆன இந்தியக்கதைகள். தமிழ்க்கதைகள். உலகமெங்கும் அலைந்தாலும் இங்கேதான் அவற்றை படிக்கமுடியும். அவை ஸ்பிரிச்சுவலானவை [ ஞானம்?] அவற்றின் ஆழமான நடுப்பகுதி இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளாக உருவாகி திரண்டு வந்த ஒன்று. ஷம்பாலா போல ஒன்று. ஒரு கூட்டுசேர்ந்த கனவு.

சூழ்திரு கதையிலே மிகமிக நுணுக்கமான ருசி சொல்லப்பட்டிருக்கிறது. அது மிகவும் ரீஜினல் [கிராமமான] ஆன ஒன்று. ஒரு இடத்தில்தான் இருக்கமுடியும். வேறே எங்கும் இருக்கமுடியாது. அதனுடைய தூய்மைப்படுத்தல் refinement தான் எல்லா கலையிலும் சாதனையாக கருதப்படுகிறது. இந்தக்கதைகளை நான் முழுசாக உள்வாங்க இன்னும் காலமாகும். ஆனால் சந்தேகமே இல்லாமல் ஒரு Experience of Great Art. நன்றி

சுபத்ரா.

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்கள் ஊரடங்கு கால இலக்கிய வேள்வியில் பங்கு கொள்ள வாய்ப்பு கிடைத்தது ஒரு மாபெரும் அதிருஷ்டம். எனக்கு கதைகள் படிப்பதுதான் ஒரே ஆன்மத் தேடல். இலக்கியம் தான் என் மதம். ஆகவே விஸ்வரூபம் எடுத்த உங்கள் பித்து என்னையும் உள்ளிழுத்துக்கொண்டது. என் எல்லா நாட்களும் உங்கள் புனைவுடனே ஆரம்பித்து உங்கள் புனைவுடனே முடிவடைந்தன. நன்றி. இந்த நாட்களை அர்த்தமுள்ளவைகளாக்கியதற்கு,

உங்கள் கதைகளுக்கு வந்த கடிதங்களுக்கு அப்பால் ஏதும் சொல்லிவிட முடியாது. என்றாலும் என்னை மிகவும் பாதித்த கதைகளை குறிப்பிடாமல் இந்த கடிதம் முடிவடையாது. தன் வேலை செய் நேர்த்தியை கலையாய் மாற்றி, தான் கலைஞன் என்கிற கர்வத்துடன் உலகை துச்சமாக பார்க்கிற மாடன் பிள்ளை தன்னையே அந்த கலையாய் மாற்றிய ஒரு குருவியின் முன் கண் கலங்கி பணியும் குருவி என்கிற கதை என் உள்ளத்திற்கு நெருக்கமான கதை.

காமப் பொம்மைகளுக்கு மாதிரியாய் தன் உடலை விற்ற பெண்ணையும் தேவியாய் காணும் யாதேவி, பாம்பும் சேர்ந்த லூப்பு, வான் கீழ் என்கிற அழகான காதல் கதை, ஆண் பெண் உறவின் சுழல்களை சொல்கிற ஆழி, கள்ளன்களையும் நேசிக்க வைக்கிற கதைகள், பெண்களின் பயணத்தில் உடன் வரும் நற்றுணை,, கலைஞன் இறைவனாகிற இறைவன் கதை, வனவாசத்தில் இருந்தாலும், கலைஞர்களாகிற போது அரசர்களாய் தோன்றும் சாமியப்பாவும், குமரேசனும், தன் கலை மூலம் தேவியாகவே மாறும் தேவி,  பாட்டைக் கேட்க விரும்பியும் வர முடியாமல் போன பெண்ணிற்காய் வீட்டிற்கே செல்கிற பயில்வான் பாகவதர், ஜானகிராமனின் ஒரு கதாபாத்திரத்தை ஞாபகப்படுத்திகிற கடவுளாகியே மாறிப்போன சங்கரன் போற்றி என எத்தனை பாத்திரங்கள், எத்தனை தருனங்கள். நீங்களும் மாடன் பிள்ளையைப் போல நீயும் நானும் ஒன்னு தான்வே என்று சாமி கிட்ட சொல்லலாம்

