ராஜன்,தேனீ- கடிதங்கள்

தேனீ [சிறுகதை]

அன்புள்ள ஜெ

என் அப்பா திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை அவர்களின் ரசிகர். ஏராளமான செய்திகளைச் சொல்லிக்கொண்டிருப்பார். அவருடையது அசுரசாதகம். நாதஸ்வரம் என்பது அசுணப்பட்சியின் பாட்டு என்பார். அசுணப்பட்சி யானையை கையால் தூக்கிக்கொண்டு பறக்கும் அளவுக்கு பெரியது. அதன் பாட்டு. அப்படி வாசிக்கவேண்டும் என்றால் உடம்பில் இருந்து ஏழு மூச்சுகளும் நாதஸ்வரத்தில் வரவேண்டும். ‘பிராணன் துடிக்கிற சங்கீதம்’ என்று சொல்வார்

இன்றைக்கு யோசிக்கும்போது ஒன்று தோன்றுகிறது. இன்றைக்கு சங்கீதம் மலிந்துவிட்டது. ஏராளமாக கிடைக்கிறது. ஆகவே ஜூனியர் வயதில் சங்கீதம் மீது பித்தாக இருக்கிறோம். பிறகு சலிப்பு. எப்பவாவது கேட்டால் உண்டு. ஏனென்றால் அதில் நமக்கு கற்பனை இல்லை. கொஞ்சமாக வந்தால்தான் கற்பனை நிற்குமா?

இந்தக்கதையில் அந்த ‘தேனீ’ [அவருடைய பெயர்கூட கதையில் இல்லை] கேட்டதுதான் உயர்ந்த சங்கீதம். அது ராஜரத்தினம் பிள்ளை வாசித்ததைவிட உயர்வான சங்கீதம்

எஸ்.கிருஷ்ணன்

***

அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு,

வணக்கம். நலம்தானே?

இன்று உலக தேனீக்கள் தினம். அதனால்தானோ என்னவோ தேனீ கதையைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிளையைப் பற்றிக் கட்டுரை எழுதுதல் எளிமையானது.  ஆனால் அவரின் மேதைமையை விளக்கும் வண்ணம் கதையாகப் புனைதல் சாமர்த்தியமான செயல்.கதை வெற்றி பெற்றுள்ளது. கதையைப் படிக்கும்போதே ராஜரத்தினம் பிள்ளை மறைந்தபோது,” சின்னதோர் குழலுக்குள்ளே ஜெகத்தையே உருட்டும் பாடம் எங்கு நீ கற்றாய் ஐயா” என்று அவருக்குக் கண்ணதாசன் பாடிய இரங்கற்பா நினைவுக்கு வந்தது.

புல்வெளிதேசம் நூலில் 14-ஆம் அத்தியாயம் அறைகூவலும் ஆட்டமும் என்பதில் “அதுவாதல்” என்பதைப் பற்றிக் கூறியிருக்கிறீர்கள். அது போல இங்கே சம்முகமணி தோடியாகவே மாறிவிட்டார்.

இத்தனைக்கும் அவர் ராஜரத்தினம் பிள்ளையைப் பார்த்ததோ அவர் இசையைக் கேட்டதோ இல்லை. துரோணரை மானசீகமாய் மனத்தில் வரித்துக் கொண்ட ஏகலைவன் போல அவரின் இசையை எப்பொழுதும் எந்த வேலையைச் செய்தாலும் மனத்தில் உருப்போட்டுக்கொண்டே வந்துள்ளார். அதனால்தான் அதுவாகி விட்டார்.

கோயிலின் உள்ளே தோடி அவர் காதில் ஒலிக்க அவர் தலையை ஆட்டி ரசிப்பது அவரின் அடி மன ஆழத்தில் படிந்திருக்கும் ஏக்கமும் ஈடுபாடுமே.

கொடுக்கும் தன்மை கொண்டவன்,”எனக்கு என்ன கிடைச்சுதுன்னு கணக்குப் பாக்க ஆரம்பிச்சா அதோட அவனது கை குறுகிடும்” என்பது உண்மையான கருத்து. அவன் எப்பொழுது பிரதிபலனாக எதையேனும் எதிர்பார்க்கிறானோ அப்பொழுதே அவன் விசாலமாக இருந்த அவன் உள்ளம் குறுகிவிட்டது என்றே பொருள்.

ஆண்டாள் நாச்சியார் ,”சென்று நாம் சேவித்தால்” என்று பாடுவார். இறைவனை நாம் சென்று சேவிக்க வேண்டும். அதற்குத்தான் ஆலயங்கள். அதேபோல நல்லிசையை நாம் தேடிச் சென்று கேட்க வேண்டும். அதுவே இசைக்கு நாம் கொடுக்கும் மதிப்பு,மரியாதை. தானாக வீடு வரும் எதுவும் நாளடைவில் நீர்த்துத்தான் போய்விடும். தொலைக்காட்சியில் தோன்றிய பட்டிமன்றங்கள் என்ன கதிக்கு ஆளாகி இருக்கின்றன என்பதைப் பார்க்கிறோம்.

