காந்தி காட்சிகள்

காந்தி டுடே இணையதளத்தில் வெளியாகிக் கொண்டிருக்கும் காகா காலேல்கரின் காந்தி காட்சிகள் மிக அழகான காட்சிகள் கொண்ட ஒரு நூல். எளிய தமிழ். ஒரே வீச்சில் அத்தனை அத்தியாயங்களையும் படித்தேன். இணையம் கைச்சொடுக்கில் கொண்டுவந்து அளிக்கும் நூல்கள் வியப்புக்குரியவை.

காகா காலேல்கர் பிறப்பால் மராட்டியர். காந்தியின் ஆணைப்படி குஜராத்தி கற்றுக்கொண்டு குஜராத்தியில் எழுதி குஜராத்தி நவீன இலக்கியத்தின் தந்தையாக ஆனவர். இந்தி மொழியை பரப்புவதில் வாழ்கையை முழுமை செய்தவர். அவர் எழுதிய ‘ஜீவன் லீலா’ இந்தியாவின் நதிகளைப் பற்றிய ஒரு பயணநூல். ஓர் ஆன்மிகப் பயணம் அது.

காந்தி காட்சிகள்‘ முதலில் இந்தியில் எழுதப்பட்ட நூல். 1942ல்  வேலூர் சிறையில் இருந்தபோது காகா காலேல்கர் சொல்லச்சொல்ல லக்ஷ்மண்ஸிங் சௌகான் எழுதியது. ஆறு ஆண்டுகள் கையெழுத்துப் பிரதியாகவே இருந்து, 1948ல் இந்தியில் வெளியாகி, 1950 ஜனவரியில் ‘தமிழ்நாடு காந்தி நினைவு நிதி மூலம் தமிழ் மொழிபெயர்ப்பு பிரசுரமானது. நூலில் மொழிபெயர்ப்பாளரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இந்த நூல் தொடர் பதிவுகளாக இங்கே வெளியாகவுள்ளது. இப்பதிவில் நூலின் பதிப்புரையும்ஆசிரியரின் முன்னுரையும் தரப்படுகிறது.

காந்தி காட்சிகள் – காகா காலேல்கர்

***

வழிகாட்டியும், பாதசாரிகளும்

கோதையின் மடியில் 4

முந்தைய கட்டுரைமுதுநாவல், ஏழாவது – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஞானி-5