ஐந்து நெருப்பு,போழ்வு- சிறுகதைகள்

 ஐந்து நெருப்பு[ சிறுகதை]

அன்புள்ள ஜெ

ஐந்துநெருப்பு ஒரு நேரடியான கதை. அதிலுள்ள ஐந்துநெருப்பு மட்டுமே உருவகம். நான்குநெருப்பாலும் அழுத்தப்பட்டும் முள்மேல் பாயும் கதை. ஆனால் இந்தக்கதையின் இதே நிலை உருவக ரீதியாக பல இளைஞர்களுக்கு வந்திருக்கலாம். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு என்க்கு அந்நிலை வந்தது. அப்பா திடீரென்று போனார். அப்போதுதான் அவ்வளவு கடன் இருப்பது தெரியவந்தது. அதற்கு பிறகு இந்தக் கதையிலுள்ள அதே நிலைதான். நான்குபக்கமு நெருப்பு. பாய்வதற்கு ஒரு வாசல். அது என்னவென்றே தெரியாது

நான் மிகமிகக் கூச்சமுள்ள மனிதன்.எவரிடமும் பேசமாட்டேன். ரொம்ப கௌரவம் பார்ப்பேன். நான் மார்க்கெட்டிங் வேலைக்கு போனேன். என்னுடன் தேர்வுசெய்யப்பட்ட இளைஞர்கள் 38 பேர். 34 பேர் நின்றுவிட்டார்கள். ஒரு வாரம்கூட நீடிக்கவில்லை. நான் நீடித்தேன். அதிலேயே இருந்து ஜெயித்தேன் அதில் நான் பட்ட அவமானங்களும் சவால்களும்தான் என்னை உறுதியானவனாக ஆக்கின. என்னிடம் இருந்த ஒரே தகுதி என்ன என்று ஒருமுறை யோசித்தேன். மிகச்சாதாரணமான படிப்பு. பி.காம். மிகச்சாதாரணமான தோற்றம். ஆங்கிலம் மட்டும் அல்ல தமிழ்கூட வாயிலே வராது. ஜெயித்தது ஒன்றே ஒன்றுதான் காரணம். என்னால் பின்னால் போகமுடியாது. நாலு நெருப்பு. நான் செய்த வேலையும் நெருப்புதான். ஆக அஞ்சுநெருப்பு. தவம் செய்தேன் என்று சொல்லமாட்டேன். வறுத்து எடுக்கப்பட்டேன்

இன்றைக்கு ஓர் ஆளாகிவிட்டேன். ஆனால் யோசித்துப்பார்த்தால் தற்செயலாக இது நடந்திருக்கிறது. என்னுடைய தேர்வு இல்லை. அப்படி இல்லாதபோது இது என் திறமைக்கான அல்லது இயல்புக்கான இடமாக இல்லாமலும் இருக்க வாய்ப்பிருக்கிறது

ஆர். சுரேஷ்குமார்

***

திரு. ஜெ,

“நீ எப்டிலே அந்தா தொலைபோவே?”

“போவேன்…” என்று அவன்சொன்னான் “போயாகணும்லா? பாத்துக்கிடுதேன்”

கதையின் இந்தக் கடைசி வரிகளில், குற்ற உலகுக்குள் நுழையப் போகிற முத்துவை மட்டுமல்ல, இசக்கியின் குடும்பம் இழந்த குடும்பத் தலைவன் இடத்தில் தன்னை வைத்துக் கொள்ள இருக்கும் மற்றொருவனையும் காண இயல்கிறது .

அதுவரை தான் பார்த்தே இராத இசக்கி மாமாவின், இரக்க குணமும், தயாள மனமும் முத்துவின் மனதில் பதியன் போட்டு வளர்ந்து, அவர் குடும்பத்தைக் காக்கப் போகும் நன்றியாக, பாம்பேக்கு துப்பாக்கியுடன் பயணம் செய்ய வைக்கிறது.

எதிர்காலத்தில் இசக்கி மாமாவின் அன்பே உருவான அந்தப் பெண்ணை மணந்து, அந்தக் குடும்பத்தை வழி நடத்துவான் என்ற திறப்பைக் கொடுக்கிறது, இவன் பனிரெண்டாம் வகுப்பு முடிந்து மூன்றாண்டுகளும், அந்தப் பெண் பட்டப் படிப்பு இரண்டாம் ஆண்டு படிப்பதுமான சிறு குறிப்புக்கள்.

“உள்ளே பெண்குரலில் ஏதோபேச்சு கேட்டது. அவர் உரத்தகுரலில் “ஆமா, அப்டித்தான். அதுதான். நான் சொன்னா செய்யணும். எனக்கு மறுசொல்லுசொல்லுதவ என் வீட்டிலே இருக்கவேண்டாம்!” என்றார். “புரியுதா?”

தான் என்றோ கட்ட வேண்டிய பெண்ணுக்கு கொடுத்த வார்த்தைக்காக தன் மனைவியையே அதட்டும் அந்த நிலை  அறத்தின் மற்றொரு வடிவமோ .

