நிழல்காகம், இணைவு – கடிதங்கள்

கூடு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நலம்தானே? நானும் நலமே.

கூடுகதைபற்றி நிறையவே எழுதிவிட்டர்கள். உண்மையில் இவ்வளவு எழுதப்பட்டபின் கதை நீர்த்துவிடுமா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. இந்தச் சந்தேகம் முன்பு அறம் வரிசை கதைகளை வாசித்தபோது எழுந்தது உண்டு. அந்தக்கதைகளைப்போல அத்தனை பேசப்பட்ட கதைகளே இல்லை. வெவ்வேறு வடிவில் அந்தக்கதைகள் தமிழில் உள்ளன. இந்த தலைமுறையில் மிக அதிகமாகப் படிக்கப்பட்ட கதைகள் அறம் கதைகள்தான். ’

ஆனால் ஏழெட்டு மாசம் முன்பு அந்தக்கதைகளை திரும்ப வாசித்த்போது மிகமிக புதியவையாக இருந்தன. ஒவ்வொரு கதையிலும் புதியவை காணக்கிடைத்தன. வாசிப்பினால் எந்தக்கதையும் குறைவதில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது.

கூடு போன்ற கதையை ஓரு ஞானியின் விரிவு –சுருக்கம் என்று சொல்லலாம்தான். ஆனால் அது மட்டும் அல்ல அந்தக்கதை. அதன் தொடக்கத்தில் முக்தா விரிவான ஒரு சித்திரத்தை அளிக்கிறார், அது பௌத்தம் பற்றிய தேடல். அந்த தேடலின் கதைவடிவம்தன் கூடு.

பௌத்தத்தைத்தான் கண்டுபிடிக்கிறார்கள். ஆகவேதான் மடாலயத்தில் இருந்து மடாலயங்களுக்குச் செல்கிறார்கள். பௌத்தம் என்பது கூடு, அதிலிருந்து ஒளிவடிவமாக மலைகளுக்கு மேல் எழுவது ஒன்று உண்டு என்கிறது கதை. பௌத்த அமைப்பை தேடிச்சென்றால் மம்மிதான் கிடைக்கும். அதை உதிர்த்துவிட்டு மேலெழுந்த ஒளியை காண இன்னொரு கண் வேண்டும்

அதைத்தான் மீண்டும் கரு கதையிலே எழுதியிருக்கிறீர்கள். அந்த ஒளியின் நகரம்தான் ஷம்பாலா

ராஜசேகர்

***

அன்புள்ள ஜெ,

கூடு கதையில் வரும் புத்தத் துறவிகள் போல தங்களுக்குள்ளேயே ஆழ்ந்து, அமிழ்ந்து உடலைச் சுருக்கி உள்ளொளி பெருக்கி வெளி உலகிற்குத் தெரியாமலேயே வாழ்ந்து விண்ணேகியவர்கள் நிறைந்த நாடு நம் நாடே. உலகில் வேறெங்கும் இவ்வாறு இல்லை என்றே எண்ணுகின்றேன்.  அல்லாமல் உலகில் வேறெங்கும் இவ்வாறு இருந்தார்களா?

இதைப் போலவே முழுமையான ஞானம் பெற்று தங்களுக்குள்ளேயே ஆழ்ந்து விடாமல் தாங்கள் பெற்றதை உலகிற்கு உணர்த்தியவர்களும், நம் நாட்டில் அதுவும் குறிப்பாக தென்னகத்தில் தான் நிறைய என்று படித்திருக்கின்றேன். துறவி முக்தானந்தா போன்றோரும், துறவி நோர்பு போன்றோரும் கலந்துவாழ்ந்தாலும் நமக்கு முக்தானந்தர் போன்றோரே துறவி நோர்பு போன்றவர்களையும், அவர்களின் துறவின் திறத்தையும் காட்டி நமக்கும் வழிகாட்டுகின்றனர்.

இவ்வகையில் தாங்களும் உலகியலின் பல படிகளையும், துறவின் பல படிகளையும் காட்டுகிறீர்கள். வேண்டியவர் வேண்டியதை எடுத்துக்கொள்ளலாம் என்ற அட்சயபாத்திரம் நீங்கள். நன்றி.

அன்புடன்,
நாரா.சிதம்பரம்.

***

இணைவு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இணைவு கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். அது எனக்கு முழுக்கமுழுக்கச் சமகாலக் கதை. ஆனால் சமகாலக்கதையை பேசமுடியாமல் நாம் உணர்ச்சிமுட்டாள்களாக இருக்கிறோம், ஆகவே மெடுஸாவின் தலையை கேடயத்திலே பார்த்துக்கொள்கிறோம். அப்படியென்றால் நிலைமை எத்தனை மோசமாக உள்ளது என்று பாருங்கள்

வரலாற்று நாயகர்களுக்கு வரலாறு ஒரு முகம் கொடுக்கிறது. அவர்களின் முகம் வேறு. அங்கே ஆரம்பிக்கிறது போழ்வு. இணைவு கதையில் வேலுத்தம்பி தன்னுடைய முகத்தை திரும்பப்பெறுகிறார்

இந்தக்கதையின் மிகமிக நுட்பமான விவரிப்பு அந்தப் போரின் காட்சிதான். நம்முடைய ‘விடுதலை’ப்போர்கள் எல்லாமே தமாஷாகத்தான் இருக்கின்றன. கூகிள் புக்ஸில் கர்னல் சேமர்ஸ் எழுதிய ஜேர்னல் கிடைக்கிறது. வாசிக்கும்போது வருத்தமாகவே உள்ளது

ஆனந்த்

***

வணக்கம் ஜெ

இணைவு சிறுகதையை வாசித்தேன். கிழக்கத்திய மனங்களில் வீரர்களாக நிற்கும் பலரின் சரிவும் வீழ்ச்சியையும் இந்தக் கதையின் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது. குரூரமான பல வழிகளைக் கையாண்டு ஆட்சியைத் தக்க வைக்கும் போதே அவர்களின் பிளவு தொடங்குகிறது என்பதை முந்தைய கதையில் காண முடிந்தது. அந்தப் பிளவு பெரிதாகும் போது தன்னையே தற்கொடையாக அளித்து அதைச் சமன் செய்ய அல்லது இணைக்க முயல்கின்றனர்.

அரவின் குமார்

***

69 ஆகாயம் [சிறுகதை]

68.ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–74
அடுத்த கட்டுரைஇணைவு,தேனீ- கடிதங்கள்