மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை

 

தேவசகாயம் பிள்ளை

தென் திருவிதாங்கூரின் கிறித்தவ ரத்தசாட்சி தேவசகாயம்பிள்ளை அவர்களை கத்தோலிக்கத் திருச்சபை புனிதராக அறிவித்திருக்கிறது. நெடுங்காலமாக இதற்கான ஏற்பாடுகள் நடந்துவந்தன. இப்போதுதான் அம்முயற்சி நிறைவுபெற்றுள்ளது

 

என் அம்மாவின் சொந்த ஊரான நட்டாலத்தில் ஒரு தொன்மையான நாயர்குடியில் பிறந்தவர் நீலகண்டபிள்ளை. கிறித்தவராக மாறியமையால் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்று தொன்மங்கள் சொல்கின்றன. அன்று கத்தோலிக்கரான காப்டன் பெனடெக்ட் டி லென்னாய் திருவிதாங்கூரின் தலைமை படைத்தளபதி. நீலகண்டபிள்ளை அவரால் மதமாற்றம் செய்யப்பட்டார் என்றும் அன்றிருந்த அரசியல் துருவமோதல்களின் பலி என்றும் சொல்லப்படுகிறது

அவருடைய புனித இடங்கள் இரண்டு. புலியூர்குறிச்சி அருகே உள்ள முட்டிடிச்சான் பாறை, ஆரல்வாய்மொழி அருகே உள்ள மணியடிச்சான்பாறை. முட்டிடிச்சான் பாறையில் அவர் சிறைவைக்கப்பட்டிருந்தார் என்றும், மணியடிச்சான் பாறையில் அவர் கொல்லப்பட்டார் என்றும் கத்தோலிக்க நம்பிக்கை.

 

முட்டிடிச்சான் பாறையில் அவர் சிறையில் இருந்தபோது குடிநீருக்காக ஏங்கு தன் முழங்காலால் பாறையை அறைய அவ்விடம் குழிந்து ஊற்றுநீர் தோன்றியது என்கிறார்கள். அவர் கொல்லப்பட்டபோது ஒரு பாறை பிளந்து விழுந்து மணியோசை எழுப்பியதாம். இவற்றில் மணியடிச்சான் பாறைப்பகுதி அழகிய அமைதியான இடம். நான் அடிக்கடி செல்வது.முட்டிடிச்சான் பாறை முன்பு அழகான சிறிய குருசடியாக இருந்தது. இன்று கான்கிரீட் கட்டிடமாக ஆகிவிட்டது,

முட்டிடிச்சான் பாறை, புலியூர்க்குறிச்சி

 

தேவசகாயம்பிள்ளை அவர்களின் வரலாறு தமிழிலும் மலையாளத்திலும் குறுங்காவியங்களாகவும் நாட்டார் பாடல்களாகவும் தெருக்கூத்து நாடகமாகவும் உள்ளது. இலங்கையிலும் தெருக்கூத்து வடிவம் ஒன்று உள்ளது என்கிறார்கள். தேவசகாயம்பிள்ளைக் கூத்தின் மிகமிகப் பழைய அச்சுவடிவை குறிப்புகளுடன் அ.கா.பெருமாள் அவர்கள் மறுபதிப்பு செய்திருக்கிறார்கள்.

மீண்டும் சந்திக்கும் வரை…

கிறித்தவ இசைப்பாடலாசிரியர்கள்

அ.கா.பெருமாள்:குமரி

இனிப்பு

முந்தைய கட்டுரையா தேவி! – கடிதங்கள்-8
அடுத்த கட்டுரைதிராவிட இயக்கம், தலித்தியம்