சர்வ ஃபூதேஷு கடிதங்கள்-5

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

சர்வ பூதேஷு கதையை வாசிக்கையில் யாதேவி கதையை பலமுறை வாசித்ததுபோல ஓர் உணர்வு. நான் இரண்டு முறைதான் வாசித்தேன். ஆனால் கடிதங்களை வாசித்தபோது ஒவ்வொரு முறையும் கதையை ஞாபகத்தில் ஓட்டிக்கொண்டே இருந்தேன். ஆகவே சர்வஃ பூதேஷு கதையை வாசிக்கையில் எல்லா ஆன்ஸெலும் அந்த கதை நடக்கும் சூழலும் எனக்கு மிகமிக நெருக்கமானவையாக ஆகிவிட்டிருந்தன. என்னால் அந்தச் சூழலிலேயே வாழமுடிந்தது

 

இந்தக்கதையின் தலைப்பு சர்வ ஃபூதேஷு . அனைத்து உலகங்களிலும் என்று பொருள். உலகம் முழுக்க என்றும் பொருள். உலகமாகியவள் என்று பொருள் கொள்ளலாம். அதை விட பொருத்தமான பொருள். பூமி என்பது. நிலம். ஃபூதேவி. ஏழு சிலுவையில் அறையப்பட்டு விழுந்தபோது அன்னை மண்போல அவளை தாங்கிக்கொண்டாள். வியாகூல மாதாவின் பெரும்பாலான சிலைகளிள் அன்னை ஏசுவை மடியில் தாங்கியிருப்பாள். அவளுடைய அங்கி பரவி மண்ணாக மாறிவிட்டிருக்கும்.

 

இந்த பூமியே ஆனவளே என்ற அர்த்தம்தான் இந்தக்கதைக்கு பொருத்தமானதாக உள்ளது.

 

எம் கோபாலன்

 

ஜெ,

 

“ஒரு பானையில் அருவிபோல நீர் விழுந்துகொண்டே இருக்கிறது. அதில் நீர் நுழைவதை தடுக்க அருவியை நிறுத்தமுடியுமா என்ன? அந்தப் பானையை கவிழ்த்து வைப்பதுதானே நல்லது?” என்று ஸ்ரீதரன் சொல்கிறான். அவனுடைய நோய் சிகிச்சை முறை அது. முன்பு எல்லாவிடம் பேசும்போதும் நோயிiன் காரணம் எல்லாம் தெரிந்துகொள்ள முடியாது, காலை மட்டும்தான் தொடமுடியும் என்று சொல்கிறான்

 

ஆனால் இந்த வரியை வாசிக்கும்போது எனக்குத் தோன்றியது அவன் மாத்தனை அப்படி கவிழ்த்து வைக்கவில்லை. எல்லாவின் அன்புக்கு முன் நிறையும்படி வைத்துவிட்டான் என்று

 

எஸ்,ராமச்சந்திரன்

அன்புள்ள ஜெ

 

நான் முதலில் வாசித்தபோது அந்த மேரிமாதா உருவகம் எனக்குப் பிடிகிடைக்கவில்லை. சிலுவையில் ஏறி உயிர்விட்ட ஏசுவை மடியில் அமர்த்தி அழும் மேரிமாதாவின் வடிவம் அது என்பது புரிந்ததும் கதையே வேறுமாதிரி ஆகிவிட்டது

 

சிலுவையில் ஏறியவள் அவள். இங்கே மேரியை சிலுவையில் ஏற்றிவிட்டோம். இந்தப் பாவிகளை மன்னியும், இவர்கள் செய்வது என்ன என்று இவர்களுக்குத் தெரியாது என்று அவள் சொல்கிறாள்

 

சுவாமி

 

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்-5

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 4

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 3

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 2

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 1

முந்தைய கட்டுரைஈரோடு சந்திப்பு கடிதங்கள்-5
அடுத்த கட்டுரைகோவிட்- கதை- கடிதம்