அன்புள்ள ஜெ
இந்த ஒட்டுமொத்த கதைவரிசையும் பெண்களுக்கு மிகச்சிறப்பான ஒரு வாசிப்பனுபவமாக இருக்கும் என நினைக்கிறேன். தொடர்ச்சியாக வந்துகொண்டே இருந்த பெண்கதாபாத்திரங்கள் வலுவானவை, வெவ்வேறு வகையானவை. அதோடு தமிழ்ச் சூழலில் வழக்கமாக பெண் கதாபாத்திரங்களைச் சித்திரிக்கும் இன்ஹிபிஷன்ஸ் இல்லாதவை. டெம்ப்ளேட்களுக்கும் செல்லாதவை. இது இங்கே பெண்களை எழுதும்போது மிகப்பெரிய சிக்கலாகவே என் பார்வையில் தோன்றியிருக்கிறது. பெண்கதாபாத்திரங்களை எழுதும்போது அவர்களை ஒழுக்க அளவுகோல்களின்படி அமைப்பார்கள். அல்லது அதை மீறுகிறேன் பேர்வழி என்று நேர் எதிராக அமைப்பார்கள். இரண்டுமே முன்னர் உருவாக்கியபடியே இருக்கும். இயல்பாக அந்தந்த சூழலில் அவர்களைப் பொருத்தி அவர்கள் யார் என்பதை எழுதினாலே போதும் என்பதுதான் என் எண்ணம்
இந்தக்கதைகளில் யாதேவி கதைகளில் வரும் எல்லா ஆன்ஸெல், வருக்கை கதையில் வரும் கோமதி, தவளையும் இளவரசனும் கதையில் வரும் மீ, வேட்டு கதையில் வரும் ஜானம்மா சகோதரிகள் எல்லாமே எந்த ஒழுக்க அளவுகோல்களும் இல்லாமல் மிக இயல்பாக அவர்களின் தன்னியல்புப்படி காட்டப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அது செலெபரேட் செய்யப்படவும் இல்லை. கோட்டை போன்ற கதைகளில் பெண்களின் அவலமும் காட்டப்பட்டுள்ளது. மேஜெஸ்டிக்கான கதாபாத்திரமாக உமையம்மை ராணி வருகிறார். வான்கீழ் போன்ற கதைகளில் எந்த அசாதாரண தன்மையும் இல்லாத கிராமத்துபெண்ணான ராஜம்மை வருகிறாள். லீலை, தேவி முதலிய கதைகளில் பெண்ளின் விளையாட்டுத்தோற்றம் வருகிறது. லீலையில் அது பெண்ணின் ஜாலம் மட்டும்தான். தேவியில் அது பராசக்தியின் மூன்றுமுகம் கொண்ட ஆட்டம்.
எந்தக்கதையிலும் குளோரிஃபிகேஷன் இல்லை. எந்த கதையிலும் விமர்சனமும் இல்லை. இப்படியிப்படி என்று சொல்லிக்கொண்டே செல்கின்றன கதைகள். ஆனால் அத்தனை வகையான பெண்கள். அரசி முதல் விபச்சாரி வரை. அவரவருக்கான குணாதிசயங்களுடன் அவரவருக்கான வாழ்க்கைச்சூழலில் இயல்பாக வந்து நிற்கிறார்கள். தமிழ் இலக்கியச் சூழலில் இது ஒரு அபூர்வமான விஷயம் என்று நினைக்கிறேன்
மாலதி எஸ்
அன்புள்ள ஜெ,
நலமா? இந்த ஊரடங்கு காலத்தில் எங்களை நலமாக வைத்திருந்த உங்களது படைப்பூக்கத்திற்குச் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்.
