ஆனையில்லா, ஆகாயம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

ஆகாயம் என்ற சொல்லில் இருக்கும்  “ஆ!”  “ஆகா!” இரண்டுமே எனக்குப் பிடிக்கும். ஒருவர் அவர் அன்றாடம் பேசி கேட்கும் மொழியில் வாசிக்கும் இலக்கியம் கொஞ்சம் மேம்பட்டது, நுட்பமானது என்று நான் நினைப்பது இதனால்தான். இவ்வாறு சில சூட்சுமமான உணர்ச்சிகளை, மொழிசார்ந்த நுட்பங்களை நாம் பெறமுடிகிறது. இந்தக்கதையில் உண்மையில் அந்த ஸ்பிரிச்சுவல் அம்சம் என்பது ஆகாசம்லா என்று ஆசாரி சொல்லும் இடத்தில், ஆகாசம் என்ற வார்த்தையில்தான் உள்ளது.

அதோடு ஓர் அரசமரத்தைப் பார்க்கையில் நாம் ஆகாயத்தைப் பார்ப்பதுபோல வேறு எப்போதுமே பார்ப்பதில்லை. அரசமரம் ஆகாசத்தை மறைக்காது. அதன் ஃபோலியேஜ் அடர்த்தியானது இல்லை. அது வானத்தில் ஒரு சில்லௌட் மாதிரித்தான் தெரியும். அதன் இலைகளின் அசைவே வானத்தில் பதிந்திருப்பதுபோல தெரியும். தெய்வங்கள் சிற்பியை மீறி அவன் கைவழியாக வந்திறங்குவதுதான் கதை என்று வரும்போது ஆகாசம் என்பது மிகப்பெரிய அர்த்தம் அடைகிறது.

செல்வி சுகுமார்

***

அன்பு ஜெ,

ஆகாயம் என்ற ஒன்றே தோற்றப்பிழைதான் என்று எண்ணுவதுண்டு. உண்மையில் பூமியினின்று நம் கண்ணால் காணக்கூடிய பிரபஞ்சத்தின் சிறு துளியையே ஆகாயம் என்று கொள்கிறோம் என நினைப்பேன் நான். ஆனால், பூமியையும் தாண்டி, இந்த பிரபஞ்ச ஆகாயங்களைப் பற்றி யோசிக்கிறேன். அது அளவுகோள்களுக்கு அப்பாற்பட்டதாகப்படுகிறது. “ஆகாசமுல்லா!” என்ற வார்த்தையைத் தவிற முடிவிலியைக் குறிக்க வேறொரு சொல் வேண்டுமா என்ன!

கோயில்களில் அப்படி எண்ணற்ற சிலைகளைக் கண்டிருக்கிறேன். சிலவற்றுக்கு அதன் கீழேயே பெயரும், அவர்களைக் கும்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்றெல்லாமும் கூட எழுதியிருப்பார்கள். சிலைகளின் அழகை இரசிப்பதற்காவே தனியாக செல்வதுண்டு. அகழ்வாராய்வாய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்ட, பெயர் தெரியாத பழங்கால சிலைகளைப் பற்றிப் பார்க்கும் போதெல்லாம் ஆச்சரியமாய் இருப்பதுண்டு. ஒரு வேளை வழக்கொழிந்த தெய்வங்களாய் இருக்கும் என்று நினைப்பதுண்டு. இந்து மதத்தில் மட்டும் எத்தனை கோடி தெய்வங்கள் என்று பகடியாய் கூட நினைத்துக் கொள்வதுண்டு. ஆனால் இன்று வேறோர் கண்ணோட்டம் கிட்டியது ஜெ.

சிற்பிகளின் எண்ணங்கள் வழி அதனை நான் ஊடுருவியிருக்கவில்லை. பெரும்பாலும் மன்னர் சொல்வதை, மக்கள் விரும்புவதை மட்டுமே வடிக்கும் கலைஞர்ளாக நினைத்தது ஒரு காரணமாயிருக்கலாம்.

நான் அப்படியே சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு சிலைகளை நினைத்துக் கொண்டேன். ஒன்று ஆதி சிவனாயிருக்கலாம் என்று கருதக் கூடிய சிலை, இன்னொன்று பெண் கடவுள் சிலை. தனியாக கோயில்கள் அந்த மக்கள் சமைத்தாகத் தெரியவில்லை. ஆனால் கடவுள் வழிபாடு இருந்திருக்கலாம் என்கிறார்கள். அன்றிலிருந்து இன்றுவரை கண்டெடுக்கப்பட்ட அனைத்து சிலைகளை, கலைப் பொருட்களை எல்லாம் நினைத்துக் கொள்கிறேன். எல்லாமுமே ஒரு கலைஞனின் எண்ணத்தினின்று உதித்ததல்லவா.

