இருகதைகள்

நண்பர் பேசும்போது சமீபத்தில் இணையத்தில் நல்ல சிறுகதைகள் வந்துகோண்டிருப்ப்தாகச் சொன்னார். ஆகவே குழுமத்தில் அவற்றை பரிந்துரைக்கும்படி நண்பர்களிடம் கோரினேன். கிட்டத்தட்ட இருபது பரிந்துரைகள். அவற்றில் உள்ள கதைகளைப்பற்றி என் கருத்துக்களையும் குழுமத்தில் சொல்லியிருக்கிறேன். எழுத முயல்பவர்களுக்கும் அவை உதவலாம்

அவற்றில் எனக்கு மிகப்பிடித்திருந்த இருகதைகள் கீழே

ராசம்

சுருக்கமாகச் சொல்லப்பட்ட கதை. கதைசொல்லியின் ஆளுமை அந்த மொழ்யிலேயே தெரிகிறது. அதிக விவரிப்புகள் இல்லாமல் இயல்பாக ஒரு பெரும் சோகம், தலைமுறைகளாக நீளும் சோகம் சொல்லப்படுகிறது

ஒரு உச்சத்தில் அந்த வட்டாட்டம் பலவிஷயங்களுக்கு குறியீடாக மாறி நிற்கிறது

*

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை

இன்னொருவகையில் சிறப்பான கதை இது

ஒரு அபூர்வமான இசையனுபவத்தை சொற்களில் சொல்லிவிடமுடிகிறது. இசை பற்றி எழுதும்போது இசை இசையாக அல்லாமல் ஒரு குறியீடாக ஆகவேண்டும் – இலக்கியத்தில் எல்லாமே வாழ்க்கைக்கான குறியீடுகள்தான். இசை அகவயமானது என்பதனால் அது எப்போதும் மன உணர்ச்சிகளின் புறவிளக்கமாக நின்றாகவேண்டும் . அபப்டி நிற்க முடிந்த நல்ல கதை

இசை என்பது என்ன என்பதை நுட்பமாக இது மறு வரையறை செய்கிறது. அடிபட்ட மிருகம் தன்னந்தனிமையில் தன்னைநோக்கியே[ அல்லது வானை நோக்கியா? ] உக்கிரமாக ஊளையிட்டுக்கொள்வது போன்ற ஒன்றாக இசையை விளக்குகிறது

ஜெ

முந்தைய கட்டுரைமரங்களின் மைந்தர்கள்
அடுத்த கட்டுரைபெருவலி- மேலும் கடிதங்கள்