அன்புடன்

ராமகிருஷ்ணன்

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களுடைய இணையத்தளத்தை  பல வருடங்களாக தொடர்ந்து வாசித்து வருகிறேன். உங்களது சிறுகதைகள், காடு, விஷ்ணுபுரம், பனிமனிதன் போன்ற புத்தகங்களை வாசித்திருக்கிறேன்.இதுவே நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். நீங்கள் எழுதிய புனைவுக்களியாட்டு கதைகள் அனைத்தும் ரசித்து வாசித்தேன். ஒவ்வொரு நாளும் காலையிலே வாசித்துவிடுவேன். அன்று முழுவதும் அக் கதையின் காட்சிகள் துல்லியமாக என்னைத்தொடர்ந்து கொண்டிருக்கும்.

உடலளவில் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டிருந்தாலும் மனதால் நீங்கள் உருவாக்கிய நிலத்திலேயே வாழ்ந்தேன்.உங்களது கதைகள் மூலம் இந்த காலத்தின் மன அழுத்தங்களில் இருந்து விடுதலை அடைய முடிந்தது. அதற்காக நன்றி. நான் உண்மையில் அறம், விசும்பு போன்ற கதைகளை நீங்கள் எப்போது எழுதுவீர்கள் என எதிர்பார்த்திருந்தேன். இந்த கோவிட் காலத்தில் அந்த ஆசை நிறைவேறியிருக்கிறது.

ஆடகம், ஆனையில்லா,தங்கத்தின் மணம், சூழ்திரு,ஆயிரம் ஊற்றுகள் என்று வந்து கொண்டிருந்த உங்களது ஆரம்பக் கதைகளில் சூழ்திரு கதை தான் உச்சமாக இருக்கப்போகிறது என நினைத்தேன்.அக்கதையின் ஒவ்வொரு வரியையும் ரசித்து வாசித்தேன். ஆனால் பத்துலட்சம் காலடிகள், ஓநாயின் மூக்கு போன்ற ஔசேப்பச்சன் கதைகள் வாசித்து முடித்த போது பிரமித்துப் போனேன். அதன் பின் எப்போது ஔசேப்பச்சன் கதை வரும் என எதிர்பார்க்கத் தொடங்கினேன்.

இறைவன் கதை வாசித்து முடித்த போது அழுதுவிட்டேன்.” கொண்டாடினா செத்திரும்னு பயந்தேன். கொண்டாடாமலேயே செத்துப்போச்சு”.என்று இசக்கியம்மை சொல்லும் வரியை என்னால் மறக்க முடியவில்லை. பலிக்கல், நற்றுணை கதைகளை வாசித்த பின் ஔசேப்பச்சன் கதையில் இருந்த மயக்கம் குறைந்துவிட்டிருந்தது.

காக்காய்ப்பொன், கூடு, நிழல்காகம் ,கரு என அதற்குப் பின்னரான ஆன்மீக அனுபவம்  சார்ந்த  கதைகள் கொண்டாட வேண்டியவை.
இக்கதைகள் எனக்காக எழுதிய கதைகள் போலவே இருந்தன.நீங்கள் வெளியிட்ட‌ வாசகர் கடிதங்கள்  என் வாசிப்பை மேலும் கூர்மையாக்க உதவியது. இதுவரை தீவிர ஈடுபாட்டுடன் நான் வாசித்ததில்லை. உங்களது இக்கதைகள் வாசிப்பின் மேல் பெரிய ஆர்வத்தை உண்டாக்கியிருக்கிறது.  நன்றி.

நீங்களும் உங்களது குடும்பத்தினரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

அன்புடன்
வாசுகி
இலங்கை

உங்களது ஏழரைப்பொன்  வாசித்து ஏற்றுமானூர் சென்று பார்த்திருக்கிறேன். உங்களது எழுத்துக்களை வாசித்து  திருவட்டாறு ஆதி கேசவனையும் சென்று பார்த்தேன். ஒரு பெண் ,இலங்கையிலிருந்து, ஒன்றரை வயது மகளுடன்

***

69 ஆகாயம் [சிறுகதை]

68.ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைவேதநாயகம் சாஸ்திரியார்- இப்போது
அடுத்த கட்டுரைதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்