ஆனையில்லா, தேனீ- கடிதங்கள்


அன்புள்ள ஜெ

ஆனையில்லா கதையை வாசிக்கும்போது உருவாகும் சிரிப்பு அப்படியே மறுவாசிப்பிலும் இருக்கிறது. உண்மையில் இந்தக் கதையை நான் என் நண்பன் போனில் முழுமையாகச் சொல்லி கேட்டபின்னர்தான் வாசித்தேன். அதன்பிறகு அந்தக்கதையை ஒருமுறை என்னுடைய மேனேஜ்மெண்ட் மீட்டிங்கில் சொன்னேன். சொல்லும்போதும் அந்த வெடிச்சிரிப்பு தொடர்வதைக் கண்டேன். இன்றைக்கிருக்கும் இக்கட்டான நிலைமையையும் அதன்மீதான நம்பிக்கையையும் சொல்வதற்கு மிகமிகச் சரியான உதாரண கதை இது. “நாம் யானையை குடைமாதிரி மடித்துவிடுவோம்” என்று சொன்னேன். சிரித்தபடியே கலைந்தோம்

அந்தச் சிரிப்பு நீடித்துக்கொண்டே இருந்தது. நாங்கள் வேறொரு பிரச்சினையை பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஓர் இளைஞன் “சார் இது யானைக்கு பின்பக்கம் க்ரீஸ் போடும் ஐடியா இல்லையா?”என்றான். எல்லாருக்கும் புரிந்து சிரித்துவிட்டோம். அதன்பிறகு க்ரீஸ் என்பதே ஒரு குறியீடாக ஆகிவிட்டது. எம்டி யானையை செப்பில் போட்டு வார்ட்ரோபில் வைத்திருக்கிறார் என்று ஒருவர் சொன்னார். கதை அப்படியே விரிந்துகொண்டே சென்றது. இன்றைக்கு நாங்கள் வாசிக்கும் கதை நீங்கள் எழுதிய கதையை விடபெரியது

சங்கர் அருணாச்சலம்

அன்புள்ள ஜெ,

மலையாளத்தில் பஷீரின் சில கதைகள் குறியீடுகளாக மாறி பழமொழிபோல ஆகிவிட்டதைப்பற்றி நீங்கள் ஒரு பேச்சிலே சொன்னீர்கள். அதைப்போல யானையில்லா பூனை துளி மாதிரியான கதைகள் இன்றைக்கு மாறியிருக்கின்றன. என்னவென்றால் அந்தக்கதையை வாசிக்காதவர்களிடம் சுருக்கமாகச் சொல்லிவிடலாம். ஆங்கிலம் வழியாகவே ஓரளவு சொல்லிவிடலாம். அந்த செண்டிரல் மெட்டஃபர் கிடைத்துவிடும். கற்பனை செய்தாலே சிரிக்க ஆரம்பித்துவிடலாம்.

ஆனையில்லா கதையை அப்படி நினைத்து நினைத்துச் சிரிக்கிறோம். பொதுவாக எங்கள் சீஃப் அதிகமாக சிரிக்கமாட்டார், கதைகளும் சொல்லமாட்டார். அவர் மலையாளி. அவருக்கு யானையில்லா கதை பிடித்துவிட்டது “நீயெல்லாம் ஒரு யானையை மானம் மரியாதையா வாழ விடமாட்டே இல்ல?”என்று ஒருமுறை சொன்னார்.

இந்த சின்னக்கதையில் எவ்வளவு மேனேஜ்மெண்ட் வேடிக்கைகள். பிரச்சினை என்ன என்று கேட்டால் உடனே ‘வீட்டிலே யானை நுழைஞ்சுபோச்சு சார்”என்று கண்கூடாக தெரியும் பிரச்சினையை விளக்க ஆரம்பிப்பவர்கள் உண்டு. வீட்டில் யானை நுழைந்தாலும் “என் சட்டிபானை போச்சே” என்று பிலாக்காணம் வைக்கும் சந்திரிகள் உண்டு. அதேபோல பிரச்சினை எல்லாம் முடிந்தபின் வந்து லபோதிபோ என்று கத்தி “அய்யோ வீட்டில் யானைந் நுழஞ்சிட்டுதே” என்று கத்தும் கிழவிகளும் உண்டு. நடுவே பிரச்சினைய குடைபோல மடக்கிவிடுவோம் என்று சொல்லும் கத்துக்குட்டி ஐஐஎம் பையன்களும் உண்டு.
ஒருகதையை இந்த அளவுக்கு விரிவாக்க முடியுமா என்று நினைக்கையில் ஆச்சரியமாகவே இருக்கிறது. கதை இப்போது அப்படி விரிவடைந்து போய்விட்டது

