கடிதங்கள்

நாளிரவு

பொற்கொன்றை!

இன்றைய மலர்

வான் அலை

நாற்புறமும் திறத்தல்

வீடுறைவு

தனிமைநாட்கள், தன்னெறிகள்.

கொரோனோவும் இலக்கியமும்

தனிமையின் புனைவுக் களியாட்டு

அன்புள்ள ஜெ,

இணையத்திலே உங்களைப்பற்றிய வசைகளை பார்த்துக்கொண்டிருந்தேன். தரமான குரல் என நான் நினைக்கும் எவரிடமிருந்தும் அப்படி ஒரு வசை வராதது நிறைவாகவே இருந்தது. கீழ்களின் வசை என்பது ஒருவகையான அங்கீகாரம்தான். ஜெயகாந்தனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் புதுமைப்பித்தனுக்கும் அது நிறையவே இருந்தது.

இந்த வசைகளின் மனநிலை என்ன? ஒரு உதாரணம் சொல்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் இஸ்லாமியர் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளக் கூடாது, அப்படி தனிமைப்படுத்திக் கொள்ளும் போக்கு அவர்களில் சிலரிடம் நிலவுகிறது, முன்பு அவர்கள் அப்படி இல்லை என்று ஒரு குறிப்பை எழுதியிருந்தீர்கள். கிட்டத்தட்ட ஒரு மாதம், ஆம் ஒரு மாதம், திமுக காரர்களும் கம்யூனிஸ்டுகளில் சிலரும் உங்களை கீழ்த்தரமாக வசைபாடினார்கள். நீங்கள் சொன்ன ஒவ்வொரு வரியையும் திரித்தார்கள். இஸ்லாமியர் மீதான பெருமதிப்புடன், உருவாகிவரும் சூழலைக் கண்ட பதற்றத்துடன் எழுதப்பட்ட குறிப்பு அது.

நீங்கள் எழுதிய் அதை, அப்படியே, இன்னும் கூர்மையாக இஸ்லாமியர் ஒருவர் [Dr. Fazil Freeman Ali, PhD ]எழுத திமுக காரரான இஸ்லாமியர்  எம்.எம்.அப்துல்லா அவர்கள் அதை பகிர்ந்திருக்கிறார். அது அனைவருக்கும் ஏற்புடையது. அப்படியென்றால் இவர்கள் கருத்தைத்தான் எதிர்க்கிறார்களா? இல்லை. ஆளை எதிர்க்கிறார்கள். தனிப்பட்ட காழ்ப்பு.

இவர்களை சென்று பார்த்தேன். சரியான அரசியல்வாதிகளுக்கு உங்கள்மேல் பிரச்சினை ஒன்றுமில்லை. தங்களை எழுத்தாளர்கள் என்று நினைக்கும், அப்படி முன்வைக்கும், சிலர்தான் அரசியல் முக்காடு போட்டுக்கொண்டு இந்த வசைகளை கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களால் ஒரு நல்ல படைப்பை, ஒரு நல்ல கட்டுரையைக்கூட எழுதிவிடமுடியாது என்ற கசப்பு மட்டும்தான் இது. நீங்கள் படைப்புசக்தியுடன் வெல்லமுடியாதவராக நீடிக்கும் வரை இது தொடரும்

மகாதேவன்

***

அன்புள்ள ஜெ

நலம்தானே?

சமீபத்தில் இணையத்தில் ஒரு சிறு கும்பல் உங்கள் மேல் காழ்ப்பை கொட்டிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அவர்களைச் சீண்டியது இந்தக் கதைகள் உருவாக்கும் மாபெரும் அதிர்வு.  இன்றைக்கு ஓரளவு இலக்கிய ரசனை உடையவர்கள் அனைவருமே பேசிக்கொண்டிருப்பது இக்கதைகளைத்தான். இத்தனை தரமான கதைகள், இத்தனை வீச்சுடன் தமிழில் தொடர்ச்சியாக வெளிவந்ததே இல்லை.

