உலகெலாம், லாசர்- கடிதங்கள்

 உலகெலாம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

நலம்தானே? நானும் நலமே.

உலகெலாம் என்னும் கதையை வாசிக்கும்போது அறிவியலின் ஆன்மிகமா என்ற எண்ணம் ஏற்பட்டது. அறிவியலையும் ஆன்மிகத்தையும் இணைப்பவர்கள் செய்யும் சில விஷயங்கள் உண்டு. அவர்கள் அறிவியல் ஆன்மிகத்தை endorse செய்கிறது என்று எழுதுவார்கள். அறிவியல் ஆன்மிகத்திற்குச் சான்று கிடையாது. அதன் வேலை அது அல்ல. ஆன்மிகம் வேறு ஒரு அறிதல்.

அது என்னவென்று எனக்கு ஒரு புரிதல் உள்ளது. நமக்கு அறியக்கிடைக்கும் ஒரு துளியில் நம்மை முழுசாக ஈடுபடுத்திகொண்டு முழுசாக அறிவது. அதாவது பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில் உள்ளதும் என்று உணர்வது. ஆனால் அறிவியல் அப்படி அல்ல. அது அண்டத்தை ஆராய்ந்து அதைப்பற்றிய முடிவுகளுக்கு வரும். அதற்குள் பாய்ச்சல்களுக்கு இடம் கிடையாது.

அறிவியலையும் ஆன்மிகத்தையும் இணைப்பவர்கள் இரண்டு வகை. அறிவியலில் உள்ள empiricism தான் அறிவியல் என்று நினைப்பவர்கள் ஒருவகை. அவர்கள் ஆன்மிகமான சடங்கு சம்பிரதாயங்களுக்கு empiricism அளிக்கும் சான்றுகளை முன்வைப்பார்கள். அதெல்லாமே பெரும்பாலும் கற்பனை. அல்லது காலுக்குத்தக்க செருப்பை வெட்டுவது. இன்னொருவகை அறிவியல் அதன் frontiers களிலே சொல்லும் விஷயங்களை கொஞ்சம் மழுங்கடித்து ஆன்மிகமாகக் காட்டுவது. பெரும்பாலான அறிவியல்புனைகதைகள் இந்தவகை.

இந்தக்கதையை நான் வாசிக்க ஆரம்பிக்கும்போது எனக்கு அந்தவகை கதை என்ற எண்ணம்தான் ஏற்பட்டது. ஆனால் ஆச்சரியமாக இலக்கியத்தின் எல்லையை அறிந்து எழுதியிருக்கிறீர்கள். இலக்கியத்திற்கு அறிவியல் என்பது வேறு ஒரு துறை. அங்கிருந்து அது metaphors and images மட்டும்தான் எடுத்துக்கொள்ள முடியும்.இந்தக்கதையில் அவர் தொலைதொடர்பு சாதனங்களை metaphor ஆகத்தான் பார்க்கிறார். அது வானை நிறைக்கிறது. அதனுடன் அவர் symbolic ஆகத்தான் தன்னை இணைத்துக்கொள்கிறார். நேரடியாக அல்ல. அது ஒரு அக அனுபவமே ஒழிய யதார்த்தம் கிடையாது

அப்படிப்பார்த்தால் நாம் வெளியே பார்க்கும் எல்லாவற்றையும் metaphors and images ஆக மாற்றித்தான் நம்முடைய ஆன்மிகத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். நிலவையும் சூரியனையும் அப்படிப் பார்க்கலாம் என்றால் ஏன் டெலிகாம் டவர்களை அப்படிப் பார்க்கமுடியாது? எல்லாமே அர்த்தமுள்ளவைதானே? இந்தக் கதையில் உள்ளது அந்த gestalt visionதான் என்று நினைக்கிறேன்

டி.ராமகிருஷ்ணன்

***

அன்புள்ள ஆசான்

(அறிவியல் என்றால் சுஜாதா என்று எளிதாக  ‘எளிய’  வாசகர்கள் சொல்லிவிடுவார்கள். ‘வானத்தில் ஒரு மௌன தாரகை’ ‘ஆகாயம்’ போன்ற வெகு சில கதைகளில் தான் அறிவியல் மரபின் தரிசனமோ அல்லது சுயதரிசனமோ வெளிப்படுகிறது.)

‘உலகெலாம்’ ‘சுற்றுகள்’ என்று bsnl கதைகளில் வெறும் அறிவியலை வெற்று தகவலாகவல்லாமல் அதன் தரிசனம் நோக்கி அதன் உட்கூறு அதனை மனித மனம் உடல் ஸ்பிரிட் என்று அனைத்தின் வாயிலாகவும் வெளிவருகிறது அந்த தரிசனத்தை கடத்த உங்கள் மொழி மிகப்பெரிய உதவியாகவுள்ளது

உங்கள் மொழி இங்கு முக்கியமாகதாக நான் கருதுகிறேன். இந்தக் கதையின் ஓட்டமே ஒருவித கரண்ட் சர்க்யூட் ஆக – ஒருவித எலக்ட்ரான் ஓடும் வேகத்துடன் ஓடுகிறது. ஒரு வார்த்தை கூட விரயமாகவல்லாமல்  கட்டுகோர்ப்பாக அதே நேரம் உறுதியாக வாசகரின் உள்ளத்தில் சென்று சேர்க்கிறது. என்னால் அந்த கரண்டை உணர முடிகிறது.

