கூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்

காக்காய்ப்பொன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

காக்காய்ப்பொன் கதையை வாசித்தேன். என் தியான வகுப்பில் நண்பர்களுக்கு அந்தக்கதையைச் சொன்னேன்.

பொதுவாக துறவு, ஆன்மீக வாழ்க்கை பற்றிய கதைகள் நிறையவே உண்டு. அவை எல்லாமே மூன்று வகை. ஒன்று முதிர்ச்சி இல்லாமல் துறவுக்குப் போனதைப்பற்றியும் அதிலிருந்து மீண்டதைப்பற்றியும். புதுமைப்பித்தனின் சித்தி அப்படிப்பட்ட ஒரு கதை

இரண்டாம் வகை கதைகள் துறவில் ஒரு சின்ன தவறு செய்தாலும் அனைத்துமே இல்லாமலாவதைப் பற்றி. டால்ஸ்டாயின் ஃபாதர் செர்கியஸ் அப்படிப்பட்ட கதை.

மூன்றாம்வகை கதை பிச்சமூர்த்தியின் ஞானப்பால். கள்ளமின்மையாலே எல்லாவற்றையும் அடைவதைப்பற்றி. எம்.எஸ்.கல்யாணசுந்தரம் எழுதிய மீன்சாமியார் கூட அப்படிப்பட்ட ஒரு கதைதான். அர்ப்பணிப்பால் அந்தச் சாமியார் வெல்கிறார்

ஆனால் இந்தக்கதை ஒரு புதிய விஷயத்தை சொல்கிறது. நான் துறவி நான் வேறு என்பதுதான் துறவை காப்பாற்றிக்கொள்வதற்கான வழி. அதையே பற்றிக்கொண்டு அடையாளமாக ஆக்கிக்கொண்டால் அதுவெ தடையாக ஆகிவிடும். காக்காவந்து சொல்கிறது நீ என்னவாக இருந்தாலும் ஆகாயத்திலே  மனுஷன்தான் என்று.

நான் துறவி என்று தேவையில்லாமல் மின்னுபவர்களை இந்தக்கதை காக்காய்ப்பொன் என்று சொல்கிறதா? இல்லை மனுசர் கண்களுக்கு படாத பொன்னை காக்காய் கண்டுபிடிக்கிறது என்பதா?

ராகவேந்திரன்

***

அன்புள்ள ஜெ..

காக்காய்ப்பொன் கதைக்குள் நுழைவதற்கான திறவுகோல்கள் கதைக்குள் ஆங்காங்கு சிதறி இருக்கின்றன. குடத்து நீரை கவிழ்த்து விட்டு , அதை வற்றாத நதியாக்கிய காகத்தின் curiosity  (இது கதையின் ஆரம்பத்திலேயே வருகிறது)

காகம் பாவம் , மின்னுவதெல்லாம் பொன் என நினைக்கிறது. பொன் என்பது மின்னும் தன்மை மட்டும்தான்  என நினைத்து அதன் கண்களுக்கு மட்டும் மின்னுவதாக தோன்றும் காப்பர் சல்பேட்டை கொணர்வது போன்றவை முக்கியமானவை. ஆபரணத்தைப் பார்த்ததும் சதானந்தரின் முதல் எண்ணம் , பெண் சார்ந்த அபவாதம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம்தான்

தங்கம் என்பது விழைவின் ,இச்சையின் , காமத்தின் குறியீடு. அதை அவர் அஞ்சிக் கொண்டு தவிர்த்துக் கொண்டு இருந்தாரேதவிர அதை கடந்து விடவில்லை என்பதைத்தான் அவரது பதட்டம் காட்டுகிறது

கடைசியில் அந்த அச்சத்தை கடந்து , இதற்குப்போயோ இவ்வளவு அஞ்சினோம் என்ற புன்னகையுடன் சமாதி அடைகிறார்

காகம் அவருக்கு அளித்த மிகப்பெரிய பரிசு என்பது அவர் விழைவு சார்ந்த அச்சத்தை கடந்து விட்டார் என்பதை அவருக்கே உணர்த்துவதுதான்

குடத்து நீராக இருந்த இருந்த அவரை கவிழ்த்துவிட்டு , நதியில் கலக்க வைத்ததாக கொள்ளலாம்

வெண்முரசு நாவலில் (குருதிச்சாரல் 37) துச்சளையின் இந்த தரிசனத்தை அவரும் அடைய காகம் உதவியிருக்கிறது

“காமம் துறக்க தவம்செய்வோர் கொள்ளும் அல்லல்களை நூல்களில் படிக்கையில் ஆழ்ந்த இரக்கமே ஏற்படுகிறது. வெட்டி வீசினால் அது மிக எளிது என அறியாதவர்கள்”” (குருதிச்சாரல்)

என்றென்றும் அன்புடன்

பிச்சைக்காரன்

***

கூடு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

கூடு கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். நான் மிகப்பெரிய சில அறிவுஜீவிகளை பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர்கள் வாழ்க்கையிலே ஒருசில விஷயங்களை தேடி அடைகிறார்கள். அவற்றைக்கொண்டு பெரிய கட்டமைப்புக்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் அதன்பிறகு அதையே தங்கள் உருவமாக கொண்டுவிடுகிறார்கள். அதையெல்லாம் அப்படியே உதறிவிட்டு போகிறவருக்குத்தான் அடுத்த கட்டம் சாத்தியம். எவ்வளவு பெரிதானாலும் அது கூடுதான். கூட்டில் இருந்து வெளியே எழுந்து சிறகு கொண்டே ஆகவேண்டும்

எஸ்.பிரபாகர்

***

Dear Jeyamohan

Just like Venn Murasu, your short stories are magnificent. You are just magically spinning the stories with attention to details be it historic, technology or cultural. Stories like “Pidi, Iraivan, Karavu, Vanavasam” are

about festivals, artists, art forms and some of the traditions which are new to me. Thanks for writing with so much efforts on researching.

“Koodu” is another story I like the best. The Ladakh region, untouched by the modern way of life, monasteries nestled on the mountains, indeed it is a story that takes one to a soul searching experience.

On the harmonious madness, you have touched the poignant side of your life and your amazing passion and will power to covert it into creativity. Any elaboration on this will not do enough justice. You are truly blessed by Ma Sarasvati Devi.

Thank you. Hope the young sparrows have come out of their nest.

Warm regards

Sobana Iyengar

***

69 ஆகாயம் [சிறுகதை]

68.ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–75
அடுத்த கட்டுரைகதைகள் கடிதங்கள்