J,
The short stories are fantastic. Not just the fact that we are getting one a day (which is unbelievable), but each one that I have read, is a gem. The content, the characters, the art of storytelling, the depth, the questions they rise… fascinating.
Mani Ratnam
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
ஒன்றன் பின் ஒன்றாக வந்து விழுந்து கொண்டே இருக்கும் கதைகள் பிரமிக்கவைக்கின்றன. உங்கள் கையில் இருப்பது எழுதுகோலா இல்லை மந்திரக்கோலா?
சரி! நீங்கள் நினைவு தெரிந்த நாளிலிருந்தே உங்களைச்சுற்றி நடந்தவற்றை, ஒன்றைக்கூடத் தவறவிடாமல் உற்றுகவனித்திருக்கிறீர்கள், அந்த நினைவுகளை அப்படியே மனதில் சேதாரம் இல்லாமல் சேகரம் செய்துவைத்திருக்கிறீரகள்.
ஆனால் அவற்றை இப்படி கதைகளாக மாற்ற இவை மட்டும் போதுமா? அவை கதைகளாகும் தருணத்தை ஸ்புரிக்க (லாசராவின் பாஷையில்) செய்த மாயம் எது? சத்தியமாக புரியவில்லை.
இந்த கதைகள் அனைத்திலும் மையச்சரடாக நான் உணர்ந்தது மனிதனுக்கு உள்ளே இருக்கிற தெய்வதத்தை மீட்டுகிற பொற்தருணங்கள்தான்.
ஓவ்வொன்றைப் பற்றியும் நிறைய எழுதவேண்டும் என்று ஆசைதான் . (எங்களுக்காக நீங்கள் எழுதிக் குவிப்பதற்கு அந்த குறைந்த பட்ச மரியாதையாவது செய்யவேண்டும் என்ற நினைப்புதான்). நான்கு வாக்கியங்கள் எழுதுவதற்குள் இங்கே நமக்கு நாக்கு தள்ளுகிறது. ஆனாலும் உங்கள் புரிதல் மீது உள்ள நம்பிக்கைதான் எழுத வைக்கிறது.
நற்றுணை படித்ததும் தோன்றியது கேசினி மாதிரி ஒரு யஷி உங்களுக்கு அருகில் உடகார்ந்து கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறதோ என்று.
அன்புடன்
மாலதி சிவா
***
அன்புள்ள ஜெ
கதைகளை தொடர்ந்து வாசித்துவருகிறேன். ஒரு தொடர்ச்சியில் வரும் கதைகள். எந்த தொடர்ச்சியும் இல்லாமல் தாவிச்செல்லும் கதைகள் என்று பலவகை கதைகள். ஒரு ஆழமான madness நிகழாமல் இதை எழுத முடியாது. நிறைவில்லாமல் வேறு வேறு வாழ்க்கைகளில் புகுந்து வாழ்ந்து பார்ப்பது. இது கதைகேட்கும் குழந்தைகளில் ஒரு வயதில் இருக்கிறது. பிறகு இல்லாமலாகிவிடுகிறது. அந்த குழந்தைத்தனம் எஞ்சியிருப்பவர்களால்தான் இதை எழுதமுடியும்.
உலகில் உள்ள மாபெரும் எழுத்தாளர்கள் எல்லாம் தத்துவம் அரசியல் எதனாலும் ஆட்டுவிக்கப்பட்டவர்கள் அல்ல. கதை என்பதனால் ஆட்டுவிக்கப்பட்டவர்கள். கதை என்பது parallel life. அங்கே ஒரு unityயை உருவாக்க அவர்கள் முயல்வார்கள். ஆனால் அந்த unityயை அதற்கு வெளியே உள்ள வாழ்க்கைக்கு போட்டு அதை ஒரு தத்துவம் கொள்கை என்றெல்லாம் ஆக்க முயலமாட்டார்கள்.
இந்தக்கதைகள் அனைத்திலும் உள்ள கதைக்கொண்டாட்டம்தான் இலக்கியத்தின் முக்கியமான அழகு. சென்ற தலைமுறையில் இலக்கியவாதிகளுக்கு reality மீது ஒரு obsession இருந்தது. அதற்கு முன்பு அவர்கள் தங்களை தத்துவவாதிகளாகக் கற்பனைசெய்துகொண்டிருந்தார்கள். இன்றைக்கு கதைசொல்லி மட்டும்தான் என்ற தெளிவை அடைந்திருக்கிறார்கள். கதைகளின் பொற்காலம். வாழ்த்துக்கள்
எஸ்.ஸ்ரீனிவாஸ்
***