விலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்

 

விலங்கு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

விலங்கு கதையை நான் முதலில் வாசித்தபோது அந்த பூசாரி ஒடியாக இருந்தார் என்று ஊகித்துவிட்டேன். ஆகா ஊகித்துவிட்டேன் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் மறுபடியும் கதையைப் பார்க்கையில்தான் ஒன்று தெரிந்தது. அவர் மானிடனாக இருந்து ஆடாக ஒடி செய்து திரும்பி வந்த பூசாரி அல்ல. அப்படி நான் நினைத்தது தப்பு. அவர் செங்கிடாய்க்காரன் என்ற தெய்வம்தான். செங்கிடாய்க்காரனின் காது மட்டும் அவர் மனிதனாக வந்தபின்னரும் அப்படியே இருக்கிறது. மனிதன் விலங்காக் ஆகிறான். தெய்வம் மனிதனாக ஆகிறது

 

மகேஷ்

 

விலங்கு இக்கதையை தங்களின் பேய்கள் தேவர்கள் நரகர்கள் என்ற தொகுப்பில் வரும் கதைகளுக்கு ஒப்பாக சொல்லலாம் எருமையின் குழம்பு கொண்ட எச்சி கதைகளையும் நீங்கள் எழுதி இருக்கிறீர்கள். தீமையின் உருவாகவும் இறையின் வடிவமாகவும் இந்த உருவங்கள் மதிக்கப்படுகிறது துஷ்ட வடிவாக வரும் போது அதற்கு எதிராக மனிதன் தன்னை ஒப்பு கொடுத்து கொண்டு  வழிபட தொடங்குகிறான்.

 

உலகம் முழுவதுமே இதுபோன்ற நம்பிக்கைகள் பரவி கிடந்து இருக்கிறது பல்வேறு நாடுகளில் ஒருமாதமாக கூட பின்பற்றுகிறார்கள் இயற்கையோடு தொடர்பு கொள்வதற்கான ஒரு வழியாக இதை கருதுகிறார்கள். இந்திய இந்து மரபில் கூட பல்வேறு தெய்வங்கள் ஒடீ வித்தைவடிவில் அருள்கிறார்கள் வாராகம், மச்ச அவதாரம், நரசிம்மர் கருடர் என்று பல இருக்கிறது விலங்குகளின் சக்திகளை தெய்வமாக வழிபடும் முறை நமது தொன்மங்களிலும் இருந்து வந்திருக்கிறது.

 

” குருதையிலே வேகமா. ஆனையிலே பெலமா”

 

என்று கதையில் இதைதே குறியீட்டுக் காட்டுவது  என நினைக்கிறேன்.

“இங்க ஒவ்வொண்ணும் இன்னொண்ணா ஆயிட்டே இருக்கு…”

என்னும் வரி மண்ணில் ஒவ்வொரு உயிரிலும் இதுவே நிகழ்கிறது. எளிமையான அமானுஷ்ய கதையாக தோன்றினாலும் மிக ஆழமான குறியீட்டு படிமங்களை கொண்ட கதை . ஆனால் இக்கதையில் முன் கூட்டியே கணிக்கக் கூடியது  நிகழ்ந்திருக்கிறது இறுதியில் அந்தப் பெரியவர் செங்கிடாயாக  மாறித்தான் கதை முடியும் என்பது கதையின் மத்தியிலேயே தெரிந்துவிடுகிறது மற்றபடி மிகச் சிறந்த கதையாக இது நினைக்கிறேன்.

 

 

ஏழுமலை.

 

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, ‘

 

தவளையும் இளவரசனும்- மெல்லிய காதல் கதை. உரையாடல் மூலமே நகரும் கதை. உரையாடல்களை பிரதானமாக் கொண்ட கதைகள், வாசிப்பின் வேகத்தை அதிகரிப்பவையாகத் தோன்றுகிறது
.
கதைகயை வாசித்து முடித்தபின் ஒரு விளையாடட்டுச் சிந்தினை. கொய்யா, யாதேவி சீரிஸ், தவளையும் இளவரசனும் கதையின் நாயகிகள் ஒருவரே பல வேடங்களில் வருகின்றனர்.
அருமையான கதை. 🥰
நன்றி
பலராம கிருஷ்ணன்

அன்புள்ள ஜெ

 

தவளையும் இளவரசனும் உற்சாகமான கதை. இங்கே காதல் என எழுதப்பட்டிருக்கும் கதைகளில் ஒரு விஷயத்தைப் பார்க்கலாம். எதிர்பாலினத்திற்கு தன்னுடைய ஒரே ரசனையும் ஒரே பார்வையும் இருந்ததனால் காதல் வந்தது என்று எழுதியிருப்பார்கள். அது காதல் அல்ல, கல்யாண ஆசை. காதல் என்பது ஒரு பறந்து அப்பால் செல்லும் அனுபவம். அது எல்லைமீறவே ஆசைப்படும். மகரந்தங்கள் காற்றில் பறந்து போவதுபோலத்தான் இயற்கையே அமைத்திருக்கிறது. அதுதான் காதல்

 

எல்லா எல்லையையும் மீறி வரும் காதலை அழகாகச் சொன்ன கதை அது

 

ராஜன்

முந்தைய கட்டுரைபொலிவதும் கலைவதும்,சுற்று -கடிதங்கள்
அடுத்த கட்டுரைலூப் [சிறுகதை]