தளத்தை ஆடியோ வடிவில் கேட்க

தளத்தை ஆடியோ வடிவில் கேட்க

பயணத்தின்போது , அல்லது ஒலிவடிவில் கேட்க நினைப்பவர்களுக்கு உதவும், ஆண்டாய்ட் மொபைல் பயனாளர்களுக்காக ,அல்லது வயதாகிப்போன பழம்பெரும் வாசகர்களுக்காக :)

விழித்திறன் குறைந்தோருக்கு மிகவும் உதவும் .

நம் தளத்தை (அல்லது எந்த இணைய பக்கத்தையும்) மிக சுலபமாக ஒலி வடிவில் மாற்றி கேட்கலாம் , மொழிபெயர்த்தும் கேட்கலாம்.

குறித்த பக்கத்தை உங்கள் மொபைலின் குரோம் பிரவ்சரில் திறந்துகொள்க ,

ஓகே கூகுள் என கூகுள் அசிஸ்டெண்டை அழைக்கவும் அல்லது செண்டர் பட்டனை அழுத்தி கூகுள் அசிஸ்டெண்டை திறக்கவும் ,

அதில் read this page என சொல்லவும் அல்லது டைப்பவும் ,இப்போது கூகுள் படிக்கத்துவங்கும் , வேகத்தை கூட்டலாம் குறைக்கலாம் ,

மேலே உள்ள மூன்று புள்ளிகளை தொட்டு எந்த மொழிக்கும் மாற்றம் செய்தும் கேட்கலாம் ,

 

விளக்க வீடியோ

 

1.தமிழை நிறுத்தி -இலக்கணத்துடன் வாசிக்கிறது ,நிறுத்தற்குறிகளை புரிந்துகொள்கிறது .

2.தமிழில் இருந்து சிறப்பாக ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கிறது ,எவ்வளவு சிறப்பாக எனில் நாகர்கோவில் தமிழின் வார்த்தைகளைக்கூட புரிந்துகொண்டு .

// ஏலே, செத்த சவமே, லைனைப் பாருலேண்ணாக்க”

“சார், நான் சத்தியமாட்டு சொல்லுதேன். லைன் கிளிகிளியராக்கும். ஒரு தும்பு தூசி இல்லை பாத்துக்கிடுங்க. மணிமணியா சத்தம் கேக்குது. நெல்சன் அந்தால போனிலே இருக்கான். விளிச்சு பாக்குதியளா?”//

3.மொழிகளுக்கிடையேயான பாலம் கிட்டத்தட்ட அமைந்துவிட்டது எனலாம் . எந்த மொழியில் இருந்தும் நீங்கள் மொழிபெயர்த்து படிக்க/கேட்கலாம்.

 

ஏற்கனவே வாசக நண்பர் ஆடியோ சிவா இலக்கிய ஒலி எனும் யூடியூப் சேனலில் ஏராளமான தமிழ் கதைகளை ஆடியோ வடிவில் வெளியிடுகிறார் ,

 

https://www.youtube.com/channel/UCSwGAn-PB8yu4tAUuwuig4Q

 

அன்புடன்

அரங்கா

முந்தைய கட்டுரைகுருவி [சிறுகதை]
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–29