“எப்ப நாம பாட்டைத் தேடிப் போகாம பாட்டு நம்மள தேடி வர ஆரம்பிச்சுதோ அப்பவே சங்கீதம் வெளிறிப்போச்சு” என்னும் வரி என்னுள் மறைந்த நம் பழைய கலைகளைத் தட்டி எழுப்புகின்றன.

கூத்து, நாடகம்.இப்பொழுது நாதஸ்வரம் போன்று மறைந்துவரும் துறைகளை நினைவூட்டும் கதைகள் எல்லாமே மனத்தில் இடம் பிடித்து மறையாமல் இருக்கின்றன.

வளவ. துரையன்.

***

ராஜன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

மகத்தான கதை என்று சிலவற்றைச் சொல்வோம். இனிமையான கூரிய கதை என்று சிலவற்றைச் சொல்வோம். ராஜன் அப்படிப்பட்ட கதை. அந்தக்கதையில் இரண்டு வரலாறுகள் உள்ளன. ஒரு வரலாறு மேலிருந்து கீழேநோக்கிச் சொல்லப்படுகிறது. கோவிந்தன் சொல்கிறார். இன்னொரு வரலாறு கீழிருந்து மேலேநோக்கிச் சொல்லப்படுகிறது. அதை பூதத்தான் சொல்கிறான்.

ஜெயக்குமார்

***

இனிய ஜெயம்

வணங்கான் கதைக்கு அடுத்த உணர்ச்சிக்கரமான கதை. அடிமை பூதத்தான் அரசனாக உயரும் கதை. யார் ராஜன் என அடிமைகளுக்கு பர்வதராஜன் உணர்த்திச் செல்லும் கதை.  யானை விட்டுத் தந்த நிலத்தில் சிறு பிள்ளைகள் போல ராஜா விளையாட்டு விளையாடிக்கொண்டிருப்போர் அந்த விளையாட்டே யானை விட்டுத் தந்ததால் மட்டுமே இயன்றது என்ற நிலையை மறந்து,   அறியாமைக்குள் விழுந்து அகம்பாவத்தால் எழுந்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

பர்வதராஜன் எந்த அரசன் வசம் இருக்க வேண்டும், அப்படி இல்லாமல் போனால் அவன் இறக்கவேண்டும் என்ற தன்முனைப்பு விளையாட்டு. யார் அரசன். அந்தத் தகுதி இவருக்கு உண்டு என்று அனைவருக்கும் பர்வதராஜன் உணர்த்தி விட்டான். கண்ணன் குமாரனும் அதை உணர்ந்து விட்டார் என்பதையே அவரது இறுதி மெய்ப்பாடு காட்டுகிறது.

மிக மிக முன்பு இது இலக்கியம் என்றல்லாம் போதம் கொள்ளும் முன்பு ஒரு வார  இதழில் வாசித்த கதை. சூழலில் சரியும் குடும்பம் ஒன்று. தம்புரான் ராஜா போல வளர்த்த யானையை சர்க்கஸ் கம்பெனிக்கு விற்று விடுகிறார். அந்த ராஜாவின் சேவகன் அந்த பாகன் கதறி அழுகிறான். சர்க்கஸ் கம்பெனி செல்லும் இடம் எல்லாம் போகிறான். அங்கே ராஜா அடிமையாக ஏவல் பணி செய்து ஜீவிக்கிறது. காலம் மாறி விட்டது. எல்லாமே மாறி விட்டது. இனி எதுவுமே மீளாது. மாறிப் போய் தன்னைக் கடந்து விட்ட காலத்தை உணராமல் சங்கிலி உரச நின்றிருக்கிறது ராஜன். இறுதியாக அதன் முகத்தை பார்த்து விடை பெற்று எங்கேநும் சென்று மறைய விரும்புகிறான் பாகன்.

ரகசியமாக இரவில் சென்று ராஜனைப்  பார்க்கிறான். பிரிவுத் துயர் தீர இருவரும் கட்டி அணைத்துக் கொள்கிறார்கள். இறுதியாக ராஜனுக்கு தான் கொண்டு வந்த வாழைக்குலையின் பழங்களை ஒவ்வொன்றாக ஊட்டி விடுகிறான். கண்ணீருடன் விடை பெறுகிறான். மறுநாள் சந்தையில் மதுவில் விஷம் கலந்து அருந்தி பாகன் செத்து விழுந்து கிடக்கிறான். சர்க்கஸில் ராஜன் செத்துக் கிடக்கிறது.

எங்கே வாசித்தேன். என்ன தலைப்பு. நினைவில் இல்லை. ஆனால் நிச்சயமாக சொல்ல முடியும் இது நீங்கள் எழுதிய கதை. எனோ இந்த ராஜன் கதையின் பூதத்தான் நாயர் அந்த பெயரறியா கதையின் யானை பாகனை நினைவில் எழுப்பி விட்டான்.

கடலூர் சீனு

***

அன்புள்ள சீனு

கதை உங்கள் மனசில் கொஞ்சம் மாறிவிட்டது. ஆனால் நான் எழுதிய கதைதான். தொகுப்புகளில் இருக்கிறதா என்று தெரியவில்லை

ஜெ

69 ஆகாயம் [சிறுகதை]

68.ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–73
அடுத்த கட்டுரைஉலகெலாம், லாசர்- கடிதங்கள்