அவரவர் ஒளி

விலகிச் செல்லும் பாதை

பார்வை என்னும்  ஒரு சொல்லில் இருந்து  வெவ்வேறு கருத்துநிலைகளாகக் கிளைபிரிந்து செல்லும் கதை சு.வேணுகோபால் எழுதிய விலகிச் செல்லும் பாதை.    எது இருள், எது ஒளி என்னும் வினாக்களை இயல்பாக எழுப்பிக்கொண்டே செல்கிறது. ஒவ்வொருவரும் அவர்கள் வாழும் உலகை அவர்களின் அகத்தால் உருவாக்கிக் கொள்கிறார்கள். ஒளியோ இருளோ. துன்பமோ இன்பமோ. தீதும் நன்றும் பிறர்தர வாரா

சுவே
சு.வேணுகோபால்

சு.வேணுகோபாலின் கதைகள் ஒரு கதைமாந்தரே கதைசொல்லியென ஆகும் இயல்பு கொண்டவை. அக்கதைசொல்லிக் கதைமாந்தரின் அகம் இயல்பாக அவர்களின் மொழியிலேயே வெளிப்படுபவை. அவர்களின் கொந்தளிப்பு குழப்பம் தேடல் கண்டடைதல் என விரிபவை. அவ்வகையில் அமைந்த இக்கதை அவருடைய மிகச்சிறந்த படைப்புக்களில் ஒன்று

சு.வேணுகோபால் தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைகவிஞனின் கைக்குறிப்புகள்
அடுத்த கட்டுரைகோடை மழை