“இவ என்ன சாப்பிடவேமாட்டேங்குதா… கறிபோட்டுக்ககுட்டி” என்றாள் மகாலட்சுமி.

இந்த வார்த்தைகளில் உள்ள பிரியம், மகாலெட்சுமிக்குள் உறைந்து இருக்கும் அன்பே உருவான அன்னலெட்சுமியை நமக்குக் காட்டுகிறது.

கதையின் ஒவ்வொரு வரியும், எண்ண எண்ண விரிந்து கொண்டே செல்கிறது.

உங்களின் இந்த வரிசைக் கதைகள் நம்பிக்கை அளிக்கும் கதைகள் வரிசை என்பதால், மனதின் கணத்துடன், அவனும் மற்றும் அனைவரும் துயர் நீங்கி வாழ வேண்டும் என்று எண்ணம் தோன்றுவதை புறந்தள்ள இயலவில்லை.

அன்புடன்,

கணபதி கண்ணன்

***

இணைவு [சிறுகதை]

போழ்வு [சிறுகதை]     

அன்புள்ள ஜெ

போழ்வு இணைவு கதைகள் எதனைப் பற்றியவை என்ற சந்தேகம் எனக்கு இப்போது கிடையாது

ஆனால் ஒன்று, இதை நாம் இப்போது பேசிக்கொள்ளலாம். என்ன பயன்? நமக்கு ஒரு நாலைந்துபேருக்கு எறும்புக்கூட்டத்துக்கு மெலே போய் பார்க்கமுடியலாம். ஆனால் அன்றும் இன்றும் எறும்புக்கூட்டம் அதனுடைய மாஸ்மெண்டாலிட்டியால் தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் கூட்டான உணர்ச்சிகளையும் அதிலுள்ள அபத்த்தத்தையும் உணர்ந்தாலும் எவரும் எதுவும் செய்துவிட முடியாது.

தலைமைக்கான தேவை இல்லாமல் ஓர் அமைப்பு செயல்படமுடியும் என்றால்தான் உண்மையான ஜனநாயகம் அங்கே வந்திருக்கிறது என்று அர்த்தம். தலைமையை நம்பியே ஓர் அரசோ நிறுவனமோ செயல்படும் என்றால் அந்த தலைமையால் எந்த அளவுக்கு எடையும் அழுத்தமும் தாங்கமுடியுமோ அந்த அளவுக்குத்தான் நீடிக்கும்

வேலுத்தம்பியின் பிரச்சினை என்ன? அந்த அமைப்பின் அதீதமான எடைதானே? அதை அவரால் தாங்கமுடியவில்லை. பிளந்தார். பிளந்தபிறகு அழிவதற்கு முன் இணைந்தார்

பாலாஜி ராஜ்

***

இனிய ஜெயம்

இன்னமும் பின்தொடரும் நிழலின் குரல் தாக்கத்திலிருந்து வெளியேற வில்லை.  அந்த நாவல் பேசிய அதிகாரமையத்தின் உளச்சிக்கல். சகோதரர்களை நண்பர்களை வருங்கால எதிரி என்று அஞ்சி, சகோதர நட்புக் கொலைகளில் அந்தக் குருதியில் கை நனைக்கும் ஆளுமை. பின்னர் அதிலேயே கிடந்தது திளைப்பது.   க்ரிஷ்ணப்பிள்ளையை கொல்லும் தளவாயும், புகாரினை கொல்லும் லெனினும் வேறு வேறா என்ன?

தனது சொந்த மண்ணின் குலக்குகளை கொன்று குவித்த ஸ்டாலினின் செயலும், தனது சொந்த மண்ணின் நாயர் படையை ஆங்கிலேயரை கொண்டு சிதைக்கும் தளவாயின் செயலும் வேறு வேறா என்ன?  மேதகு பிரபாகரன்?

வரலாற்றில் மீண்டும் மீண்டும் அதுவே நிகழ்கிறது. க்ரிஷ்ணப்பிள்ளையை அவ்வாறு கொன்ற பிறகு தளவாய் உயிர் வாழ்ந்தது தர்மமே இல்லை. அண்ணனை அவ்வாறு  கொன்ற பிறகு  பத்மநாபன் தம்பி உயிர் வாழ்வது தர்மமே இல்லை. அதை தம்பி உணர்ந்தவராக இருக்கிராரே, அவரது குரலுக்கு வைத்தியர் என்ன மறுப்பு சொல்ல முடியும்?

மா வீரர்கள் என சொல்லிக்கொள்வோர் தாங்களது மக்களை வென்னீர் ஊற்றப்படும் எறும்புக் கூட்டம் போல சாகவிடுகிறார்கள் என்கிறார் தளபதி. வரலாறு நெடுக அவ்வாறே ஈழத்தின் இறுதி யுத்தம் உட்பட.  மிகுந்த மனச் சோர்வு அளித்த கதை. பி தொ நி குரல் நாவல் அளவே

கடலூர் சீனு

***

69 ஆகாயம் [சிறுகதை]

68.ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைபுதியகதைகள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநெடுநிலத்துள் – கடிதங்கள்