தேவி, இணைவு- கடிதங்கள்

தேவி [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

தேவி கதையை யாதேவி முதல் ஒரு தொடர்ச்சியின் வடிவமாகவே வாசித்தேன். ‘தேவி உனக்கு எத்தனை முகங்கள்!”என்ற வியப்பைத்தான் யாதேவி முதல் தேவி வரை எல்லா கதைகளும் காட்டுகின்றன. லீலை கதையும் அந்தவகையானதே.

பெண்ணின் லீலைகள் என்று கொள்ளலாம். ஆனால் அதைவிட அடுத்த தலைமுறையை உருவாக்குவது சார்ந்த முழுப்பொறுப்பையும் பெண்மேல் சுமத்தியிருக்கிறது இங்கே இயற்கை. ஆகவே பெண் இத்தனை முகங்களையும் சுமக்கவேண்டியிருக்கிறது. கன்னியாக கவரவும் அன்னையாகி பிள்ளைகளை பெற்றுக் காக்கவும் சுயநலமே உருவாகி குடும்பம் காக்கவும் அவளுக்கு இத்தனை முகங்கள் தேவையாகின்றன. பல பறவைகள் இப்படி ஒவ்வொரு செயலுக்கு வேறுவேறு சிறகுகள் கொண்டு முழுக்கவே வேறு பறவைகளாக மாறிவிடுகின்றன. அதேபோலத்தான் பெண்ணும். இது பெண்ணின் ஜாலம் அல்ல. இயற்கையின் மாயம் என்றுதான் சொல்வேன்

கே.வெங்கட்

***.

மதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.

தேவி சிறுகதையில் எனக்கு மிகவும் பிடித்தது,  ஒரு  காரியத்தை நிறைவேற்றுவதில்  நான்கைந்து பேரின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை அழகாகச் சொல்லியருப்பது.

அனந்தன் தான் நாடகத்தின் ஆசிரியன்.  இறுதியில் ஊர்மக்கள் எல்லாம் நாடகத்தை மிகவும் பாராட்டுகின்றனர்.  அனந்தனுக்கு மகிழ்ச்சி.

கதை,   அனந்தனுடைய சிந்தனை.  ஆனால், அந்த சிந்தனை மட்டுமே அந்த நாடகத்தை மக்களிடம் சேர்த்துவிடப்  போதுமானதாக இல்லை. லாரன்சு,  பெட்டி காதர், ஸ்ரீதேவி எல்லாரும் சேர்ந்துதான் அந்தத் தேர் நகர்ந்திருக்கிறது.

இதில் யாருடைய கருத்தையும் அனந்தன் முதலில் உடன்படவில்லை. பெட்டி காதர், 3 பெண்கள் நாடகத்தில் வேண்டும் என்கிறார்,  அனந்தன் முரண்படுகிறான்.  காதர் விடாப்பிடியாக இருந்து,  பின்பு  அனந்தன் புரிந்துகொண்டு ஒப்புக் கொள்கிறான்.ஸ்ரீதேவியை அனந்தன் வேண்டாம் என்கிறான், ஆனால் லாரன்சின் அழுத்தத்தால் ஸ்ரீதேவியை சேர்த்துக் கொள்கிறார்கள்.கடைசியில் பார்ததால்,  அந்த 3 பெண்பாத்திரங்களோ,  ஸ்ரீதேவியோ இல்லையென்றால்,  நாடகம் விழுந்திருக்கும்.    ஆனாலும் பாருங்கள், நாடகத்தின் உயிர்  அனந்தன் தான்.

ஆக, இங்கு யாரும் எதுவும் தனியாக எதையும் நிறைவேற்றிவிட முடியாது.   ஒருவர் உயிர் என்றால்,  தசை, எலும்பு, தோல் என்று மற்ற ஆட்கள் வேண்டியிருக்கிறது.  இல்லையென்றால், வெறும் உயிர், அது தலையாயதாக இருந்தாலும், பயனற்று இருந்துவிடுகிறது.

இன்னொரு கதையில் (வேரில் திகழ்வது), புலனாய்வு உயரதிகாரி இவ்வாறு சொல்லுவார்: “எந்த அளவுக்கு போலீஸ் என்ற அமைப்பில் நான் பொருந்திப் போகிறேனோ அந்த அளவுக்கு நான் வெற்றிபெறமுடியும். எத்தனை புத்திசாலியாக இருந்தாலும், மேதையாக இருந்தாலும், தனித்து செயல்பட்டால் ஒன்றும் சாதிக்கமுடியாது.”

அது நினைவுக்கு வந்தது.

அன்புடன்,
வி. நாராயணசாமி.

