குக்கூ- உரையாடல் அறிவிப்பு

தர்க்கவயப்பட்ட இலக்கியச்சூழலிலிருந்து தனித்துவிலகி, அழகியல் நேர்மறையோடு உள்ளடக்கப் பொருண்மையும் நிறைகலந்து வெளிப்படுபவை எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புகள். இந்திய தேசத்தின் தொன்மானுட மனங்களுக்குள் உள்ளுறைகிற ஞானவிசையை, கலாச்சார மரபின் தரிசனமாகக் கண்டடைந்து எழுத்துப்படுத்தியவர். உண்மைசார்ந்த உரையாடலின்மீது தீராத நம்பிக்கையுற்றிருந்த சுந்தர ராமசாமி அவர்களின் இலக்கிய குருமரபிலிருந்து எழுந்துகிளம்பி, அறிவுண்மை சார்ந்த எல்லா தளங்களிலும் இயங்கும் சமகால இளைஞர்களோடு தொடர்ந்து உரையாடி வருபவர். இலக்கியத்தின்வழி இருதயங்களின் மென்னுணர்வில் அகமலர்தலையும் உளவெழுச்சியையும் உருவாக்கி, பின்தொடரும் மனிதர்கள் தங்கள் தன்னறத்தை அடையத் துணைநிற்பவர்.

 

 

வரும் புதன்கிழமை (8.4.20) மாலை        5 மணிக்கு  இணையத்தின் வழியே கலந்துரையாடல்..

நிகழ்வில் கலந்து கொள்ள கீழ்கண்ட படிவத்தை நிரப்பவும்…

முந்தைய கட்டுரைபெயர்நூறான் [சிறுகதை]
அடுத்த கட்டுரைகுக்கூ- ஆளுமைகளுடன் உரையாடல்கள்