மூன்று டைனோசர்கள்

மூன்று வருகைகள்.

செங்கோலின் கீழ்

பல்லிகளை பற்றி பார்த்துக்கொண்டிருந்தேன். அவை டைனோசர் வம்சம் என்று தோன்றும். ஆனால் பல்லிகளைவிட பறவைகள்தான் டைனோசர்களுக்கு நெருக்கமானவை என்று தெரிந்துகொண்டேன். அவற்றின் கால்களும் நடையும் கழுத்தும் எல்லாமே டைனோசரின் நீட்சிகள். அலகு வந்தது, வால் அகன்றது.

நேற்று காலை அருண்மொழி வந்து “குருவி குஞ்சு விரிஞ்சிருக்கு” என்றாள்.

“அப்டியா?நான் பாக்கலையே?”என்றேன்

“கீ கீன்னு சத்தம் வந்திட்டே இருக்கு… நீ என்ன பாத்தே?”என்றாள்

நான் சைதன்யாவிடம் சொன்னேன். அவள் உடனே சென்று நாற்காலியை இழுத்துப்போட்டு செல்பேசியில் புகைப்படம் எடுத்து வந்தாள். மூன்று வாய்கள் அவள் அசைவை கண்டதுமே திறந்திருக்கின்றன. அந்தப் படம் அவற்றின் அசைவால் மங்கலாகிவிட்டது

அதன்பின் அவள் தங்கள் அன்னை அல்ல என்று உணர்ந்து தூங்கிவிட்டன. மூன்று சிறகில்லா சிற்றுயிர்கள். ஆச்சரியமாக, அவை பறவைகள் அல்ல மூன்று டைனோசர்துளிகள்

அவற்றின் பசி பயங்கரமானது. ஒருவகையான பிரபஞ்சப்பசி. அம்மாவும் அப்பாவும் மாறிமாறி வந்து ஊட்டிக்கொண்டே இருக்கின்றன. எவ்வளவு ஊட்டினாலும் போதாது. வளர்வன அனைத்தும் பசிகொண்டவை. பசி என்பது ஒரு வகை தீ. தீயால் வளராமலிருக்க முடியாது. அதற்கு திகழ்வதும் வளர்வதும் ஒன்றே.

வீட்டுக்குள் மூன்று புதிய உயிர்கள். மூன்று டைனோசர்கள். ஆனால் நல்லவேளை அவற்றுக்கு சிறகு முளைத்துவிடுகிறது. பறந்தேயாகவேண்டும் என்ற நிலை வந்துவிடுகிறது. அவை டைனோசர் ஆவதில்லை. இனிய சிறிய கிள்ளைமொழிப் பறவைகளாகவே நீடிக்கின்றன

ஆனால் ஒருநாளைக்கு நூறுமுறைக்குமேல் அவை புழுக்களையும் பூச்சிகளையும் பிடித்துக்கொண்டுவந்து ஊட்டுகின்றன. அந்த சிற்றுயிர்களுக்கு அவை டைனோசர்கள்தான். புகைப்படத்தை பார்க்கையில் குட்டி டைனோசர்களின் தூக்கத்தைக் கண்டு மனம் மலர்கிறது. அவற்றின் ஆவேசமான வாய்திறப்பைக் கண்டு சிரிப்பு வருகிறது. வளர்க என்றுதான் சொல்லத் தோன்றுகிறது

***

61 லாசர் [சிறுகதை ]

60 தேவி [சிறுகதை]

59 சிவம் [சிறுகதை]

58 முத்தங்கள் [சிறுகதை]

57 கூடு [சிறுகதை]

56 சீட்டு [சிறுகதை]

55 போழ்வு [சிறுகதை]

54 நஞ்சு [சிறுகதை]

53 பலிக்கல்[சிறுகதை]

52 காக்காய்ப்பொன் [சிறுகதை]

51 லீலை [சிறுகதை]

50 கரவு [சிறுகதை]

49.ஐந்து நெருப்பு[ சிறுகதை]

48.நற்றுணை [சிறுகதை]

47.இறைவன் [சிறுகதை]

46.மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45.முதல் ஆறு [சிறுகதை]

44.பிடி [சிறுகதை]

43.கைமுக்கு [சிறுகதை]

42.உலகெலாம் [சிறுகதை]

41.மாயப்பொன் [சிறுகதை]

40.ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38 மதுரம் [சிறுகதை]

37 ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36 வான்நெசவு [சிறுகதை]

35 பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34 பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33 வான்கீழ் [சிறுகதை]

32 எழுகதிர் [சிறுகதை]

31 நகைமுகன் [சிறுகதை]

30 ஏகம்

29 ஆட்டக்கதை [சிறுகதை]

28 குருவி [சிறுகதை]

27 சூழ்திரு [சிறுகதை]

26 லூப் [சிறுகதை]

25 அனலுக்குமேல் [சிறுகதை]

24 பெயர்நூறான் [சிறுகதை]

23 இடம் [சிறுகதை]

22.சுற்றுகள் [சிறுகதை]

21.பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20.வேரில் திகழ்வது [சிறுகதை]

19.ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18.தங்கத்தின் மணம் [சிறுகதை]

17.வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16.ஏதேன் [சிறுகதை]

15.மொழி [சிறுகதை]

14.ஆடகம் [சிறுகதை]

13.கோட்டை [சிறுகதை]

12.துளி [சிறுகதை]

11.விலங்கு [சிறுகதை]

10.வேட்டு [சிறுகதை]

9.அங்கி [சிறுகதை]

8.தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7.பூனை [சிறுகதை]

6.வருக்கை [சிறுகதை]

5.“ஆனையில்லா!” [சிறுகதை]

4.யா தேவி! [சிறுகதை]

3.சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2.சக்தி ரூபேண! [சிறுகதை]

1 எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைநிழல்காகம்[சிறுகதை]
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–63