வெறும் சொற்கள் வாயிலாக. ‘சயன்ஸ்’ நன்று தெரிந்த பலருக்கு அதன் தாய் தத்துவம் தெரிவதில்லை. அல்லது அதை படிக்க வாய்ப்போ தருணங்களோ அமைவதில்லை. உங்கள் தத்துவ ஞானமும் அதை வைத்து நீங்கள் உருவாக்கும் தத்துவ களமும்  அதை கதை மற்றும் மொழியின் மூலம் நீலகண்டன் சுகுமாரன் மூலம் அந்த களத்தை எல்லோரும் புரியும் வகையில் எழுதியிருப்பது மிகப்பெரிய விஷயம். இது மிகப்பெரிய சாதனை.

‘மைகேல் க்ரைட்ன்’ போனறவர்கள் கதைகளில் (‘ஜுராசிக் பார்க்’, ‘வெஸ்டவ்வ்ர்ல்டு’, ‘நெக்ஸ்ட்’ ) இவைகளில் அறிவியல் கருதுகோள்கள் கதைகளில் வந்தாலும் இத்தகைய தரிசனமோ  குறிப்பாக  மொழியின்  ஓட்டமோ  இராது.

‘உலகெலாம்’ அறிவியல்  மேல் ஒரு ஆர்வம் மற்றும் அதன் தத்துவம் மேல் க்யூரியாசிட்டி இருக்கும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய கதை. இந்த ‘சுகுமார மனநிலை’ அறிவியலில் மிகவும் முக்கியமானது. நான் 2006 இல் ஒரு ஒன்பது மாதம் வெறும் அஸ்ட்ரானாமி நூலகள் குறித்து  படித்துக் கொண்டிருந்தேன்.  (அதை அப்படியே அடுத்த வருடம் மறந்தும் விட்டேன் :) )

அப்பொழுது ‘பிக்பாங்’ என்ற பதமே  அந்த தியரியை எதிர்த்து  ‘steadystate’ தியரி  முன்வைத்த Fred Hoyl என்பவர் உருவாக்கிய பதம் என்று கண்டுகொண்டேன்.
https://en.wikipedia.org/wiki/Fred_Hoyle

மிகமுக்கியமாக ‘உலகெலாம்’ கொடுத்த தரிசனத்தை அன்று பிக்பாங் தியரியை உறுதிப்படுத்திய ‘காஸ்மிக் மைக்ரோவேவ் பேக்ரவுண்ட் எமிஷன்’  என்பதை இரண்டு ரேடியோ அஸ்ட்ரானமர்ஸ் கண்டுபிடித்தார்கள் என்று படித்தபோது உண்டானது.

‘பிக் பாங்’ என்பதன் மூலம் இந்த யுனிவர்ஸ் உருவானதென்றால் -அப்பொழுது உண்டான  ‘மைக்ரோவேவ்’ ரேடியேஷன் நம்மால் இன்னமும் ‘கேட்கமுடியும்’ ‘உணரமுடியும்’. இதுவே அந்த தியரியின் கோரோலரி.

இதை ஏதெச்சையாக இரண்டு  ரேடியோ அஸ்ட்ரானமர்ஸ் உணர்ந்தார்கள். அதனால்  ‘steadystate’ தியரி  ஒதுக்கப்பட்டு ‘பிக் பாங்’ தியரி ஊர்ஜிதமானது

The accidental discovery of the CMB in 1964 by American radio astronomers Arno Penzias and Robert Wilson[1][2] was the culmination of work initiated in the 1940s, and earned the discoverers the 1978 Nobel Prize in Physics.
https://en.wikipedia.org/wiki/Cosmic_microwave_background

அதை படித்தபோது – ‘பேரண்டம் உருவானபோது’ இருந்த ஒன்றை  தொடும் தூரத்தில் உணரும் தூரத்தில் இருக்கின்றது என்பது மிகப்பெரிய கிளர்ச்சியை கொடுத்தது. அந்த தியாரிப்படி இந்த பேரண்டம் மொத்தமும் அந்த ஒற்றை வெடிப்பில் இருந்து வந்தது தான். இருந்தாலும் ‘ஆதார’ சுருதியாக மைக்ரோவேவ் எமிஷன் இருப்பது நரம்பை அதிரச்செய்யும் ஒன்றாக இன்றும் எனக்குள்ளது.