ஆனால் நான் சொல்ல விரும்புவது ஒன்று உண்டு. இன்றைய சூழலில், நீங்கள் சொல்வதுபோல தீப்பொறி ஆறுமுகங்கள் இலக்கியத்தின்மேல் செல்வாக்கு செலுத்த முயல்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் ஒருவகையான கும்பலாகச் சேர்ந்துகொண்டு தாக்கி, மிரட்டி, அவதூறு செய்து தங்கள் அதிகாரத்தை உருவாக்குகிறார்கள்

இந்த அதிகாரத்தை இங்கிருக்கும் இளம் எழுத்தாளர்கள்தான் எதிர்க்கவேண்டும். பலர் அஞ்சி சும்மா இருக்கிறார்கள். சிலர் உங்கள் மீதான கோபத்தால் ஒத்துப்போகிறார்கள். ஒரு படைப்பை வாசிக்கவோ பேசவோ தகுதியே அற்ற இந்த கும்பலை இப்படி அனுமதிப்பவது இவர்கள் செயல்படுவதற்கான இடத்தைத்தான் இல்லாமலாக்கும்.

ராஜ்குமார்

***

அன்புள்ள ஜெ,

எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கமாட்டேன். உங்கள் பதிவுகள் மூலம் இந்த நாட்களை நீங்கள் மிக மிக உற்சாகமாக ஆக்கி வருகிறீர்கள் என்று தெரிகிறது. உங்கள் எழுத்துக்கள் மூலம் அது எனக்கும் தொற்றிக் கொள்கிறது. நன்றி!

நீங்கள் நம்புவீர்களோ என்று நண்பர் காளி பிரசாத்திடம் சொன்னேன்.  அவருக்கும் அப்படி நிகழ்ந்திருக்கிறதாகச் சொன்னதால் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. ஏற்கெனவே சிலமுறை நீங்கள் ஏன் கனவில் நீங்கள் வந்திருக்கிறீர்கள். இன்றைய (நேற்றிரவு) கனவிலும் நீங்கள் வந்தீர்கள். இலக்கிய நிகழ்வுக்குப் பின் நண்பர்களோடு நின்று உரையாடும் காட்சி. மிக நெருக்கமாக உணர்ந்தேன். விழித்துப் பார்த்தால் நண்பர்கள் சிலர் உங்கள் பிறந்தநாளை நினைவூட்டினர். எனக்கு இதை எப்படி விளங்கிக் கொள்வது என்று தெரியவில்லை. கனவின் தாக்கம் இப்போது பிரமிப்பாகிவிட்டது. இந்த நாள் நினைவில் இருந்து நீங்காது.

நீங்கள் தமிழின் செல்வம். மாபெரும் தமிழ் எழுத்தாளருக்கு, என் ஆசிரியருக்கு, என் ஆழ்மன பிறந்தநாள் வாழ்த்துகள்!

சில சிறுகதைகள் எழுதி முயன்று வருகிறேன். அதற்கும் உங்கள் ஆசிர்வாதங்களைக் கோருகிறேன். விரைவில் ஆசிரியரை அருகிருந்து சந்திக்க வேண்டும்!

நன்றி!!

பேரன்புடன்,

தீனதயாளன்

***

மாயப்பொன் [சிறுகதை]

ஆழி [சிறுகதை]

மதுரம் [சிறுகதை]

வனவாசம் [சிறுகதை]

ஓநாயின் மூக்கு [சிறுகதை]

வான்நெசவு [சிறுகதை]

பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

வான்கீழ் [சிறுகதை]

எழுகதிர் [சிறுகதை]

நகைமுகன் [சிறுகதை]

ஏகம் [சிறுகதை]

ஆட்டக்கதை [சிறுகதை]

குருவி [சிறுகதை]

சூழ்திரு [சிறுகதை]

லூப் [சிறுகதை]

அனலுக்குமேல் [சிறுகதை]

பெயர்நூறான் [சிறுகதை]

இடம் [சிறுகதை]

சுற்றுகள் [சிறுகதை]

பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

வேரில் திகழ்வது [சிறுகதை]

ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

தங்கத்தின் மணம் [சிறுகதை]

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

ஏதேன் [சிறுகதை]

மொழி [சிறுகதை]

ஆடகம் [சிறுகதை]

கோட்டை [சிறுகதை]

துளி [சிறுகதை]

விலங்கு [சிறுகதை]

வேட்டு [சிறுகதை]

அங்கி [சிறுகதை]

தவளையும் இளவரசனும் [சிறுகதை]

பூனை [சிறுகதை]

வருக்கை [சிறுகதை]

“ஆனையில்லா!” [சிறுகதை]

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

சக்தி ரூபேண! [சிறுகதை]

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை

முந்தைய கட்டுரைஆழி, பத்துலட்சம் காலடிகள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஉலகெலாம் [சிறுகதை]