பாவம் மேரி

 

ஆலிவர் வெண்டல் ஹோம்ஸின் [சீனியர்]  ‘மேரி ஜோக்ஸ்’ பிரபலம். அமெரிக்க நகைச்சுவைத் துணுக்கு நூல்களில் அவ்வப்போது காணப்படும்

 

மேரி கள்ளம் கபடமற்ற , அப்பழுக்கற்ற தேவதை. மாதிரிக்கு இரண்டு

 

மேரி அழுதபடி ஓடிவந்தாள்

 

“என் ஏஞ்சல், ஏன்டி அழறே?” என்றாள் அம்மா

 

“ஹாரி என் பொம்மையை உடைச்சிட்டான்”

 

“அடப்பாவி… என் செல்லத்தின் பொம்மையை ஏண்டா உடைச்சே?”

 

அடிவிழுகிறது

 

அழுதபடி ஹாரி பேசமுற்பட அம்மா கூவினாள்.

 

பேசாதே கொன்னிடுவேன்…”

 

“என்னடி பண்ணினான் ?”

 

“அப்பா ஹாரி என் பொம்மையை உடைச்சான். அது துண்டாபோச்சு”

 

“டேய், சொன்னா கேக்கமாட்டெ? பேசாதே”

 

மறுபடி அடி

 

அழுகைகள் ஓய்ந்தபின் அப்பா கேட்டார்

 

“எப்டி உடைச்சான் பொம்மைய?”

 

“அவன் தப்பு பண்ணினான். பொம்மையாலே நான் அவனை அடிச்சேன்”

 

இன்னொரு ஜோக்

 

மேரியிடம் ஆசிரியர் சொன்னார். “கோபம் வரக்கூடாது மேரி. கோபம் வந்தா ஒண்ணு ரெண்டு மூணுண்ணு பத்து வரை எண்ணு… கோபம் போயிரும்”

 

மறுநாள் மேரி ஹாரியின் மேல் ஏறி அமர்ந்து கண்மூடி ஏதோ சொல்வதை ஆசிரியர் பார்த்தார்

 

“மேரி, என்ன பண்றே?”

 

“ஒண்ணுரெண்டு எண்ணுறேன்… கோவம் போறதுக்கு”

 

‘அதுக்கு ஏன் அவன் மேலே உக்காந்திட்டிருக்கே?”

 

“இல்லேன்னா அவன் ஓடிருவானே?”

 

. மனுஷ்யபுத்திரனுக்குச் சமர்ப்பணம்

முந்தைய கட்டுரையா தேவி! – கடிதங்கள்-5
அடுத்த கட்டுரைஇலக்கியவிமர்சனத்தில் வன்மம்