ஒன்பது மாதம் படித்த பின் உண்டான அதே கிளர்ச்சியை ‘உலகெலாம்’ ஒரு கதையாக அதே உணர்வை கடத்துவது மிகப்பெரிய விஷயம். மிகப்பெரிய சாதனை.

கரடி நாயரின் மொழியில் சொல்வதென்றால் நீங்கள் ‘கெஜகில்லில்லா’ :)

நன்றி ஆசான்

அன்புடன்

ஸ்ரீதர்

***

லாசர் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இந்தக் கதைகளில் எல்லாவற்றைப் பற்றியும் ஏராளமான மதிப்பீடுகள் வாசிப்புகள் வருகின்றன. கிறிஸ்தவ ஞானப்பின்னணி கொண்ட கதைகளான அங்கி, ஏதேன், லாஸர் போன்ற கதைகளுக்கு மிகக்குறைவாகவே வாசிப்புகள் வந்துள்ளன. ஏனென்றால் அவற்றின் தியாலஜி இந்துக்களான பெருவாரியான வாசகர்களுக்கு தெரியாததனால் என்று நினைக்கிறேன்

இந்த வரிசை கதைகளில் லாசர் மிக முக்கியமான கதை. கிறிஸ்தவத்தில் உயிர்த்தெழுவது என்பது ஓர் அடையாளம். கிறிஸ்துவுக்குள் உயிர்த்தெழுந்தால்தான் மீட்பு. அது ஒருவகையில் பழைய உடலை விட்டுவிட்டு மறுபிறப்பு எடுப்பது போல. பிராமணர்கள் பூணூல் போடுவதை மறுபிறப்பு என்பார்களே அதைப்போல. இங்கே ஒரு வாட்ச் மறுபிறப்பு எடுக்கிறது.அதைப்போல லாசர் ஆன்மீகமாக மறுபிறப்பு எடுக்கிறான்.

அவன் எளிமையான பையன். கள்ளம்கபடு இல்லாதவன். அவனுடைய தங்கையின் சாவால் அவன் பெரிய அளவில் ஒரு ஆன்மீகமான மரணத்தை அடைந்துவிடுகிறான். அதிலிருந்து அவன் மறுபிறப்பு எடுப்பதைத்தான் கால்டுவெல் அந்த வாட்சை உயிர்ப்பிப்பதைக்கொண்டு சொல்லியிருக்கிறீர்கள்

ஏசு லாசரை உயிர்த்தெழச் செய்தார். அது பைபிளில் வரும் கதை. அந்த நிகழ்ச்சிதான் பைபிளில் இருந்து அதே வசனங்களுடன் அந்த கதைக்குள் வாசிக்கப்படுகிறது. அதைத்தான் கால்டுவெல் கடைசியில் அந்த பிரார்த்தனையிலும் சொல்கிறார்

கால்டுவெல்லை மொழியறிஞர் என்றுதான் அறிவோம். அவர் ஒரு ஆன்மீகவாதி ஞானி என்று காட்டும் கதை இது

ஜான் பீட்டர்

***

அன்புள்ள ஜெ,

‘லாசர்’ சிறுகதை வாசித்தேன். காலம் நெடுகிலும் அச்சிறுவன் லாசர் போன்றோரை பார்க்க முடியும். அன்று அந்த கை-கடிகாரத்தை பார்த்து வியப்புற்றோம், இன்று தகவல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை கண்டு வியப்புறுகிறோம்.

லாசர் கதையை படித்த பின்பு ஒரு ‘சொன்னதை சொல்லும் கிளியுடன்’ உரையாடியது போன்று  இருந்தது. மற்றவர்கள் சொல்லும் அத்தனையும் திரும்பச் சொல்லி, தொடர்ந்து வரும் இரு வாக்கியங்களில் நேர்மாறான கருத்து அர்த்தம் உள்ளது என்று கூட புரியாமல் இருக்கும் சிறுவன்.

கை-கடிகாரத்தை வண்டாக நினைத்து அதனுள் பாதிரி உயிர் திரும்ப வர வைத்தபோது, தன் ‘குட்டி’யே அந்த வண்டின் உருவத்தில் உயிர்த்தெழுந்து வந்ததாக கண்ணீர் வழிந்தான். உண்மையில் லாசரே உயிர்பெற்றான். அந்த ‘உயிர்பெறுதல்’ புற வயமாக உண்மை இல்லை என்றாலும்,  அதை நம்புவோர் அகத்திற்கு அது நூற்றுக்கு நூறு உண்மையாகும். அந்த நம்பிக்கை தான் பல உயிர்களை நடத்தி செல்கிறது. ஆனால் உலகத்தில் எல்ல செயலுக்கும் ஒரு விலை உள்ளது போல, அந்த புற வயமான பொய்களால் பல்வேறு சமுதாய சிக்கல்கள் வராமலும் இல்லை.

அன்புடன்,

பிரவின்,

தர்மபுரி.

***

69 ஆகாயம் [சிறுகதை]

68.ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]