பள்ளி விடுமுறையில் அம்மாவின் கிராமத்திற்குச் செல்வது வழக்கம். அப்போது எனக்கு எட்டு வயதிருக்கும். கோயில் திருவிழாவில் எனது பெரியம்மா மீது சாமி இறங்க அவரைச் சுற்றி சிறு கூட்டம் கூடிவிட்டது. நான் அப்போதுதான் முதன் முதலாக ஒருவர் சாமி ஆடுவதைப் பார்க்கிறேன். அங்கிருந்து நகர வேண்டுமென்ற அச்சத்தையும் ஆனால் பார்த்தே ஆகவேண்டுமென்ற விழைவையும் ஒருங்கே அடைந்த தருணம் அது. அப்போது உக்கிரமாக ஆடிக்கொண்டே சுற்றி, சுற்றி வந்த பெரியம்மா எனது தலையில் ஓங்கி அடித்து திருநீறு பூசி விட்ட அந்த கணத்தில் உடலும் மனதும் அதிர கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்ட அங்கிருந்து வேகமாய் விலகி ஓடி தொலைவிலிருந்த அம்மாவை கட்டிக்கொண்டு உரத்த குரலில் அழத்தொடங்கினேன். எதுவும் புரியாத அம்மா பதறிப்போய் என்னை கட்டி அணைத்து நடந்ததை விசாரிக்க “சாமிக்கு என்னை பிடிக்கலைம்மா. அங்க அவ்வளவு பேரு இருந்தாங்க. ஆனால் சாமி என்னை மட்டும் தலையில அடிச்சுருச்சு” என்று தேம்பி, தேம்பி சொல்ல அம்மா சிரித்துக்கொண்டே “தலையில அடிச்சு திருநீறுல்ல பூசியிருக்கு. அவ்வளவு பேருல ஒன்னை மட்டும்தான் சாமிக்குப் பிடிச்சிருக்கு” என்று சொன்ன அந்த நொடியில் மனதில் உற்சாகம் பீறிட்டது. திரும்ப அங்கே ஓடியபோது கூட்டம் கலைந்து கொண்டிருந்தது. சாமி ஆடி முடித்த களைப்பில் பெரியம்மா கால் நீட்டி உட்கார்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் இரண்டு கைகளையும் நீட்டி வாஞ்சையாக அழைத்து மடியில் அமர்த்திக்கொண்டார். ஏனோ தெரியவில்லை. நான் மீண்டும் அழத்தொடங்கினேன். இந்த முறை சத்தமின்றி, அமைதியாக.
‘நிறைவு’ என்று உங்கள் தளத்தில் பார்த்தவுடன் ஆழ்மனதில் எங்கோ புதைந்து கிடந்த இந்த எட்டு வயது அனுபவம் எதனால் எனக்குள் மேலெழுந்து வந்தது என்பதற்கான காரணத்தைச் சரியாக புரிந்து கொள்ள இயலவில்லை. ஆனால் இப்படி தொடர்புபடுத்திக்கொள்கிறேன். 69 நாட்கள் சன்னதம் கொண்டு நீங்கள் ஆடி முடித்திருக்கிற இந்த ஆட்டத்தில் ஒவ்வொரு நாளும் என்னை ஓங்கி அடித்திருக்கிறீர்கள். ‘வாழ்வின் தரிசனம்’ என்ற திருநீற்றை பூசிவிட்டுள்ளீர்கள். எட்டு வயது சிறுமியாய் மாறி வாயைப் பிளந்து கொண்டு நீங்கள் ஆடிய ஆட்டத்தைப் பார்த்த பிறகு அழுதேன். சிரித்தேன். சில நேரங்களில் எதுவும் செய்யத் தோன்றாமல் வெறித்துப் பார்த்துக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தேன். அந்த ஆட்டம் ஒவ்வொன்றும் எனக்குள் சொற்களால் விவரிக்க இயலாத ஏதோ ஒன்றை நிகழ்த்தியது. இப்போது நீங்கள் ஆடி முடித்து அமர்ந்தவுடன் மனதால் உங்கள் அருகில் வந்து அமர்ந்திருக்கிறேன். கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருக்கிறது. மானசீகமாக உங்கள் கைகளைப் பற்றிக்கொண்டு “எனது கீழ்மைகளை மிதித்துப் போட்டு விட்டு அறத்தோடும் செயலூக்கத்தோடும் இந்த வாழ்வை வாழ முயன்று கொண்டே இருப்பேன் ஆசானே!” என்று உரக்கச் சொல்கிறேன். “அப்படியா!” என்று நீங்கள் உங்களது வழக்கமான தொணியில் அலட்டிக்கொள்ளாமல் சிரித்துக்கொண்டே கேட்கிறீர்கள். அழுகையின் ஊடே புன்னகைக்கிறேன்.
