வாப்பாவின் பீயாத்து

 

ஆமின தாத்தயிடெ பொன்னுமோளாணு

நாட்டிலே சேலுள்ள பெண்ணாணு

பாப்படேபுன்னார மோளாணு

பாப்படே கொச்சு பீயாத்தூ

கரிமீன் பிடய்க்கண கண்ணாணு

கவித துடிக்கண கண்ணாணு

கரளிலு முந்திரி சாறு நிறைக்கண

அழகின்றே பொன்னொளி முத்தாணு

 

ஆமினா பாட்டியின் பொன்னான மகள் அல்லவா

ஊரில் அழகான பெண்அல்லவா

வாப்பாவின் செல்ல மகள்அல்லவா

வாப்பாவின் சின்ன  பீயாத்து

 

கரிமீன் துள்ளும் கண்அல்லவா

கவிதை துடிக்கும் கண்அல்லவா

நெஞ்சில் முந்திரிச் சாறு நிறைக்கும்

அழகின் பொன்னொளி முத்தல்லவா

 

[பீயாத்து பாத்திமா என்பதன் கிராமத்துச் செல்ல உச்சரிப்பு]

முந்தைய கட்டுரைசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇன்றைய மலர்