ரமீஸ் பிலாலி – கத்திரி பாபா முக்கியமான கதை. கதையில் எனக்கு தோன்றிய குறை விளையாட்டுத்தனமாகச் சொல்லும் போக்கு அவ்வளவு இயல்பாக இல்லை என்பது. விதவிதமான சித்தரிப்புகள் வழியாகச் செல்லும் கதை கடைசிவரியில் எழும் இடம் அழகாக வந்திருக்கிறது.
கொஞ்சம் எழுதித்தேய்ந்த கருதான். வ்றுமையின் நெரடியான சித்திரங்களை முற்போக்கு எழுத்து நிறையவே உருவாக்கிவிட்டது, வண்ணநிலவன் கதைகளை நினவுபடுத்தும் கூறுமுறை.
ஆனாலும் அந்தக் குணச்சித்திரம் துல்லியமாக இருந்தது. ஆசாரி பட்டினியில் காசுக்கு ஏங்கி இருக்கும் போது பலகாலத்துக்கு முன்னர் மனைவியை பெண்பார்க்கச்சென்று மணம் செய்துகொண்டதை நினைவுகூர்வது கதைக்கு ஓர் நமபகமான நுட்பத்தை அளிக்கிறது. அந்தக்காரணத்தாலேயே முக்கியமான கதை
கிட்டத்தட்ட காகத்தின் அலகு மாதிரி அந்த குடை என்று தோன்றியது