கோவிட்- கதை- கடிதம்

 

ஐந்தாவது மருந்து [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

கோவிட் வைரஸ் உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் வழியாகா தற்செயலாக உங்கள் கதையை கண்டுபிடித்தேன். ஐந்தாவது மருந்து ஒரு சிக்கலான கதை. சாதாரணமான அறிவியல்புனைகதை பாணியில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அது எழுப்பும் கேள்வி சிக்கலானது. அதாவது மனிதகுலம் இயற்கையுடன் போராடவேண்டுமா வேண்டாமா? வேண்டாம் என்று சொல்லலாம், கடைசியாக இயற்கைதான் ஜெயிக்கும். ஆனால் போராடியதனால்தானே இங்கே வாழ்க்கையே உருவாகியிருக்கிறது

 

இதேகதையை சுற்றுச்சூழல் சார்ந்தும் சொல்லலாம். விவசாயம் செய்யலாமா? நீர்ப்பாசனத்திட்டங்களைச் செய்யலாமா?எல்லாமே மேலும் மேலும் என வளர்பவை. ஆகவே அழிவைக் கொண்டுவருபவை. சரி, வேறு வழி என்ன?

 

இந்தக்கதையை சித்தமருத்துவத்தின் சிறப்பை குறிக்கும் கதை என நண்பர் எனக்குப் பரிந்துரை செய்தார். நான் அதெல்லாம் ஒரு அறிவியல்புனைகதையின் பாவனைகள்தான் என்றுசொன்னேன். அதிலுள்ள புனைவுக்கு அந்த கண்டுபிடிப்பு, அந்தக்கிராமம், சித்தவைத்தியச் செய்திகள் போன்றவை எல்லாம் வெறும் கட்டுமானப்பொருட்கள். முக்கியமான மையம் என்பது போராடுவதா ஒத்துப்போவதா என்பது. அதற்கு பதில் சொல்லாமல் அப்படியே விட்டுவிடுகிறது அந்தக்கதை என்பதுதான் அதன் நுட்பம் என்றேன்

ஹரிகுமார்.வி

முந்தைய கட்டுரைசர்வ ஃபூதேஷு கடிதங்கள்-5
அடுத்த கட்டுரைவைரஸ் அரசியல்