விடைபெறுகிறோம்- வினவு

 

ன்பார்ந்த வாசகர்களே, தோழர்களே

நேற்று (24-02-2020) தோழர்கள் மருதையன், நாதன் ஆகியோரது விலகல் கடிதத்தை வெளியிட்டிருந்தோம். வினவு ஆசிரியர் குழு அவ்வாறு வெளியிட்டதற்கு முழுப் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறது. இதன் பொருட்டு அமைப்பின் தலைமை எங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமானால் அதனை எதிர்கொள்கிறோம்.

வினவு தளத்தில் பன்னிரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம். அமைப்பு சார்புள்ள தளங்கள், தோல்வியுறும் சூழலில், வினவு ஒப்பீட்டளவில் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழ் இணையச் சூழலில் வினவு தளம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை இங்கே விரித்துக் கூற விரும்பவில்லை.

vinavu-sliderஇன்று அமைப்பின் முகமாக அறியப்படும் வினவு தளம், 12 ஆண்டுகளுக்கு முன் ஓரிரு தோழர்களின் சொந்த முயற்சியில் ஒரு வலைப்பூவாக தொடங்கப்பட்டது. இதற்காகப் பணியாற்றிய தோழர்களின் முயற்சியின் வழியே, வினவு ஒரு இணைய தளமாக வளர்ந்தது.

நாங்கள் அமைப்புக்கு நிதிச்சுமையைக் கூட அளிக்காமல் சுயசார்பாகவும் வாசகர்களைச் சார்ந்துமே இயங்கி வந்திருக்கிறோம். கடந்த 12 ஆண்டுகளில், அமைப்புக்கும் சமூகத்துக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கிறோம்.

இனிமேலும், இந்த தளத்தை இயக்கவோ, இதன் ஆசிரியர் குழுவாகப் பணியாற்றவோ நாங்கள் விரும்பவில்லை. ஆசிரியர் குழு பொறுப்பிலிருந்து நான்கு தோழர்களும் விலகுகிறோம்.

உரிய தோழர்கள் வந்தால், தளத்தை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறோம்.

இதுவரை எம்மை ஆதரித்த வாசகர்களுக்கும், தோழர்களுக்கும் நன்றி.

விடைபெறுகிறோம், வாசகர்களே!

வினவு ஆசிரியர் குழு.

முந்தைய கட்டுரைசெயல்
அடுத்த கட்டுரைஅமைப்பிலிருந்து விலகுகிறோம் ! – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு