கணக்கு

அ.முத்துலிங்கம்

’கணக்கு பாக்காதே’ என்று ஒரு சொலவடை உண்டு. எங்கெல்லாம் அது சொல்லப்பட்டிருக்கிறது என்று நினைவுகூர்கிறேன். பெரும்பாலும் சாவுவீடுகளில். “சரி இனிமே கணக்குப் பாத்து ஆகவேண்டியது என்ன? எல்லாம் அவன் நினைப்புப்படி….” என்று எவரேனும் சொல்வார்கள்? அதென்ன கணக்கு?

கணக்கு என்னும் சொல் கணிப்பு என்பதிலிருந்து வந்தது. மூலவேர் கண் என்பதாக இருக்கலாம். எண்ணித்தொகுப்பது மட்டும் அல்ல, கூட்டுவது கழிப்பது மட்டும்  அல்ல, கணக்கு என்றால் சென்றதை நினைத்துக்கொள்வது ,வருவதை கற்பனைசெய்துகொள்வது, வேறுவாய்ப்புகளை எண்ணிப்பார்ப்பது, வெவ்வேறுவகையில் நிகழ்த்திக்கொள்வது எல்லாம்தான். கொடுப்பதில் கணக்குபார்க்கக்கூடாது எனப்படும். இழந்ததை கணக்கு வைத்துக்கொள்ளக்கூடாது என்பார்கள்.

ஆனால் எல்லாரிடமும் கணக்கு உண்டு. சிலருக்கே கணக்குகள் பெரும்பாலும் சரியாக அமைகின்றன. ’கணக்கு தப்பிப்போச்சு’ என்ற சொல்லாட்சி ‘கணிப்பு தவறிவிட்டது என்றபொருளிலேயே எப்போதும் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்கள் இறந்தபின் அவர்களின் கணக்குநூல்களை எடுத்துப் பார்த்தால் வேடிக்கையாகத்தான் இருக்கும். மிகப்பெரும்பகுதி பிழையாகப்போன கணக்குகளாகவே இருக்கும் என நினைக்கிறேன்

அ.முத்துலிங்கத்தின் இந்தக் குறிப்பு அவருடைய அப்பாவைப் பற்றியது. கணக்கு பிழையாகப்போன மனிதர் அவருடைய மூத்தவரும் அப்படித்தான். ஆனால் கணக்குகளைப் பற்றி எவர் என்னதான் சொல்லமுடியும்?

ஐயாவின் கணக்குப் புத்தகம்

============================================================================

அ.முத்துலிங்கம் சந்திப்பு
மொழியாக்கம், அ.முத்துலிங்கம், ரிஷான் ஷெரீஃப்
ஊட்டி 2017-அ.முத்துலிங்கம்
அ.முத்துலிங்கம் நேர்காணல்

முந்தைய கட்டுரையா தேவி! – கடிதங்கள்-15
அடுத்த கட்டுரைகல்லூரிகளில் இலக்கியம்