சூழ்திரு [சிறுகதை]
அன்புள்ள ஜெ
கொரோனோக் காலக் கதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இன்றைய கதை அற்புதமான ஒன்று. அதிலுள்ள ஒரு connoisseur வாழ்க்கை. அது நான் ஐரோப்பா போன்ற ஒரு நாகரீக உச்சம் அடைந்த நாட்டில்தான் இருக்கும் வாழ்க்கை என்று நினைத்திருந்தேன். ஒரு சின்ன ஊரில் சாப்பாடு சங்கீதம் யானை என்று எல்லாவற்றிலும் ஒரு உயர்ந்த ரசனையுடன் இருந்திருக்கிறார்கள். அந்த நுட்பமான ரசனை திகைப்பை அளித்தது. அந்த வாழ்க்கையையே ஒரு கொண்டாட்டமாக அனுபவிக்கிறார்கள்
ஆனால் பிறகு நினைத்துக்கொண்டேன். இந்த வாழ்க்கை சென்றகால ஃப்யூடல் வாழ்க்கை. இது உருவாகி ஒரு ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டு நீடித்திருக்கிறது. ஆனால் அதற்குப்பின்? இங்கே அமெரிக்காவில் ஒரு முதலாளித்துவ ரசனை உண்டு அதில் connoisseur கள் உண்டு. அவர்கள்தான் நமக்கு இன்றைக்கு உருவாகவில்லை. இந்தியாவில் இன்று கலைகளிலே திளைத்து வாழ்பவர்க்ள் இல்லை. சாப்பாட்டில் திளைப்பதுகூட கிடையாது. இது பெரிய இழப்புதான்
சந்திரசேகர்
அன்புள்ள ஜெ
சூழ்ந்திரு என்று கதையின் தலைப்பை படித்தேன். கதையை மொத்தமாக படித்தபின் தலைப்பை மறுபடி படித்தேன். சூழ்ந்த திரு, சூழ்ந்திருக்கும் திரு, திருவை சூழ்க என்றெல்லாம் அர்த்தம் வருகிறது. செல்வம் சூழ்ந்திருக்கிறது. எல்லாமே செல்வம்தான். ருசியாக அது நிறைந்திருக்கிறது. அதை நாடுக என்று சொல்கிறது கதை
சுவையாகிவருவது என ஒரு கட்டுரையை முன்னால் எழுதியிருந்தீர்கள்
மாரிச்செல்வம்
Dear Jeyamohan
COVID19 lockdown has brought video conferencing and remote meetings a “virtual reality”. Sometimes I work in the deck watching blue birds, cardinals, woodpeckers, sparrows, black birds and squirrels running around on the oak trees and magnolia. Even though, I have enjoyed the nature around the house, now everything looks special and brings peace.
I have not started “Kal poru siru noorai” yet. I couldn’t believe myself that I must catch up with so many chapters. May be the sad episodes including Bhishma’ s departure has put me into a temporary pause. Just few weeks ago I have started reading your short stories.
Very interesting on different themes and levels. I like little Ananthan’s world. The story on “Kalam Azhithal” was very fascinating, to read about the unique festival based on “Devi Mahatmiyam”. I remembered you mentioned last year that you have a plan to write about the festivals in India.
Yesterday I read the story about little Ananthan and his father attending a wedding. Two inferences reminded me of my dad who is a connoisseur of music and fine dining. The description where Ananthan’s father eats slowly and has a rhythmic pattern of selecting the dishes without mixing and in proper combination was exactly like my father! Thyagaraja krithis you have mentioned are my dad’s favorite ones too! You brought many nostalgic memories.
The beautiful scenery around your house and the mentioning of the tireless government workers who collect data are touching. Hopefully, the intervention of COVID19 will be over soon. Please take care.
Thanks for tirelessly churning out beautiful stories.
Warm regards
Sobana Iyengar
லூப் [சிறுகதை]
அன்புள்ள ஆசிரியருக்கு,
லூப் சிறுகதை. கதையின் ஆரம்பத்திலிருந்து முடிவதற்கு சற்றுமுன்வரை வெடித்து சிரிக்கவே சரியாக இருந்தது. நான் மின் பராமரிப்புத் துறையில் கதையில் சொல்லப்படும் தொலைபேசித் தகராறுகளை நேரடியாக உணர்ந்தவன் வேலையும் செய்திருக்கிறேன் அதனால் லூப் தரும் வாசிப்பனுபவம் வாழ்வனுபவமாகவே என்னுள் மாறிவிட்டிருந்தது.