ஆர்.ரவிச்சந்திரன்

அன்புள்ள ஜெ

தேனீ கதையை நான் தன் தனிப்பட்ட வாழ்க்கையை பிறருக்காக இழந்த அத்தனை அப்பாக்களின் ஞாபகமாகவும்தான் வாசிக்கிறேன். சென்றதலைமுறையில் அப்படி தனிப்பட்ட ரசனை இருந்தாலே அது தப்பு என்ற என்ணம் தான் இருந்தது. ஏன் இன்றைக்கேகூட குடும்பத்துக்கான எல்லாவற்றையும் செய்துவிட்டு ஒருவர் வெண்முரசில் பித்துடன் இருந்தால் என்ன சொல்கிறார்கள்? நான் தேனீ கதையை என்னுடைய வெண்முரசு அனுபவத்துடன்மட்டும்தான் சேர்த்துக்கொள்வேன். அது எனக்கான nector of the soul ஆகத்தான் வைத்திருக்கிறேன். அதை எவரிடமும் பகிர்ந்துகொள்ள முடியவில்லையே என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் இப்போது இல்லை. அப்படி இருக்கும்போது அது கடல்போல அவ்வளவு பெரியதாக இருக்கிறது

எஸ்.கிருஷ்ணகுமார்

அன்புள்ள ஜெ,

நினைவு தெரிந்த நாள் முதல் உழைப்பு மட்டுமே செய்து முதுமை அடைந்து இறக்கும் பல்வேறு மனிதர்கள் நம்முடைய முந்தைய சமுதாயத்தில் நிறையே பேர் இருந்திருப்பார்கள். இதற்கு முக்கிய காரணமாக அந்த கால கட்டத்தில், வருமானம் பெற பலவகையான தொழில்கள் இல்லை. பெரும்பாலும் குடும்ப தொழிலை நம்பியே பிள்ளைகள் பிறக்கிறார்கள். இன்னொன்று, நுகர்வு கலாச்சாரம் என்பது மிகவும் குறைவு அல்லது இல்லவே இல்லை. இன்றுள்ளவர்களில், அந்த வாழ்க்கை முறையை புரிந்து கொள்வது சற்றே கடினமானது என்றே நினைக்கிறேன். “எனக்கு என்ன கிடைச்சுதுன்னு ஒருத்தன் கணக்கு பாக்க ஆரம்பிச்சா அதோட அவன் கை குறுகிரும். மனசு மூடிரும்.” என்ற வரிகளின் ஆழம் புரிந்து கொள்ள முடியாத ஒன்று.

தேனீ போல கடுமையாக உழைத்து கொண்டே இருக்கிறார் சம்முகத்தின் அப்பா. வெறும் மூன்று மணி நேரம் தூக்கம். மூன்று வயது முதல் முதுமை காலத்தில் பக்கவாதம் வரும் வரை இதே பிழைப்பு தான். தனக்குப் பிடித்த ‘திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை’ அவர்களின் ஒரு கச்சேரியை கூட அவர் நேரில் சென்று பார்க்க வாய்க்கவில்லை. ஆனால் மற்றவர்கள் கேட்டு வந்து அதை பத்தி பேசும் போதே, அந்த வாசிப்பின் ராகங்களையும் இசையையும் அவரால் உணர முடிந்தது. இசை என்பது மனதின் உள்ளிருப்பது, அது வெளியில் இல்லை என்றே தோன்றுகிறது. இது அனைத்து கலைக்கும் பொருந்தும். கலையின் ஆக்கத்திற்கு மட்டுமில்லாமல், அதன் உள்வாங்களுக்கும் கூட இது பொருந்துவது போல் உள்ளது.

பிள்ளை அவர்களின் இசையை கேட்க (அவர் இறந்த பல வருடங்கள் கழித்து) சம்முகம் பிள்ளை தன் அப்பாவுடன சுசீந்திரம் சென்று அங்கே உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்குள் சென்றமர்ந்தனர். அங்குள்ள தூண்களிலும், சிற்பங்களிலும் அவர் இசையைக் கேட்க ஆரம்பித்து, ஒரு முழு கச்சேரியை கேட்டு முடித்தது, பெரும் வியப்பாக உள்ளது. இசை அவரின் மூச்சில் ஒன்றாக கலந்தது, அதன் மேல் அவருக்கு அலாதி பிரியமும், அதை அனுபவிக்க அவர் காலம் முழுதாகவும் தவம் செய்து கொண்டே இருந்தார். அந்த தவத்தில், இசை தன்னை மீறி தன்னிடமிருந்து தோன்றி தனக்கு மட்டும் கேட்டு கொண்டே இருந்தது. அவர் இசையாகிய தருணம் அது.

மிகப்பெரும் தவங்கள் கிட்டிய பொழுது அதற்கு அப்பால் வாழ்வில் பொருள் ஏதும் இல்லாமல் மனம் தன்னைத்தானே சிதைத்து கொள்கிறதோ என்று தோன்றுகிறது. அந்தச் சிதைவின் தொடக்கமே மரணமாக முடிகிறது.

அன்புடன்,
பிரவின்,
தர்மபுரி.

***

69 ஆகாயம் [சிறுகதை]

68.ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைதனிமைக்கரை – கடிதங்கள்
அடுத்த கட்டுரையானைப்படுகொலைகள்- கடலூர் சீனு