அன்புள்ள நண்பர்களுக்கு,

 

இன்று மாலை நிகழ்வதாக இருந்த காணொளி உரையாடல் நிகழவில்லை. தொழில்நுட்பச் சிக்கல். இணையத்தில் திரள் அதிகமாகிவிட்டது என்றார்கள். என் கணிப்பொறியின் ஓசையும் சரியில்லை என்றனர். என்ன காரணம் என்று தெரியவில்லை. இத்தகைய அதிநவீன செயல்பாடுகளுக்குரிய புதிய, நவீன கணிப்பொறிகளும் கேட்புகருவிகளும் என்னிடம் இல்லை என்பதும் காரணமாக இருக்கலாம். இது எனக்கு சரிவராது. தேவையற்ற எரிச்சல்தான் மிஞ்சும்.

 

சிலருடைய பொழுதை சற்றுநேரம் வீணாக்க நேர்ந்தமைக்கு வருந்துகிறேன். சுவரோவியம் வரையும் கலைஞனைப் பற்றிய எளிய, இனிய கதை ஒன்றை எழுதிக்கொண்டிருந்தேன். அதற்கே திரும்புகிறேன். அங்கிருப்பதே இயல்பானதாக, இனிதானதாக இருக்கிறது.

 

ஜெ