ஞானம் சாரின் மேற்பார்வையாளருக்குரிய குணம் பேச்சில் வெளிப்படும் போதெல்லாம் ஆரோக்கியம் அவரை எளிதாக தட்டிச் செல்லும் பகுதிகள் பராமரிப்பு வேலையின்போது இயல்பாக நடக்கும் ஒன்று. நெல்சன், ஆரோக்கியம், ஞானம் என வரும் எல்லா கதாபாத்திரங்களுமே கர்த்தரை தன் சக ஊழியராக கருதி பேச்சில் கொண்டு வரும் தருணங்களை சிரிப்பும் ஆச்சர்யமுமாய் கடந்தேன்.
ஞானம் துரையிடம் அந்த பாம்புக்காக வெடிக்கும்போது அவரது அந்த எளிய ஜீவகாருண்யம் மனசை என்னவோ செய்தது. ஆனாலும் உள்ளூர ஏன் பணி நிமித்தம் பாம்பை கொல்லாது இந்த முடிவுக்கு அவ்வளவு கஷ்டப்பட்ட போதும் வந்தனர்? என்ற கேள்விக்கு காடும் அதன் ஜீவராசிகளுக்குமான முக்கியத்துவம் முன்னின்றது இயேசுவுக்கும் மேலே என்றுதான் தோன்றியது.
காலமாற்றம் காடுகளை அழித்து கல்லூரிகள் வந்தாலும் ஆரோக்கியத்துக்கு அவரின் பதற்றம் கடைசிவரையில் இருந்து கொண்டேதானிருக்கிறது.
நன்றி!
கண்ணன்
கோவை.
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்
லூப் கதை மிக அருமை. சத்தியகிறிஸ்தியானியான ஞானம், அவரது வேதத்தில் சாத்தானென்று சொல்லப்பட்டிருக்கும் பாம்பையும் ரட்சிக்கிறார். அவர் துரையிடம் ”ஆமாலே, அதுவும் சேர்ந்துதான் போனு” என்னும் போது கல்பொருசிறுநுரையில் தென்னகத்துப்பாணன் தனக்கு உணவளித்த மூதாட்டியின் வயிற்றனலை அணைக்க வான் நோக்கி ‘” வீழ்க மாமழை வீழ்க மாமழை’” என கூவுவதை வாசிக்கையில் உணர்ந்ததுபோல உடல் மெய்ப்பு கண்டது..
அவர் தன் தொழிலுக்கும் தனது வேதத்துக்கும் தன் தேவனுக்கு மட்டுமல்லாது சகலஜீவராசிகளுக்குமே விசுவாசமாயிருக்கிற சத்தியகிறிஸ்தியானியேதான். உடன் பணி புரியும் கீழ்மட்ட ஊழியர்களுடனான அவரது நெருக்கமும் அப்படியே. பணிப்படிநிலைகள் பாராது இருக்கும் அந்த நட்பையும் அத்தனை சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள். கல்லூரியில் அலுவலக மேலதிகாரி ஒருவரிடம் தள்ளி நின்று ஃபைலில் கையெழுத்து வாங்கும் ஒரு கடைநிலை ஊழியர் மாலை கல்லூரி முடிந்தபின்னர் அவரது தோளில் கை போட்டுக்கொண்டு மதுவருந்த செல்லுவதைப் பார்த்திருக்கிறேன்
தினம் நீங்கள் காட்டும் கதைமாந்தர்கள், புதியவர்களென அறிமுகமாகி, இப்போது மிக நெருங்கினவர்களாகி விட்டிருக்கின்றனர். சமூக விலகலில் வீட்டு வாசல் தாண்டாமலிருக்கையில் உங்களின் கதைகள் வாயிலாக இதுவரை பார்த்தறியாத பணிச்சூழல்களிலும் ரிசர்வ் காடுகளுக்குள்ளும் அம்பலங்களுக்கும் பழைய தரவாட்டு வீடுகளுக்கும் கல்யாண விருந்துக்குமாக போய்க்கொண்டிருக்கிறோம்.
நன்றி
அன்புடன்
லோகமாதேவி