வாழ்க்கை வேண்டுமானால் பொலிவதும் கலைவதுமாய் இருக்கலாம். ஆனால் உங்களது படைப்புகள் அனைத்தும் என்றென்றைக்குமாய் எனக்குள் பொலிந்து கொண்டே இருக்கும். அப்பொலிவு எனது வாழ்விற்கான ஒளியை அருளிக்கொண்டே இருக்கும்.
மனமார்ந்த நன்றி!
அன்புடன்
அழகுநிலா
சிங்கப்பூர்
69 ஆகாயம் [சிறுகதை]
68.ராஜன் [சிறுகதை]
67. தேனீ [சிறுகதை]
66. முதுநாவல்[சிறுகதை]
65. இணைவு [சிறுகதை]
64. கரு [குறுநாவல்]- பகுதி 1
64. கரு [குறுநாவல்]- பகுதி 2
63. ‘பிறசண்டு’ [சிறுகதை]
62. நிழல்காகம் [சிறுகதை]
61. லாசர் [சிறுகதை]
60. தேவி [சிறுகதை]
59. சிவம் [சிறுகதை]
58. முத்தங்கள் [சிறுகதை]
57. கூடு [சிறுகதை]
56. சீட்டு [சிறுகதை]
55. போழ்வு [சிறுகதை]
54. நஞ்சு [சிறுகதை]
53. பலிக்கல் [சிறுகதை]
52. காக்காய்ப்பொன் [சிறுகதை]
51. லீலை [சிறுகதை]
50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]
49. கரவு [சிறுகதை]
48. நற்றுணை [சிறுகதை]
47. இறைவன் [சிறுகதை]
46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]
45. முதல் ஆறு [சிறுகதை]
44. பிடி [சிறுகதை]
43.. கைமுக்கு [சிறுகதை]
42. உலகெலாம் [சிறுகதை]
41. மாயப்பொன் [சிறுகதை]
40. ஆழி [சிறுகதை]
39. வனவாசம் [சிறுகதை]
38. மதுரம் [சிறுகதை]
37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]
36. வான்நெசவு [சிறுகதை]
35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]
34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]
33. வான்கீழ் [சிறுகதை]
32. எழுகதிர் [சிறுகதை]
31. நகைமுகன் [சிறுகதை]
30. ஏகம் [சிறுகதை]
29. ஆட்டக்கதை [சிறுகதை]
28. குருவி [சிறுகதை]
27. சூழ்திரு [சிறுகதை]
26. லூப் [சிறுகதை]
25. அனலுக்குமேல் [சிறுகதை]
24. பெயர்நூறான் [சிறுகதை]
23. இடம் [சிறுகதை]
22. சுற்றுகள் [சிறுகதை]
21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]
20. வேரில் திகழ்வது [சிறுகதை]
19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]
18. தங்கத்தின் மணம் [சிறுகதை]
17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]
16. ஏதேன் [சிறுகதை]
15. மொழி [சிறுகதை]
14. ஆடகம் [சிறுகதை]
13. கோட்டை [சிறுகதை]
12. விலங்கு [சிறுகதை]
11. துளி [சிறுகதை]
10. வேட்டு [சிறுகதை]
9. அங்கி [சிறுகதை]
8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]
7. பூனை [சிறுகதை]
6. வருக்கை [சிறுகதை]
5. “ஆனையில்லா!” [சிறுகதை]
4. யா தேவி! [சிறுகதை]
3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]
2. சக்தி ரூபேண! [சிறுகதை]
1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]