தேவதேவனுக்கு ஓர் இணையதளம்

கவிஞர் தேவதேவன் என்றும் என் ஆதர்ச இலக்கியவாதி. தனிப்பட்டமுறையில் அவரையும் பாரதியையும் மட்டுமே கடந்த நூறாண்டுக்கால தமிழிலக்கியம் உருவாக்கிய பெருங்கவிஞர்களாக கருதுகிறேன். பித்தும் பேரருளும் முயங்கும் அவரது கவியுலகம் போல மானுட இருப்பின் மகத்தான கொண்டாட்டத்தையும் அழியாத துயரத்தையும் சொன்ன இன்னொரு கவிஞர் நம் மரபில் இல்லை.

தேவதேவனுக்காக நண்பர்கள் ஒரு இணையதளத்தை உருவாக்கியிருக்கிறார்கள். படிப்படியாக அவரது கவிதைகள், கவிதை பற்றிய விவாதங்கள், புகைப்படங்கள் அதில் இடம்பெறும்

http://poetdevadevan.blogspot.com/