“தெய்வமெல்லாம் ஒண்ணுதான். அணியும் முத்திரையும் மனுஷன் பாக்குதது. அதவச்சுத்தான் சிவன் வேறே விஷ்ணு வேறே” எத்துனை நிதர்சனமான உண்மை ஜெ. கோடி சிலைகள், கோடி எண்ணங்கள், கோடி கடவுள்களின் தோற்றங்கள். அவைகளுக்குள் நம் முன்னோர்களின் ஆசைகள், துன்பங்கள், கனவுகள், புலம்பலகள் யாவையும் நிறைத்து, உயிரேற்றி வைத்திருக்கிறோமே. அங்கு சென்றால் கவலைகள் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை கதிர்களை பல நூறு வருடங்களாக விதைத்து, அங்கே நேர்மறை எண்ணங்களை விதைத்திருக்கிறோமே. சுடுகாட்டிற்கு செல்லும் போது ஏற்படும் துன்பமும், பயமும்; கோயில்/தர்கா/சர்ச் –க்கு செல்லும் போது ஏற்படும் நேர்மறை எண்ணங்களும் காலங்காலமாக நம் முன்னோர்கள் விதைத்ததோ என்ற எண்ணம் எழுகிறது என்னுள்.

எங்கள் ஊரிலுள்ள திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கும், அங்கே மடவார் வளாகத்திலுள்ள சிவன் கோயிலுக்கும், யாரும் பெரும்பாலும் வராத நாட்களில், வேளைகளில் போவதுண்டு. கருவறையின் வெளியே ஆளறவமற்ற நேரங்களில் கண்களை மூடி தியானித்திருப்பேன். அங்குள்ள ஆற்றலை நுகர்ந்திருப்பேன். எத்தனையோ நூற்றாண்டுகளாக குடியிருக்கும் நேர்மறை எண்ணங்களை/ அதன் அலைவரிசைகளை கவனித்திருப்பேன். நேரம் செல்வதறியாமல் மிரண்டு விழித்த தருணங்கள் ஏராளம். இந்த கற்கோவிலுக்குள் உயிரேற்றி வைத்தவர்கள் நாம் தானே. அதன் உணர்வுகளை, பலன்களை நம்பிக்கைகளாக நிர்ணயிப்பவர்கள் நாம் தானே! என்ற என் எண்ணங்களுக்கு நீங்கள் உரமேற்றுவது போலக அமைந்தது இந்தக் கதை.

இனி எங்கு பெயரற்ற சிலைகளைப் பற்றிக் கேட்க நேர்ந்தாலும் குமரன் ஞாபகத்திற்கு வருவான் ஜெ.

அது தவிரவும் அனைத்துக் கலைஞர்களையும் நினைக்கிறேன். அவர்களின் எண்ணம் என்னும் கருவறையில் பிறக்கும் ஓவியங்கள், கதைகள், திரைக்கதைகள், கவிதைகள், சிலைகள், பாடல்கள், இசைகள், ஒலிகள், வண்ணங்கள் யாவற்றையும் நினைத்துப் பார்க்கிறேன். ஜாதகக் கதைகளையும், புராணங்களையும், இதிகாசங்களையும், இன்னும் எத்தனையோ கதைகளும் எங்கோ யார் மனதிலோ கருக்கொண்டு எண்ணங்களின் வழியல்லவா பிறந்திருக்கும். உங்கள் எண்ணங்களில் கூட எத்தனை கருக்கள் குவிந்திருந்தால் இப்படிக் கொட்டித்தீர்ப்பீர்கள். வேறெந்த விடயத்தைப் பற்றிய சிந்தனையில்லாத மனமும், கேட்காத காதுகளும், பேசாத உதடுகளும் ஒரே மூச்சாக, உங்கள் படைப்புகளைப் பற்றியே சிந்தித்து எழுதும் நீங்களும் குமரன் தானே. அப்படி செய்யும் கலைஞர்கள் யாரும் குமரன் தானே. நாம் விட்டுச் செல்லும் படைப்புகள் அப்படியல்லவா இருக்க வேண்டும்!

கலைஞர்களைத் தாண்டி, எல்லா மனிதர்களும் எண்ணுகிறார்களே. அத்துனை எண்ணங்களும் பிரபஞ்சம் நிறைத்து வழிந்துவிட வாய்ப்பில்லையா ஜெ?

