குரு நித்யா ஆய்வரங்கம், ஊட்டி- 2020 அறிவிப்பு

 

ஊட்டியில் ஆண்டுதோறும் நிகழும் குரு நித்யா இலக்கிய முகாம் முடிவு செய்யப்பட்டுள்ளது

 

நாள் MAY 1, 2, 3 [வெள்ளி சனி ஞாயிறு]

 

இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவருவது இந்த இலக்கிய முமாம். இலக்கியம் குறித்த அறிமுகம்- உரையாடல் என்பது இதன் நோக்கம். நட்பார்ந்த ஒரு சூழலில் இலக்கியத்தை பயில்வது இது. பெரிதும் இளம் வாசகர்களுக்கு என இலக்குகொள்ளப்பட்டது. இலக்கியவாசகர்கள் இதில் பங்குகொள்ளலாம்.

 

பங்கேற்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் தங்களை பதிவுசெய்துகொள்ளவேண்டும். அவர்களின் பங்கேற்பு குறித்து முறைப்படித் தெரிவிக்கப்படும்.

 

இந்நிகழ்வு சில உறுதியான நெறிகளை வலியுறுத்துகிறது.

 

அ. நிகழ்வில் அரங்கிலும் வெளியிலும் மது அருந்த ஒப்புதல் இல்லை.

ஆ. வெளியே தங்க இயலாது

இ. அனைத்து அமர்வுகளிலும் உறுதியாக பங்கேற்கவேண்டும்

ஈ. அழைக்கப்படாத எவரும் பங்கேற்க இயலாது

உ. தனிப்பட்டமுறையிலான தாக்குதல்களுக்கு இடமில்லை.

எ. செலவுகள் பகிர்ந்துகொள்ளப்படும் – மேலதிக நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன

 

இந்நெறிகள் இந்த அரங்கு முறையாக நிகழ்வதற்குரியவையாக வகுக்கப்பட்டவை. இது இத்தனை ஆண்டுகள் நிகழ்வதற்கும் இதுவே அடிப்படை.

 

அனைவருக்கும் நல்வரவு

 

படிவம் இணைப்பு

 


ஊட்டி குருநித்யா ஆய்வரங்கு- மீண்டும் ஒரு நினைவுத் தொகுப்பு

ஊட்டி- எண்ணங்கள், திட்டங்கள்.

 

முந்தைய கட்டுரைபாலசுப்ரமணியம் முத்துசாமி பேட்டி
அடுத்த கட்டுரைபத்து ஆசிரியர்கள்-1 பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]