***

 இணைவு [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

நான் வீரபாண்டிய கட்டப்பொம்மன், பூலித்தேவன், மருதுசகோதரர்கள் என்றெல்லாம் படிக்கும்போது யோசிப்பேன். இவர்கள் அத்தனைபேரையுமே வெள்ளைக்காரன் நசுக்கியிருக்கிறான். அவனும் பெரிய படை எதையும் கொண்டுவரவில்லை. இவர்களிடம் இருப்பதைவிட சிறிய படையுடன்தான் அவன் வந்து போரிட்டிருக்கிறான் அப்படியென்றால் அவன் இன்னும்பெரிய வீரன்தானே? நம்முடையவர்கள் என்பதனால் இவர்களை நாம் கொண்டாடுகிறோம். அது வெறும் இனப்பற்றுதானே? வீரம் என்ற வேல்யூ மேல் நமக்கு நம்பிக்கை இருந்தால் நாம் கொண்டாடவேண்டியது பானர்மானை தானே?

அந்தக்கேள்விக்கு பதில்சொல்கிறது இணைவு என்றகதை. வெள்ளையர்கள் வீரன் – வீரவழிபாடு என்ற இடத்தை கடந்தபிறகே அவர்கள் உலகை ஜெயித்தார்கள். அவர்கள் ஒரு பெரிய ராணுவம். ஒர் அரச அமைப்பு. ஒவ்வொருவனும் அதில் ஓர் உறுப்பு. ஓர் இயந்திரம் போன்றது அது. உறுப்பு அதன் பணியைச் செய்யவேண்டும். அது ஒட்டுமொத்தமாகவே செயல்படும். அதன் ரூல்ஸ்தான் அதற்கு முக்கியம்.தனிப்பட்ட வீரம் அல்ல. மாவீரன் என்றாலும் தனிப்பட்ட முறையில் ரூல்களை மீறினால் தண்டிக்கப்படுவார்கள். ராபர்ட் கிளைவும் வாரன் ஹேஸ்டிங்ஸும் எல்லாம் தண்டிக்கப்பட்டார்கள்.

அந்த அமைப்பு ஒரு நவீன ராணுவம். நம்மிடையே இருந்தது பழைய முறை ராணுவம். ஆகவே இது தோற்றுத்தான் ஆகவேண்டும். வேலுத்தம்பியின் 35000 பேர் நூறு வெள்ளையர்கள்கூட இல்லாத 2500 பேர்கொண்ட பிரிட்டிஷ் ராணுவத்திடம் தோற்றது அப்படித்தான். சேமர்ஸின் அந்த பெரிய தன்னுரையாடல் ஆழமான ஒன்று

விவேக்ராஜ்

****

அன்புள்ள ஜெ,

வரலாற்றில் வீரம், காதல் என்ற விழுமியங்கள் தொல்காலம் முதல் சிறப்பிக்கப்பட்டிருகிறது. வரலாறு முழு நீளம் மனிதர்கள் காதலுக்காகவும், அநீதிக்கு ஏதிராகவும், சுதந்திரத்திற்காகவும் தனியாகவும் பிறருடன் சேர்ந்தும் போரிட்டிருக்கிறார்கள்.

இரு தனி மனிதர்கள் போரிட்டால் அதன் விளைவுகளால் அவர்களும் அவர்களின் குடும்பம் மட்டும் பாதிக்கப்படுவார்கள். ஆனால் அது மக்கள் இயக்கமாக மாறும் போது அதை நடத்தும் தலைவர்களின் பொறுப்பு விரிவடைகிறது. அத்தலைவர்கள் தன்னை பின்தொடரும் மக்கள் கூட்டத்தினரின் இறப்புக்கும் இன்னல்களுக்கும் பொறுப்பு ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களின் தன்முனைப்பும் அதிகாரத்தை நிலை நிறுத்தும் வெறியும் சுயநலமும் அதற்கு இடம் அளிப்பது இல்லை.

ஆனால் உண்டும் உறங்கியும் இறந்து போகும் சாதாரண மக்களுக்கு இந்த சலிப்பு தரும் வாழ்க்கையில் இருந்து சற்று விடுபட சாகசங்களும் அது அளிக்கும் உள்ளக்கிளர்சியும் தேவைப்படுகிறது. ஆகவே நெருப்பை நாடிச் சென்று வீழ்ந்து மடியும் விட்டில் பூச்சிகளைப்போல் இந்த வீரபுருக்ஷர்கள் என்று அழைக்கப்படுபவர்களை பின் தொடர்ந்து மாய்ந்து போகிறார்கள்.

சரித்திர புருஷர்களில் மகாத்மா காந்தி போன்ற ஒரு சிலரே இதற்கு விதி விலக்கு. மக்கள் கையில் துப்பாக்கிக்கு பதில் அஹிம்சை என்ற விழுமியத்தை அளித்தார்கள்.பேரழிவையும் உயிரழிவையும் தவிர்த்தார்கள். இவர்களே உண்மையான சரித்திர நாயகர்கள்.

நெல்சன்

****

69 ஆகாயம் [சிறுகதை]

68.ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–85
அடுத்த கட்டுரைநிழல்காகம், முதுநாவல் – கடிதங்கள்