”இது வித்து, உள்ள அவரு கருவடிவா கண்ணுறங்குதாரு” இப்படி எத்தனை கருக்கள் நிறைவடையாமலேயே கண்ணுரங்கிக் கொண்டிருக்கும் என்பதைப் பார்க்கிறேன். பார்க்கும் கற்கள் தோறும் இனி கருக்களையே காண்பேன். அது உறங்கிக் கொண்டிருக்கும் ஓர் உயிரல்லவா. கற்களைப் போலவே மரங்களும், மலைகளும், காடும், ஆறும், கடலும், பனியும், யாவும் கருக்கொண்டிருக்கின்றனவே. அது வெளிப்படாதவறை அதன் தெய்வீகம் புரிவதில்லை. வெளிப்படாதவைகள், வெளிப்பட்டவைகள் என எத்துனை. “ஆகாசமுல்லா!”

அன்புடன்

இரம்யா

***

அன்புள்ள ஜெ

ஆனையில்லா கதையில் இருந்து திரும்ப வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். வாசித்தபிறகு அப்படியே ஆனையில்லா என்று அடித்து தேடி அதன்கீழே வரும் எல்லா கடிதங்களையும் வாசிக்கிறேன். உண்மையில் ஒரு மிகப்பெரிய சிறுகதை பட்டறையே இங்கே இரண்டுமாதம் இடைவெளியே இல்லாமல் நடைபெற்றிருக்கிறது.

ஆனால் வெளியே சென்று அறியப்பட்டவர்கள், தங்களை விஷயம்தெரிந்தவர்கள் என்று நம்பிக்கொள்பவர்கள் எழுதிய விமர்சனங்களை எல்லாம் பார்த்தால் தலையில் மடேர் மடேர் என்று அடித்துக்கொள்ளலாம் போல தோன்றுகிறது. அவர்களால் கதைகளுக்குள் புகுவதற்கான கற்பனையே இல்லை. கதையின் சூட்சுமங்கள் எதுவும் பிடிகிடைக்கவில்லை. கதையின் ஸ்பிரிச்சுவல் ஸ்பேஸ் பற்றி ஒரு பிரக்ஞையே இல்லை.

அவர்கள் அறிந்தது ஒன்று வழக்கமான அதிமுக- திமுக- பிஜேபி அரசியல். அதிலுள்ள கட்சிகட்டல்கள். இல்லையென்றால் எனக்கும் விஷயம் தெரியும் என்று காட்டுவதற்காக ‘அப்படியென்றால் இதெப்படி?’ என்பது போன்ற சில்லியான சர்ச்சைகள். அல்லது சம்பந்தமே இல்லாமல் வேறேதேனும் கதைகளை சுட்டிக்காட்டுவது. உண்மையில் இந்த இடத்திற்கு வெளியே எந்தக்கதைக்குமே வாசிப்பு நடக்கவில்லை என்ற எண்ணம்தான் ஏற்பட்டது.

அதன்பின் ஆனையில்லா கதையை வாசித்தபோது சட்டென்று ஒரு சிரிப்பு வந்துவிட்டது. அவர்கள் ஆனையிடம் வந்து அமர்ந்து நீ ஆனையில்லை என்று மந்திரம் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள் சொல்லிச்சொல்லி ஆனையை சிறியதாக ஆக்கிவிடலாம் என்று கற்பனைசெய்கிறார்கள்

மகேஷ்

அன்புள்ள ஜெ

ஆனயில்லா கதையை வாசித்தேன். உடனே ஆகாயம் கதையை வாசிக்கவேண்டும் என்று தோன்றியது. இரண்டுகதைகளையும் அருகருகே வாசித்தபோது ஒரு பெரிய ஆச்சரியம் ஏற்பட்டது. ஆனையில்லா கதை மிகப்பெரிய ஒன்றை ‘ஒண்ணுமே இல்லை, அவ்ளவுதான்’ என்று சொல்லி முடிக்கமுயல்வது. ஆனால் ஆகாயம் ஒவ்வொரு சின்னவிஷயமும் வானத்தை இணைத்துக்கொண்டிருக்கிறது என்று சொல்லி பெரிதாக்குகிறது.  ‘ஆகாசமுல்லா”என்று ஆசாரி சொல்கிறார்.

“ஆனையில்லா” என்பதற்கும் “ஆகாசமுல்லா!” என்பதற்கும் எவ்வளவு வேறுபாடு! அங்கிருந்து இஙே வரை ஒரு கோடு. அது லௌகீகம். இது ஆன்மீகம். லௌகீகத்திலே எல்லாவற்றையும் சின்னதாக்கு. ஆன்மீகத்தில் எல்லாவற்றையும் ஆகாசம்போல பெரிசாக்கு. அதுதான் இந்தக்கதைகளில் தெரிகிறது என்று நினைக்கிறேன்

டி.எம்.சச்சிதானந்தமூர்த்தி

***

69 ஆகாயம் [சிறுகதை]

68.ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–81
அடுத்த கட்டுரைபுதியகதைகள்- கடிதங்கள்